மோசேயைக் குறித்த போதனை TEACHING ON MOSES Jeffersonville Indiana U.S.A. 56-05-13 1. உமக்கு நன்றி சகோதரன் நெவில். சரி. காலை வணக்கம் - நண்பர்களே. இது காலையா அல்லது மாலையா என்று சில சமயங்களில் நான் பார்க்க வேண்டியதாய் உள்ளது. நல்லது, இந்த காலை வேளையில் நான் இங்கிருப்பதைக் குறித்து மகிழ்ச்சி கொள்கிறேன். சற்று வெப்பமாய் உள்ளது, நிச்சயமாக ஒரு அன்பு மிக்க வரவேற்பை நான் பெற்றேன். நமக்கு வசந்த காலம் என்பது இனி கிடையாது; இங்கு நமக்கு கோடைக் காலமும் குளிர் காலமும் தான் உண்டு. அப்படித் தானே? எப்படி யாயினும், எல்லாக் காரியங்களும் வேண்டிய வற்றிற்கு மிகுதியாக இருப்பது போன்று தெரிகின்றது. 2. நல்லது, நான் வீட்டை சுத்தம் செய்வதில் ஈடுபட்டி ருந்ததால் தாமதமாக வரும்படி ஆயிற்று. ஆகவே இக்காலையில் எனக்கு சற்று உடம்பு வலி இருந்தது. ஆகவே அதைச் செய்ய நிறைய நேரம் எனக்கு எடுத்தது, ஆனால் ஒரு ஸ்திரீ செய்ய வேண்டிய வேலைகள் இவ்வளவு உள்ளன என்று நான் உணரவேயில்லை. அவர்களுக்கு அவ்வளவு வேலைகள் உள்ளன. அவள் மூன்று பிள்ளை களையும் தயார் படுத்தி பிறகு அவர்களை ஞாயிறு பள்ளிக்கு அனுப்பி, ஓ, என்னே! நான் நினைத்ததை விட செய்ய வேண்டிய காரியங்கள் மிக அதிகமாய் உள்ளன. ஆகவே நான் நினைத்தேன், ''நல்லது இப்பொழுது... ''நான் சுவிசேஷ களத்தை விட்டு கடந்த மாலை வந்து உதவி செய்து கொண்டிருந்தேன். என்னே, அதைச் செய்ய எவ்வளவு பிரயாசப்பட வேண்டியதாயிருக்கிறது. ஹம்! குழந்தையை கவனித்துக் கொள்ள முன் வரும் யாராவது ஒருவருக்கு வாரம் முப்பத்தைந்து டாலர் அளிக்க முன் வந்தேன், யாராலும் அதைச் செய்ய முடிய வில்லை. 3. சில காலத்திற்கு முன்னர் இங்கு ஒரு சிறிய தாளை நான் படிக்க எடுத்தேன். ஒரு வேளை இதற்கும் அதற்கும் சம்பந்தம் இராது. இங்கே கென்டக்கி யிலுள்ள ஒரு அரசியல்வாதியைக் குறித்து அதில் இருந்தது. அந்த நபர் இராணுவத்தில் இரு முறை இருந்து, மூன்று முறை காயப்பட்டு, ஒரு புகழ் வாய்ந்த போர் வீரனாக இருந்தார். அவர் குடி கொண்டிருந்த இடத்தில் இரண்டு சிறு பிள்ளை களுடைய உயிரைக் காப்பாற்றினார், மலைகளுக்கிடையே உள்ள ஒரு சமவெளி யிலிருந்து ஒரு பிள்ளையையும், மற்ற ஏதோ ஒன்றி லிருந்து ஒரு பிள்ளையும் காப்பாற்றினார். இன்னும் மற்ற அநேக காரியங் களையும் அவர் செய்திருந்தார். ஆனால் அவர் செய்தவை யெல்லாம் மறக்கப்பட்டு விட்டது. ஆகவே கடைசியாக நல்லது, தான் தங்கியிருந்த சுற்று வட்டாரத்தை சரியான முறையில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணி, ஒரு பதவிக்காக போட்டி யிட்டார். அவ்வாறு அவர் போட்டியிட்ட போது, ஒரு இலட்சம் மக்களில் ஐந்து வாக்குகள் மாத்திரமே அவர் பெற்றார். ஆகவே அவர் "இங்கு வாழ்வதே மிகவும் ஆபத்தானது'' என்று கூறி அந்த சுற்று வட்டாரத்தை விட்டு குடி பெயரத்தக்கதாக சபையிடம் தனக்கு ஒரு சிறிய துப்பாக்கி கிடைக்குமா என்று கேட்டார், அவர் குடி பெயர்ந்து செல்ல உதவி செய்ய அவருக்கு போதிய நண்பர்கள் இல்லாதிருந்தனர். அது தான் அமெரிக்காவின் நன்றிக் கடன், அப்படித் தானே? அது சரி. அமெரிக்காவில், நீ அதிகமாக காரியங்களைச் செய்தால், இன்னும் அதிகமாகச் செய்ய வேண்டும் என்று எதிர் பார்க்கப் படுகிறது. அதுசரி, உன்னிடத்தில் அதிகமாக எதிர் பார்க்கப் படுகிறது. 4. நல்லது, இக்காலையில் சபையானது எவ்வளவு சுத்தமாகவும், அழகாகவும் காணப்படுகிறது, அதற்காக என்னுடைய பாராட்டுகளைத் தெரிவிக்க விரும்புகிறேன். சரியான காற்றுச் சுழற்சிக்காக அங்கே ஒரு கதவை அவர்கள் வைத்திருப்பதை நான் வரும் போது கவனித்தேன். இதை வைக்கத் தக்கதாக உதவி செய்த, தர்மகர்த்தாக்கள் குழுவிலுள்ள யாராயிருந்தாலும் சரி, உண்மை யாகவே அது அருமையாய் உள்ளது. நிச்சயமாக அது அருமையான, நேர்த்தியான ஒரு காரியமாகும். சகோதரன் ஹால் அதைச் செய்தார் என்று நான் நினைக்கிறேன், நான் தவறாக கூற வில்லை என்று நினைக்கிறேன். அது மிகவும் அருமையான ஒரு பணியாகும். 5. இப்பொழுது, சிறிது தாமதமா யிருக்கிறது, ஆனாலும் பரிசுத்தம் கூட்ட மக்கள் [holiness people) எப்படியுள்ளனர் என்று உங்களுக்குத் தெரியுமா? பாருங்கள், குறிப்பிட்ட நேரம் என்பது அவர்களுக்கு கிடையாது, சகோதரன் ஸ்லாட்டர், சகோதரன் டீக்மான் நமக்கும் அப்படித் தானே? (சகோதரர்களும் மற்றவர்களும் ''இல்லை'' என்று கூறுகின்றனர்- ஆசி] எல்லாக் காரியங்களும் நம்மால் எடுத்துக் கொள்ளும் விதத்தில் தான் உள்ளன. 6. தெற்கில் அருமையான, மகத்தான கூட்டங்கள் நடை பெற்றன. ஆனால் கடந்த சில நாட்களாகத் தான் என்னால் பேச முடிகின்றது. தொடர்ந்து நான்கு மாதங்களாக நான் பிரசங்கித்தேன். ஆதலால் குசுகுசு வென்று மெல்லப் பேசுவதற்குக் கூட போதிய அளவு குரல் எனக்கு இல்லாதிருந்தது. உங்களுக்கு தெரியுமா, எனக்கு தேவைப்படுகிற வற்றை என்னுடைய மனைவியிடம் சைகையின் மூலம் தெரிவிக்க வேண்டியதாயிற்று, அது ஒரு... ஆகவே அதன் பிறகு, நாம் இங்கே கொண்டிருக்கின்ற, வஞ்சிக்கின்ற, மாய்மாலமான சீதோஷ்ண நிலையைக் குறித்து நாம் பார்ப்போ மானால் (என்ன, ஒரு நாள் குளுமையாக இருக்கின்றது, அடுத்த நாள் வெப்பமாக இருக்கிறது. ஆகவே ஒரு பழைய காலத்து காய்ச்சலைப் போன்ற ஒன்று எனக்கு வந்து விட்டது. இரண்டொரு நாட்களுக்கு முன்னர் நான் குணமாகி என் வேலைகளை மறுபடியும் துவக்கினேன். ஆகவே நம்மேல் அவர் பாராட்டின சிறப்பான அன்பிற்காகவும், எல்லா இரக்கங்களுக் காகவும் நம் கர்த்தருக்கு நாம் நன்றியுள்ளவர்களாய் இருக்கிறோம் - அவர் நம் மேல் எவ்வளவு அன்புமிக்கவராய் இருக்கின்றார். அங்கே மகத்தான கூட்டங்கள் நடை பெற்றன. கர்த்தர் நம்மை மிகவுமாய், ஏராளமான ஆசீர்வாதங்களை நம் மீது பொழிந்தார். 7. ஆகவே கடந்த இரவு, ஏறக்குறைய நடு இரவில் சகோதரன் உட்ஸ் அவருடைய வீட்டிற்கு அழைத்துச் சென்றார், அங்கு சகோதரன் ஆர்கன் பிரைட் தொலை பேசியில் சுவிட்சர்லாந்திற்கு வரும்படி என்னை அழைத்தார். ஆகவே, அவ்வளவு பிரயாணம் செய்வது வயதான ஒருவனுக்கு உகந்ததல்ல. 8. ஆகவே, இப்பொழுது நம்முடைய அடுத்த கூட்டம் இன்டியானா போலிசிலுள்ள காடில் கூடாரத்தில் அடுத்த மாதம் பதினொன்றாம் தேதி துவங்கும். பதினொன் றிலிருந்து பதினைந்து முடிய. ஆகவே அதன் பிறகு அங்கிருந்து, மின்னியா போலீஸ்; இன்டியானா போலிஸிலிருந்து மின்னியா போலிஸிற்கு, கிறிஸ்தவ வியாபாரிகள் மக்கள் இருக்கு மிடத்திற்கு. 9. இப்பொழுது, சகோதரன் நெவில் என்னை சந்தித்தார் என்று நினைக்கின்றேன், நேற்றைக் கடந்த முந்தைய தினத்தில் நான் நடத்திய சவ அடக்க ஆராதனையில் சகோ. நெவில் குடும்பத்தினர் மூவர் வந்து எனக்காக பாடல் பாடினதற்காக என் நன்றியை தெரிவிக்க விரும்பினேன். லிட்டிக் [Liddick] குடும்பத்தில் பாடகர்கள் இல்லை. திரு.லிட்டிக் மகிமைக்குச் சென்று விட்டார். ஆகவே நான் சகோதரன் நெவிலைக் கேட்டுக் கொண்டேன். ஆகவே நான் நிச்சயமாக அவருடைய மகன், அவனை இங்கு என்னால் காண இயல வில்லை. அவன் ஒரு வளர்ப்பு மகனாவான் என்று நான் பிறகு கண்டு கொண்டேன். இரட்சிக்கப்படாத தன் தந்தை மரித்துக் கொண்டிருக்கின்றார் என்று அறிந்து என்னை கூப்பிடுவதற்காக என் வீட்டிற்கு ஓடோடி வந்தான், அவன் தந்தை மரிப்பதற்கு முன் இரட்சிப் படைந்தார். அந்தப் பையன் செய்த மிகப் பெரிய காரியம் என்னவென்றால் தன் தந்தை மரிப்பதற்கு முன்பாக அவருக்காக ஜெபிக்க யாரையாவது அழைக்க ஓடோடி வந்ததே ஆகும். நெவில் குடும்பம் அங்கு அவர்களுக்காக உண்மையாகவே மிகவும் அழகாகப் பாடல்களைப் பாடினர். 10. ஆகவே, சகோதரன் நெவில் இன்று காலையிலும் மாலையிலும் என்னால் பேச முடியுமா என்று என்னைக் கேட்டார். வேத வசனம் ''நீங்கள் மிகுதியாய்க் கேளுங்கள்" என்று கூறுகின்றனது. ஆகவே சகோதரன் நெவில் அந்த விதமான காரியங்களில் மிகவுமாக வேத பூர்வமாக இருக்கின்றார்! ஆகவே நான் என்னால் இயன்ற வரை சிறந்த முறையில் செய்வேன். 11. இப்பொழுது, நான் கூறின படி இன்று தாயின் தினமாக (Mother's Day) இருப்பதால், சிறிய பிள்ளைகளிடம் பேச நாங்கள் விரும்புகிறோம். இந்த காலை வேளை சிறு பிள்ளைகளுக்கு ஒரு சிறந்த வேளையாக இருக்கும் என்று நான் எண்ணினேன். இப்பொழுது தாயின் தினம் என்பது.... 12. இப்பொழுது நமக்குத் தெரிந்த வரை பூமியில் ஒரு உண்மையான தாயை விட இனிமையான தொரு காரியம் எதுவுமே இல்லை. தேவன் தாமே அந்த உண்மையான கருணையுள்ளம் வாய்ந்த தாயின் ஆத்துமாவை ஆசீர்வதிப்பாராக. ஆனால் ''தாய்'' என்று அழைக்கப்படுகின்ற அநேக பதிலாள்கள், (Substitutes) மாற்றாள்கள் அநேகர் நம்மிடையே உள்ளனர். அது ஒரு தாயல்ல. அவர்கள் பிள்ளைகளைக் கொண்டுள்ள ஸ்திரீகளே ஆவர். ஆனால் ஒரு தாய் அல்ல. பழமை நாகரீகமுடைய தாயானவள் தன்னுடைய குடும்பத்தை பேணிக் காக்கின்ற ஒருவளாய் இருப்பாள், அவள் இந்த ஒய்யார நடனமாடும் இடங்களிலும், களியாட்டுகளிலும், முழு இரவும் புகை பிடித்துக் கொண்டும், குடித்துக் கொண்டும் இருக்க மாட்டாள். அப்படி செய்பவள் புனிதமான பெயராகிய தாய் என்ற பெயரைப் பெற அவளுக்கு தகுதியே இல்லை. ஒரு பிள்ளையை வளர்க்கின்ற ஒரு ஸ்திரீயாக மாத்திரமே அவள் இருப்பாள். அவ்வளவு தான்; ஆனால் ஒரு தாய் அல்ல, ஏனெனில் ஒரு தாய் என்பது வேறொரு அர்த்தத்தைக் கொண்ட தாய் இருக்கின்றது. இப்பொழுது நான் நினைக்கிறேன் நீங்கள்... 13. இப்பொழுது தாயின் தினத்தில், தெளிவாக நான் கூற விரும்புகிறேன். தலை நரைத்த வயதான இங்கே உட்கார்ந்திருக்கின்ற தாய் எனக்கு இருக்கிறார்கள். ஆகவே, ஒரு நாள் பரவாயில்லை, சரி, ஆனால் ஒவ்வொரு நாளும் தாயின் தினமாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். வருடத்திற்கு ஒருமுறை அல்ல. இந்த தாயின் தினம் இருப்பதற்கான காரணம் என்னவெனில் இப்பொழுது... 14. நமக்கு நிறைய உண்டு என்று நான் நினைக்கின்றேன், நாம் ஒருவரை யொருவர் அறிவோம். நாம் வீட்டில் தரித்திருப்பவர்கள், அதன் காரணத்தால் தான் நாம் இந்த விதமாகப் பேசப் போகின்றோம். 15. ஒரு தாயானவள், ஒரு உண்மையான தாய், ஒவ்வொரு நாளும் கனப்படுத்தப் பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன், அது சரி. ஆனால் இந்த நாளிலோ வியாபார நோக்கங் கொண்டு மக்கள் பணத்தை விழுங்கத்தக்கதாக மாத்திரமே தாயின் தினத்தைக் கைக் கொள்ளுகிறார்களே தவிர வேறொன்றிற்கும் இல்லை. வருடத்திற்கு ஒரு முறை ஒரு தாயின் தினம் அனுசரித்தல், ''நல்லது, நாம் அவர்களை சென்று பார்க்க முடியவில்லை, ஆகையால் அவர்களுக்கு ஒரு சிறிய பூச்செண்டை அனுப்பி விடுவோம், அது போதும்' என்பதெல்லாம் தாய்க்கு அது ஒரு அவமானமாகும். அது தாய் அல்ல! என்னே ஒரு காரியம். ஒரு உண்மையான தாயாகிய ஸ்திரீ ... அவள் உன்னை வளர்த்த ஒருவளாவாள், நீயும் அவளை நேசிக்கின்றாய், நீ அவளைப் பார்க்கின்ற எல்லா நேரத்திலும் அவளுடனே பேசி, உன்னுடைய அன்பை வெளிப் படுத்துகின்றாய். வருடத்திற்கு ஒரு முறை மாத்திரம் அல்ல. 16. ஆனால் என்னுடைய சிறு நாடகத்தைத் துவக்குவதற்கு முன், இதை உங்களுக்கு நினைப்பூட்ட விரும்புகிறேன். 1933ல் இது கூறப்பட்டது. இது கூறப்பட்ட பொழுதிலிருந்து உங்களில் அநேகர் இறந்து விட்டனர். அவர்களில் அநேகர் சென்று விட்டனர். 17. சில இரவுகளுக்கு முன்னால் நடந்த ஒன்றை செய்தித் தாள்களில் படித்தீர்களா? ஒரு ஸ்திரீ அந்த மனிதனைக் கொன்று, அவனை பாதையில் கிடத்தி, அவன் கூழாகும் வரை தன்னுடைய காரை முன்னும் பின்னுமாக அவன் மீது ஓட்டினாள். ஆகவே, அந்த வழக் கறிஞர்களும், மற்றவர்களும் ''அது உன் மன சாட்சியைக் குற்றப்படுத்தவில்லையா?'' என்று கேட்டனர். அதற்கு அவள், ''ஸ்திரீகள் கையாளப் படுகின்ற விதத்தைப் பார்த்து தேவனும் நானும் சோர்ந்து போகிறோம்'' என்று கூறினாள். ஊம்! ஆம், அவள் போற்றுதலுக்குரியவள். அது சரி. ''சோர்ந்து போகிறோம். எவ்வளவு கீழ்த்தரமாக இந்த தேசமானது செல்லும்? தெய்வீக நியாயத் தீர்ப்பு இல்லாமல் எவ்வளவு தூரம் நம்மால் செல்ல முடியும் என்று நான் ஆச்சரியம் கொள்கிறேன்? 'தேவனும் நானும்? அவர் மேல் சுமத்தப்பட்ட எல்லா முட்டாள் தனத்திற்கும் தேவன் குற்றவாளி யானால், அவர் தேவனாக இருக்க முடியாது. அவ்வளவே. "தேவனும் நானும் என்னே! அதைப் போன்ற காரியங்களில் தேவனுக்கு எந்தவித சம்பந்தமும் கிடையாது. அவள் மிகவுமாக நெருக்கத்தில் இருந்திருந்தாள். ஆகவே, அவளால் அதைக் குறித்து எப்படி சிந்தித்திருக்க முடியும்? ஓ! 18. அமெரிக்கா இப்பொழுது உங்களுக்கு நினைவில் இருக்கின்றதா, நீங்கள் அதை குறித்துக் கொள்ள வில்லை யென்றால், எழுதுங்கள். இது என்னுடைய முன்னுரைத்தல். பாருங்கள்? 1933ல் நாம் முன்பு ஆராதனைகளை நடத்திக் கொண்டிருந்த அந்த பழைய ... இப்பொழுது கிறிஸ்துவின் சபையைச் சேர்ந்தவர்கள். அங்கே ஆராதனைகளை நடத்திக் கொண்டி ருக்கின்றனர். சகோதரன் நெவில், அது அங்கே உள்ளது. சார்லி கார்ன் அங்கே குடியிருந்தார். அது தானே? இங்கே மேய்க்ஸ் தெருவில் உள்ள ஒரு அனாதை விடுதி. 1933ல் அப்பொழுது தான் ஒரு ஃபோர்ட் (Ford) காரை வாங்கினேன். அதை நான் அன்று காலை கர்த்தருக்கு அர்ப்பணம் செய்தேன். பிறகு நான் வீட்டை விட்டு கிளம்பும் முன் ஒரு தரிசனம் கண்டேன். ஒரு பழைய மஞ்சள் நிறகாகிதத்தில் அதை நான் எழுதினேன், இன்னுமாக என் வேதாகமத்தில் அது உள்ளது. கடைசி மணி நேரம் வருவதை நான் கண்டேன். 19. ஆகையால், 1933ஆம் வருட காரின் தோற்றம் எவ்விதம் இருந்தது என்பதை உங்களில் எத்தனைப் பேர் நினைவில் கொண்டுள்ளீர்கள். ஓ, அது இந்த விதமாக வடிவமைக்கப் பட்டு, பின் பாகத்தில் உதிரி சக்கரம், மாட்டப் படத்தக்கதாக சற்று சரிவாக இருக்கும். ''கர்த்தருடைய வருகைக்கு முன்னர்கார்கள் முட்டை வடிவில் உருவமைக்கப்படும்'' என்று நான் தரிசனத்தில் கண்டேன். அந்த முன்னுரைத்தலை எத்தனை பேர் நினைவில் கொண்டுள்ளீர்கள்? இங்கு யாராவது இருக்கின்றனரா? சகோ.ஸ்டீவர்ட் கடந்து சென்று விட்டார் என்று நான் யூகிக்கிறேன்.நாம் இங்கே 1933ல் ஆராதனைகள் நடத்திக் கொண்டிருந்தோம். அப்பொழுதிலிருந்து இப்பொழுது வரை ஏறக்குறைய எல்லாரும் கடந்து சென்று விட்டனர். 20. ''ஸ்திரீகள் தான் அமெரிக்காவின் முதல் தெய்வமாக இருப்பார்கள்'' என்று நான் முன்னறிவித்தேன். அது அப்படித் தான் இருக்கின்றது. ஹாலிவுட்டைப் போலவே எல்லாக் காரியங்களும் அமைக்கப் பட்டிருக்கின்றது. இந்த சினிமா நட்சத்திரங்கள் பற்றிய செய்திகளைக் கொண்ட, உங்களை அதிர்ச்சிக் குள்ளாக்குகின்ற FBI யின் (அமெரிக்க துப்பறியும் நிறுவனம் -தமிழாக்கியோன்) குறிப்புகளை, ஆவணங்களை நான் வைத்திருக்கிறேன். ஏறக்குறைய அவர்கள் எல்லாரும் விபச்சாரத்தில் ஈடுபடுபவர்கள் ஆவர். FBI நிறுவனம் சமீபத்தில் தான் அதைக் கண்டு பிடித்து வெளிக் கொணர்ந்தது. அவர்களுடைய சொந்த ஆவணக் குறிப்புகளில் உள்ளவை என்னிடம் இருக்கின்றன. ஆகவே அந்த சினிமா நட்சத்திரங்களும், மற்ற எல்லாரும் ஒரு மனிதனுடன் இருபத்தைந்து, ஐம்பது டாலர்களுக்கு ஒரு இரவை கழிப்பார்கள். அங்கே ஒரு மனிதன் ஹாலிவுட்டிலும், மற்ற தனியார் வீடுகளிலும் எல்லா விடங்களிலும் உள்ள இம்மக்களிடம் (சினிமா நட்சத்திரங்கள் - தமிழாக்கியோன்) ஆட்களை அனுப்ப இருக்கின்றான் என்று அவர்கள் கண்டுபிடித்து நிரூபித்துள்ளனர். அதைத் தான் நாம் தொலைக் காட்சியில் காண்கிறோம் - அங்கே திரைகளிலும் மற்ற காரியங்களிலும் இவை வருகின்றன. நம் பிள்ளைகள் இவைகளைப் பார்த்து அது போற்றுதலுக் குரியது என்று கூறத்தக்கதாக நாம் அனுமதிக்கின்றோம். பிறகு அதை எவ்வாறு தாய் என அழைப்பது? ஒரு தாய் என்கின்ற காரியத்திலிருந்து இவை மிகவுமாக அகன்று காணப் படுகின்றது. அது இழிவுக்குரிய அருவருப்பான ஒன்று. அது முற்றிலும் சரி. ஆனாலும் இன்னுமாய் அது நாளின் ஓட்டத்தை நடத்திக் கொண்டி ருக்கின்றது. நல்லது, அப்படியே இருக்கட்டும், அவர்கள் உடுத்துகின்ற பலவிதமான உடைகள், அமெரிக்க ஸ்திரீகள் அவர்களைப் போலவே உடை அணிகின்றனர். எல்லாக் காரியங்களும், நிச்சயமாக. ஆகவே அமெரிக்காவின் தெய்வம் ஒரு ஸ்திரீயே ஆகும். யெகோவா அல்ல; அதிலிருந்து அவர்கள் புறம்பே சென்று விட்டனர். இப்பொழுது தாயைக் குறித்து அல்ல, இப்பொழுது அதைச் சற்று ஒதுக்கி வையுங்கள், ஏனென்றால் அந்த புனிதமான ஒரு காரியத்தைக் குறித்து நாம் பேசப் போகிறோம். ஆனால் நான் ஒரு ஸ்திரீயை குறித்து தான் பேசுகிறேன். 21. ஆகவே, நினைவில் கொள்ளுங்கள், இதை கர்த்தர் என்னிடம் கூறினதாக நான் கூறவில்லை, ஆனால் அந்த மிகப் பெரிய அழிவு வரும் முன், இப்பொழுதோ அல்லது 1977-லேயோ அல்லது அதற் கிடையிலோ ஏதோ ஒன்று சம்பவிக்கும் என்று நான் நம்புகிறேன்; அது சரியாக இந்த மணி வேளையிலே வரலாம். ஆனால் இந்தப் பொழுதிலிருந்து 1977குள் ஒரு பெரிய அழிவு அல்லது ஒரு முழு அழிவு இந்த பூமிக்கு ஏற்படலாம் என்று நான் முன்னறிவிக்கிறேன், இந்தப் பொழுதிலிருந்து 1977க்கு இடையில், இதை நான் 1933ல் முன்னறிவித்தேன். 22. ஸ்திரீகளின் ஒழுக்க நெறி குறைந்து கொண்டே போகும் என்றும், தேசமும் விழுந்து கொண்டே இருக்கும் என்றும், ஸ்திரீ போற்றதலுக் குரிய நிலையை அடைவாள், அதுவரை ஒரு தாயைப் போன்ற ஒன்றை அவர்கள் சார்ந்திருப்பர் என்றும் நான் முன்னுரைத்தேன். ஆகவே, பிறகு ''அமெரிக்கா ஒரு ஸ்திரீயினால் ஆளப்படும். அதைக் குறித்துக் கொண்டு சரியாய் இருக்கின்றதா என்று பாருங்கள். ஒரு ஜனாதிபதியின் ஸ்தானத்தையோ அல்லது ஒரு மகத்தான, உன்னத அதிகாரத்தையோ அமெரிக்காவில் அவள் பெறுவாள். 23. சீமாட்டிகளே, நான் இதை கனத்துடன் கூறுகிறேன். ஒரு ஸ்திரீயானவள் சமையல் அறையை விட்டு வெளியேறு வாளானால், அவள் தன்னுடைய ஸ்தானத்திலிருந்து வெளியே சென்று விட்டாள். அது சரியே. அவள் அந்த இடத்தைச் (சமையல் அறை - தமிழாக்கியோன்) சார்ந்தவளாகத் தான் இருக்கின்றாள். அதற்கப்பால், அவளுக்கு வேறு இடம் கிடையாது. ஆகவே இப்பொழுது, அது அவர்களுக்கு கடினமாக இருக்கும். ஆனால் வேதம் என்ன வென்றும், சத்தியம் என்னவென்பதை மாத்திரமே நான் கூறுகிறேன். புருஷனானவன் வீட்டிற்கு தலைவனாய் இருந்து வந்தான். வேதாகம நாட்களில் அவ்வாறே இருந்து வந்தது. ஆனால் அவன் இப்பொழுது ஒன்றுமேயில்லை. பொம்ம லாட்டத்தில் உபயோகிக்கப் படுகின்ற ஒரு பொம்மையைப் போன்று ஒரு கைப் பாவையாக (puppet) அல்லது குழந்தையை கவனித்துக் கொள்பவனாக, அல்லது ஏதோ ஒன்றாக மாத்திரமே அவன் இருக்கின்றான். ஆகவே இப்பொழுது, இல்லை, அவர்கள் ஒரு நாயை மாத்திரமே வளர்க்க விரும்புகின்றனர். குடும்பக் கட்டுப் பாட்டைக் கைக் கொண்டு ஒரு சிறிய வயதான நாயை தங்கள் கரங்களில் எப்போதும் ஏந்திக் கொண்டு இருக்கின்றார்கள். ஏனென்றால் அப்பொழுது தான் அவர்களால் இரவு முழுவதும் சுற்றிக் கொண்டிருக்க முடியும். 24. நான் - நான் தாயைக் குறித்து பேசிக் கொண்டிருக்க வில்லை. தேவன் அவர்களை ஆசீர்வதிப்பாராக. இப்பொழுது தேசத்தை ஒன்றாக பாதி வழியில் பிணைத்துக் கொண்டிருப்பது அதுவேயாகும். ஒரு உண்மையான, அருமையான, புனிதமான, தேவனால் இரட்சிக்கப் பட்ட தாயாகும். அது சரி. 25. ஆனால், நம்முடைய ஸ்திரீகள் எவ்வளவு கீழ்த்தரமா யுள்ளனர் என்பது வெட்கத்திற் குரியது! செய்தித் தாளிலிருந்து ஒரு துண்டை நான் வைத்துள்ளேன். கடந்த இரண்டாம் உலகப் போரிற்கு பிறகு வந்த இதை நான் வெட்டி எடுத்தேன், அது ''அமெரிக்க பெண்களின் நல்லொழுக்கம் எங்கே போயிற்று, ஆறு மாதங்கள் கடல் கடந்து இருந்த போது, ஐந்தில் நான்கு இராணுவ வீரர்கள் தங்கள் மனைவிகளிட மிருந்து விவாகரத்து செய்யப் பட்டனர், ஆகவே அவர்கள் வேறு மனிதனை மணந்து கொண்டனர்?'' ஆகவே அவர்கள் அயல் நாடுகளிலிருந்து திரும்பி வரும் வரை இவர்களால் காத்திருக்க முடியவில்லை, அங்கே போர்க் களத்தில் இராணுவ வீரர்கள் மரித்துக் கொண்டிருந்தனர். அப்படிப் பட்டவள் அந்த புனிதமான பெயராகிய தாய் என்று அழைக்கப் படுவதற்கு தகுதி யற்றவள் ஆவாள். இல்லை, இல்லவே இல்லை. ஆதலால் "ஸ்திரீயை - வெறுப்பவன்'' என்று என்னை எப்பொழுதும் கூறுவர், ஆனால் நான் அவ்வாறு இல்லை. ஒரு ஸ்திரீ என்பவள், முக்கியமாக ஒரு தாயானவள் மகத்தான ஒருவள் என்று நான் எண்ணுகின்றேன். ஆனால் அவர்கள் தங்கள் ஸ்தானங்களில் இருக்க வேண்டும். ஒரு மனிதனின் ஸ்தானத்தையோ, தேவனின் ஸ்தானத்தையோ எடுத்துக் கொள்ளக் கூடாது. 26. ஆகவே இக்காலை ஒரு பரிசுத்த சபை ஸ்தாபனம் (a holiness church) "ஒரு தாய் பரலோகத்தின் நட்சத்திரங்களை ஆளுகின்றாள்'' என்றும் இன்னும் மற்றவைகளைக் கூறினதை நான் கேட்டேன். ஆகவே கத்தோலிக்கர்கள் கன்னி மரியாளிற்கு அவ்வாறு செய்கின்றனர். அது மரித்த ஸ்திரீகளை வணங்குதல், பரிசுத்த சிசிலியா இன்னும் மற்றவைகளை என்னால் கற்பனை செய்ய முடிகின்றது. அது ஒரு மரித்தோரின் ஆவிகளோடு தொடர்பு கொள்ளும் ஒரு உச்சக்கட்டமான நிலையாகும். ஆகவே, தேவனுக்கும் மனிதனுக்கு ஒரே ஒரு மத்தியஸ்தர் தான் உண்டு, அது இயேசு கிறிஸ்துவாகும். அது சரி. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிற்கு அப்பாற்பட்டு எந்த ஒரு பரிசுத்த வானோ, மற்ற காரியமோ கிடையாது. அவர் ஒருவர் தான் தேவனுக்கும் மனிதனுக்கும் இடையே இருக்கின்ற மத்தியஸ்தர் ஆவார். ஆனால் சபைகள் பிரசங்க பீடத்திற்கு பின்னால், கிறிஸ்து விடமிருந்து எல்லா புனித தன்மைகளையும் எடுத்து ஒரு தாயின் மேல் வைப்பதை நான் காண்கையில், எல்லா புனிதத் தன்மையும் எடுக்கப் படுகின்றது, பிறகு அவர்கள் ஆரம்பிக்கின்றனர். ஆகவே புரிகின்றதா? 27. ஆதலால், ஆனால் ஒரு உண்மையான தாய் விடப்பட்டிருக் கின்றாள். தேவனுக்கு ஸ்தோத்திரம்! ஒரு மாய்மாலக் காரனை நீங்கள் காண் பீர்களானால்; அங்கே சரியான ஜீவியம் செய்கின்ற ஒரு உண்மையான கிறிஸ்தவனும் இருக்கின்றான். ஆதரவான காரியம் ஒன்று உங்களுக்கு இருக்கு மானால் எதிரான காரியமும் உங்களுக்கு இருக்கும். அது முற்றிலும் சரியாகும். ஆகவே இப்பொழுது, அதைப் போன்ற ஒரு தாய், அதைப் போன்ற ஒரு பிள்ளை, அதைக் குறித்து வேதத்தில் உள்ளதை நாம் இப்பொழுது பேசப் போகின்றோம். 28. இப்பொழுது எத்தனை சிறுவர், சிறுமியர் இக்காலை வேளையில் நம்மிடையே உள்ளனர்? நேற்று சகோதரன் நெவிலுடைய ஒலிபரப்பை நீங்கள் கேட்டிருந்தால்.... நான் உங்களுடன் பேசுகையில் எத்தனை சிறுவர் சிறுமியர் முன்பாக உள்ள ஆசனங்களில் வந்து உட்கார விரும்புகிறீர்கள்? நீங்கள் இங்கு வந்து உட்கார விரும்புகின்றீர்களா? இங்கே, ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து உள்ளன. ஆறு இங்கே இருக்கின்றது. இங்கே சிறு ஆசனங்கள் உள்ளன. முன்னே வர உங்களுக்கு விருப்பமா, உன்னுடைய அம்மா பக்கத்தில் இல்லாமல் அமரக் கூடிய சிறு பையன்களாகிய சிலர், இங்கே வர உங்களுக்கு விருப்பமுண்டா? உங்களுக்கு வரவேற்பிற்கு மேலான...?..... (யாரோ ஒருவர் ''அவர்கள் ஞாயிறு பள்ளி அறையில் இருக்கின்றனர்'' என்று கூறுகின்றார் - ஆசி] அங்கே ஞாயிறு பள்ளி அறையில் உள்ளனரா? நல்லது, அது அருமையானது. நாம் சிறிது காத்திருந்து பேசிக் கொண்டி ருப்போம். இன்னும் சில நிமிடங்களில் அவர்கள் வெளியே வந்து விடுவார்கள். ஆகவே அந்த சிறிய கறுப்பு, நீலம் மற்றும் பழுப்பு நிறக் கண்களை ஒன்று கூட்டி அவர்கள் ஒவ்வொருவரிடமும் நாம் பேசுவோம். இப்பொழுது, எத்தனை பேர் கர்த்தரை நேசிக்கின்றீர்கள், ''ஆமென்' என்று கூறுங்கள் (சபையார் "ஆமென்" என்கின்றனர் - ஆசி]. அது சரி. 29. இப்பொழுது நான் தாய் மார்களிடமும் பிள்ளைகளிடமும் பேச விரும்புகிறேன். இது அவர்களுக்குத் தான் கற்பிக்கப் படுகின்றது. 30. கர்த்தருக்குச் சித்தமானால் இன்றிரவு நான் இயேசு செய்த முதல் அற்புதத்தைக் குறித்தும், எப்படி, எந்த வல்லமையினால் அது நடப்பிக்கப் பட்டது, அவர் அதைச் செய்கையில் என்ன செய்தார் என்பதைக் குறித்தும் நான் பேசப் போகின்றேன். அவர் முதலாவதாக என்ன அற்புதத்தை செய்தார் என்பது எத்தனைப் பேருக்கு தெரியும்? நாம் எல்லோருமாக அதைச் சொல்வோம். (சகோதரன் பிரான்ஹாமும், சபையாரும் "தண்ணீரை திராட்சரசமாக மாற்றினார் என்று கூறுகின்றனர் - ஆசி) அது சரி, அவர் செய்த முதல் அற்புதம். இப்பொழுது, கர்த்தருக்குச் சித்தமானால். இக்காலை நான் இதைப் படித்துக் கொண்டிருந்த போது என் சிந்தனைக்கு இது வந்தது. 31. இந்தக் காலை வேளையில் நம்முடைய சிறந்த நண்பரான திரு மற்றும் திருமதி யெக்கர் (Yeker) அங்கே நாம் கொண்டிருப்பதை நான் காண்கிறேன். நான் இந்தப் பக்கமாக திரும்புகையில் அவரை பார்க்க நேர்ந்தது. அங்கே அயல் நாட்டு பணிக்காக நான் எனக்குரிய பரிசோதனையை மேற் கொண்டி ருந்தேன், பரிசோதனைக்காக என்னை நான் தயாராக வைத்திருக்க வேண்டும். ஆகவே, நான் வெளியே வந்தபோது அங்கே அலுவலகத்தில் - அலுவலகத்தில் உட்கார்ந்து கொண்டிருந்த திரு. மற்றும் திருமதி யெக்கரை நான் சந்தித்தேன். 32. லூயி வில்லில் உள்ள டாக்டர் ஸ்கீன், ஒரு அருமையான கிறிஸ்தவ சகோதரன். அங்கே உண்மை யாகவே தேவனில் விசுவாசம் வைத்து தன் நம்பிக்கையை அங்கே வைத்த ஒரு உண்மையான மனிதனை நான் சந்தித்தேன். என்று நான் உங்களுக்கு கூறுகிறேன். என்ன வென்று உங்களுக்குத் தெரியுமா? பிரசங்கிகளைக் காட்டிலும் அதிகமான மருத்துவர்கள் தெய்வீக சுகமளித்தலில் விசுவாசம் கொண்டுள்ளதை நான் காண்கின்றேன் என்று நான் உங்களுக்கு கூறுகிறேன். அது சரி. நீங்கள் அவர்களிடம் பேசிப் பாருங்கள். நான் ''நிச்சயமாக'' என்று கூறினேன். ஆகவே அவர்... நான் புறப்பட ஆயத்தமான போது, அவர் என் கையைப் பிடித்துக் கொண்டு, "சகோதரன் பிரான்ஹாம், மனித வர்க்கத்திற்கு நான் செய்வதைக் காட்டிலும் நீர் தான் அதிகமாகச் செய்கின்றீர். அது சரி. நான் தொடக் கூட முடியாதவர்களுக்கு நீர் உதவி செய்கின்றீர், அது சரியே'' என்று கூறினார். 33. நான், 'நல்லது, நீர் அதற்கு தையல் இடலாம், அல்லது ஒரு எலும்பை அமைக்கலாம், அல்லது அதைப் போன்ற ஏதோ ஒன்றைச் செய்யலாம். ஆனால் சுகமளித்தலை தேவன் தான் செய்கின்றார்'' என்றேன். 34. அவர், "அது சரியே''என்றார். ஆமென். ஓ, பரந்த மனப் பான்மையுடைய, நேர்மை வாய்ந்த சிந்திக்கும் ஜனங்களையே நான் காண விரும்புகிறேன். நான் நினைக்கின்றேன். ஒரு அறுவை சிகிச்சை, ஒரு மருத்துவ நிபுணர், தெய்வீக சுகமளித்தல் இன்னும் எல்லாம் ஒன்று சேர்ந்து, அதில் ஏதாவது ஒன்று ஒருவனுக்கு உதவியாக இருக்கும் பட்சத்தில், நான் அதன் சார்பில் இருக்கிறேன். ஆகவே ஒரு மருத்துவர் ஒரு பிரசங்கிக்கு கண்டனம் தெரிவிப்பாரானால், அந்த பிரசங்கி மருத்துவரைக் கடிந்து கொள்வாரானால், ஒரு அறுவை சிகிச்சை நிபுணரைக் கடிந்து கொள்வாரானால், அந்த அறுவைச் சிகிச்சை நிபுணர் ஒரு மருத்துவ நிபுணரைக் கடிந்து கொள்வாரானால், அங்கே ஏதோ ஒரு சுய நலம் கொண்ட உள்நோக்கம் எங்கேயாகிலும் இருக்கும் என்று நீங்கள் இதைக் கற்பனை செய்துப் பார்க்கலாம். அது சரி. ஏனெனில் அவர்களில் ஒவ்வொரு வரும் யாரோ ஒருவருக்கு உதவியாக இருக்கின்றனர் என்று நிரூபணம் செய்யப் பட்டுள்ளது. அது முற்றிலும் சரி. 35. இப்பொழுது காரியம் என்ன வெனில், நான் நினைக் கின்றேன், நம்முடைய நோக்கங்கள் சரியாக இருந்து, நம்முடைய இருதயங்கள் ஜனங்களுக்காக சரியாக இருக்கும் பட்சத்தில், நாமெல்லாரும் ஒன்று சேர்ந்து நம்முடைய சக மனிதனுக்கு, வாழ்க்கையை இலகு வாக்கிக் கொள்ள உதவுமோமாக. ஆகவே அப்பொழுது உங்கள் நோக்கங்கள் சுயநலம் கொண்டதாக இல்லாமல், இவையெல்லா வற்றையும் இலவசமாக அளிக்கின்ற தேவனுக்கு துதியை செலுத்துகிறீர்கள். ஆமென். ஆம், ஐயா. ஓ, எந்த ஒரு சுயநலத்தை எங்கேயும் நாம் கொண்டிருக்கக் கூடாது; அது பரிபூரணமாக இருக்க வேண்டும். 36. இவர் இதற்கு உதவுவாரானால், அவர் இதற்கு உதவி செய்வாரானால், அறுவை சிகிச்சை இதற்கு உதவுமென்றால், ஏதோ ஒன்று அதற்கு உதவி செய்யுமானால், எல்லாவற்றிற் காகவும் நாம் ஜெபிப்போம், ஆமென், தேவன் தம்முடைய அருமையான ஜனங்கள் சுகமாயும், சந்தோஷமாகவும் இருக்க உதவி செய்வார். ஏனெனில், நாம் நீண்ட காலம் இங்கே இருக்க மாட்டோம், சில நாட்கள் மாத்திரமே. எங்கேயோ செல்லும் பாதையில் நாம் சென்று கொண்டி ருக்கின்றோம். நாம் இங்கே இருக்கின்ற காலத்தில் ஒரு நல்ல நேரத்தைக் கொண்டிருப்பதற்காக, நம் வாழ்க்கையில் சிறிது இலகுவாக்கிக் கொள்ள நாம் முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். ஆமென். 37. இப்பொழுது இந்த சிந்தனையின் பேரில், நாம் வேதத்தை திறந்து நம்முடைய அருமையான இரட்சகரிடத்தில் பேசும் முன்னர், நமது தலைகளை வணங்குவோம். 38. எங்கள் அன்புள்ள பரலோகப் பிதாவே, இந்த காலை வேளையில் உமது பிரசன்னத்தில் தாழ்மையோடு நாங்கள் வந்து, இந்த பூமியின் மேல் இருக்கின்ற எல்லா காரியங்களுக்கும் மேலாக அல்லது எதுவா யிருந்தாலும் அதற்கு மேலாக கர்த்தராகிய இயேசு கிறிஸ்து விற்காக நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். ஏனென்றால், அவர் ஒருவர் தான் மனிதனையும், தேவனையும் ஒன்றாக இணைத்து தகுதியில்லாத ஏழைகளாகிய, தேவனற்ற அன்னியர்களாகிய எங்களை ஒப்புரவாக்கினார். நாங்கள் எங்கள் சொந்த தெரிந்து கொள்ளுதலின் படி தேவனை விட்டுத் தூரமாக நடந்து சென்றோம். நாங்கள் தேவனுக்குப் பிரியமில்லாத வர்களாயும், பாவிகளாகவும், தேவனை விட்டு அகன்றவர்களாகவும் இருந்த போது அவர் மிகவும் நல்லவராக [He was so good] கீழே இறங்கி வந்தார். அவர் தம்முடைய சொந்த இரத்தத்தைச் சிந்தி அதன் மூலம் எங்களை பிதாவினிடத்தில் திருப்பி இணைத்தார். 39. அவருக்காக நாங்கள் உமக்கு எவ்வளவாக நன்றி செலுத்துகிறோம்! ஆகவே இன்றைக்கு மத்தியஸ்தராக, தேவனுக்கும் மனிதனுக்கும் இடையேயுள்ள ஒரே மத்தியஸ்தராக, பூமியிலிருந்து மகிமைக்குச் சிந்தின தம்முடைய சொந்த இரத்தமாகிய மேடையின் மூலம் ஜெபத்தை தேவனுடைய சமுகத்தில் கொண்டு வரும் ஒருவராக அவர் இருக்கின்றார். ஒரு எளிய கட்டடத்தின் (barn) வழியின் மூலமாக இந்த பூமிக்கு வந்து, ஒரு மாட்டுத் தொழுவத்தில் பிறந்தார். மரண தண்டனையின் மூலமாக இந்த பூமியை விட்டு வெளியே சென்றார். இந்தப் பூமி அவரை விரும்பவில்லை. அவர் எங்களுடைய பாவங்களை அவர் தம் மேலே வைத்திருந்து, அவர் ஒரு பாவியாயிருந்த படியால் பரலோகம் அவரை ஏற்றுக் கொள்ளக் கூடாதிருந்தது, பூமிக்கு அவர் தேவையில்லாதிருந்தது, "இப்படிப்பட்ட ஒரு நபரிடமிருந்து தூர இருங்கள்!'' அவரை அவர்கள் புறக் கணித்தனர், என்று அவருக்கு... பிறப்பதற்கும், இறப்பதற்கும் கூட இடமில்லாதிருந்தார். வானங்களுக்கும் பூமிக்கும் நடுவே அவர் தொங்கினார்; பரலோகமும் அவரை வரவேற்கக் கூடாதிருந்தது, பூமிக்கு அவர் தேவையில்லா திருந்தது. ஆகவே, எப்படியாயினும், எங்களுடைய பாவத்திலிருந்து எங்களை மீட்டெடுக்க, எங்களுடைய வியாதியிலிருந்து எங்களைச் சுகமாக்கத் தக்கதாக, எங்களுக்கு சந்தோஷத்தையும், நாங்கள் பூமியிலே தங்கியிருக்கையில் எங்களுக்கு ஒரு அருமையான நேரத்திற்காக, அவர் மரித்தார். எப்பேற்பட்ட ஒரு இரட்சகர்! ஓ, அவருக்காக உமக்கு நாங்கள் எவ்வளவாக நன்றி கூறுகிறோம்! 40. ஓ தேவனே, எங்கள் இருதயத்தின் ஆர்வமான தொழுது கொள்ளுதல் அவருக்கு, அவருக்கு மாத்திரமே ஊற்றப் படட்டும். எங்கள் உதடுகளிலிருந்து அல்லது இருதயத்திலிருந்து வருகின்ற ஒவ்வொரு மரியாதையும், எல்லா துதிகளும் மற்ற எல்லாக் காரியங்களும், எல்லாவற்றிற்கும் தகுதியான அவர் மேலே வைக்கப் படட்டும். புஸ்தகத்தை தமது கையில் ஏந்திய அவர் சிங்காசனத்தில் அமர்ந்திருந்தார். முத்திரிக்கப் பட்டிருந்த அந்தப் புஸ்தகத்தைப் பார்க்கவும் அதை அவிழ்க்கவும் பரலோகத்திலும் அல்லது பூமியிலுள்ள எந்த மனிதனும் பாத்திரவானாக இல்லை. ஆகவே உலகத் தோற்றத்திற்கு முன்பாக அடிக்கப்பட்ட இந்த ஆட்டுக் குட்டியானவர் தாமே அதை அவர் கையிலிருந்து வாங்கி முத்திரைகளைத் திறந்து வார்த்தையை மக்களுக்கென அவிழ்க்கின்றார். 41. ஆகவே, பிதாவே, அவருடைய பரிசுத்த ஆவியானவர் தாமே எங்களுடைய இருதயங்களை எல்லா இருளிலிருந்தும், எங்கள் நாவை எல்லா இழிவான, வெட்கக்கேடான காரியங்களிலிருந்தும் அவிழ்த்து விடட்டும். எங்கள் எல்லா பாவங்களையும் மன்னியும். எல்லா இருளையும் எடுத்துப் போடும். இக்காலையிலே எங்கள் இருதயங்களுக் குள்ளே வாரும் என்று நாங்கள் ஜெபிக்கின்றோம். 42. தேவனே, முக்கியமாக இக்காலை வேளையிலே தங்கள் அருமையான தாய்களோடு உட்கார்ந் திருக்கும் இந்தச் சிறிய பிள்ளைகளை ஆசீர்வதியும். தேவனே, தாய்த் துவத்திற்காக, [Motherhood] உண்மையான ஸ்திரீகளுக்காக உமக்கு எவ்வளவாக நாங்கள் நன்றி செலுத்துகிறோம்! இந்த எல்லா இருளான, விக்கிரகாராதனை, அசுத்தம் மற்றும் உலகத்தின் எல்லா சீர்கேடுகளின் மத்தியிலும் உண்மையான, நிஜமான தாய்களை நாங்கள் கொண்டுள்ள வர்களாக இருக்கின்றோம். அவர்களுக்காக எவ்வளவாக உம்மிடம் நாங்கள் நன்றியை ஏறெடுக் கின்றோம்! வாலிப மற்றும் வயதான, இருவரும் ஒன்றாக, உண்மையான தாய்த் துவத்துவத்திற்காக பிதாவே உமக்கு நன்றி செலுத்துகிறோம். ஆகவே தேவனே, நீர் ஆசீர்வதிப்பீரென்று நாங்கள் ஜெபிக்கின்றோம். 43. இங்கே இக்காலை வேளையில், எங்கள் சகோதர சகோதரிகள் அநேகர், தங்கள் அருமையான, பரிசுத்தமாக்கப் பட்ட தாய் திரைக்கு அப்பால் கடந்து சென்று, மரித்த நிலையில் இல்லாமல், என்றென்றைக்குமாக உயிரோடிருக்கின்றனர் என்பதன் அடையாளமாக வெள்ளை ரோஜா அல்லது வெள்ளை சின்னங்களுடன் அமர்ந்துக் கொண்டிருப்பதை நீர் பாரும். என்றாவது ஒரு நாளிலே இவர்களும், நதியண்டை வந்து மறுகரையில் அவளை (தாயை - தமிழாக்கியோன்) மறுபடியும் காண வருவர். அநேகர் சிகப்பு ரோஜாக்களை அணிந்துள்ளனர், தாய் இன்னும் இங்கே இருக்கின்றார்கள் என்பதின் அடையாளமாக. அதற்காக உமக்கு நாங்கள் நன்றியை ஏறெடுக்கின்றோம். 44. நாங்கள் உம்முடைய வார்த்தையை தியானிக்கையில் நீர் எங்களை ஆசீர்வதிக்குமாறு ஜெபிக்கிறோம், கிறிஸ்துவின் நாமத்தில் இதைக் கேட்கிறோம், ஆமென். 45. இப்பொழுது, கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆகவே இக்காலை வேளையிலே சரியாக வார்த்தையின் பேரில் நாம் துவங்கு வோமாக. இப்பொழுது முதலாவதாக இந்தச் சிறிய நாடகத்திற்கு முன்னர், தாய்களுக்கும் இந்தச் சிறிய குழந்தைகளுக்கும். இது நல்ல சத்தத்தையுடையதாக இருப்பதால், அவர்களும் எனக்கு செவி கொடுப்பார்கள். என்று நான் எண்ணினேன், ஆகவே, ஒரு சிறிய நாடகத்தை உங்களுக்கு நான் அளிக்கப் போகின்றேன். இப்பொழுது என்னுடைய ஆராதனைகளில், சில சமயங்களில் நாடகங்கள் மிகவும் பயனுள்ள வைகளாக அமைந்துள்ளன என்று நான் கவனித்துக் கொண்டு வருகிறேன். அப்படித் தான் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? சிறிய பையன்கள் அதை நன்றாக புரிந்து கொள்கின்றனர். நாளை என்று இருக்குமானால், நாளைய மனிதர்களாக இருக்கப் போகின்ற இரண்டு கண்களை உடைய இரண்டு சிறுவர்கள் உட்கார்ந்து கொண்டு என்னை நோக்கிக் கொண்டிருப்பதை நான் காண்கிறேன். 46. ஆகவே இப்பொழுது சபையில் ஏதாவது ஒரு நாடகமோ அல்லது வேறெதுவாயிருந்தாலும், அதற்கு ஒரு வேதாகமப் பின்னணி இருக்க வேண்டும். ஆமென். வேதாகமப் பின்னணியாகவே அது இருக்க வேண்டும். முதலாவதாக, நாமெல்லாரும் மத்தேயு 16-வது அதிகாரம் 25-ம் வசனத்திற்கு திருப்பி இந்த வசனங்களை நாம் படிப்போம். முதலாவதாக நாம் படிக்கையில், தயாராகையில், சிறிய பிள்ளைகள் அந்த நேரத்தில் வெளியே வந்து விடுவார்கள். இப்பொழுது மத்தேயு 16:25, நாம் இதைப் படிப்போம். தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்து போவான்; என்னிமித்தமாக தன் ஜீவனை இழந்து போகிறவன் அதைக் கண்டடைவான். 47. இப்பொழுது, இது ஒரு முக்கியமான வேத வசனம் ஆகும். நாமெல்லாருமாக இதைச் சேர்ந்து படிப்போம். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? இப்பொழுது எல்லாரும், சிறிய பிள்ளைகள் மற்றும் எல்லாருமாக. (சகோதரன் பிரான்ஹாம் மற்றும் சபையாரும் இந்த வேத வசனத்தைச் சேர்ந்து வாசிக்கின்றனர்- ஆசி). தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்து போவான்; என்னிமித்தமாக தன் ஜீவனை இழந்து போகிறவன் அதைக் கண்டடைவான். 48. சிறுவர்களே சிறுமிகளே, உங்களுக்குத் தெரியுமா, சிறு பிள்ளைகள் இதில் களிகூறுவது போலவே பெரியவர்களும் அவ்வாறே செய்வார்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனால், அந்த வேத வாக்கியம் மிகவும் முக்கிய மானதாகும்! சில வேத வசனங்கள் மிகவும் முக்கியம் வாய்ந்ததாய் இருந்ததினாலே தேவன் அதை மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகிய நான்கு சுவிசேஷகங்களிலும் வைத்திருக்கிறார். ஆனால் இது மிகவும் முக்கிய மானதாய் இருந்ததால் இதை சுவிசேஷத்தில் ஆறு முறை வைத்திருக்கிறார் ஆறு முறை இது இயேசுவாகிய அவருடைய சொந்த உதடுகளிலிருந்து புறப்பட்டு வந்தது. 49. இப்பொழுது நாம் மாற்கிற்கு திருப்புவோம், மாற்கு 8-வது அதிகாரம் 34-ம் வசனம் துவங்கி அதில் சிலவற்றை நான் படிக்கிறேன். இது இயேசு பேசினதின் ஒரு சிறிய தொடர்ச்சி என்பதை நீங்கள் கவனிக்க வேண்டு மென்று நான் விரும்பு கின்றேன். ஆகவே நினைவில் கொள்ளுகள். சுவிசேஷத்தில் இதை அவர் ஆறு முறை வைத்திருக்கிறார், ஆகவே அது நிச்சயமானதாக இருக்கும்! இரண்டு என்பது சாட்சியாக இருக்கிறது, பாருங்கள், நீங்கள் நிச்சயமாகவே இதை உங்கள் நினைவில் வைத்திருக்க வேண்டு மென்று, அவர் இதை மூன்று இரண்டு முறைகளாக வைத்துள்ளார் (அதாவது ஆறு முறைகள்கள் - தமிழாக்கியோன்) பின்பு அவர் ஜனங்களையும் தம்முடைய சீஷர்களையும் தம்மிடத்தில் அழைத்து: ஒருவன் என் பின்னே வர விரும்பினால், அவன் தன்னைத் தானே வெறுத்து.... தன் சிலுவையை எடுத்துக் கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன். 50. இப்பொழுது, மொழிப் பெயர்ப்பாளர்களில் ஒருவர் இவ்வாறு எழுதியிருந்தார். ''தன் சிலுவையை எடுத்துக் கொண்டு தினந்தோறும் என்னைப் பின்பற்றக் கடவன். இப்பொழுது, இப்பொழுது,35-வது வசனம். கவனியுங்கள். தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்து போவான்; என்னிமித்த மாகவும், சுவிசேஷத்தின் நிமித்தமாகவும் தன் ஜீவனை இழந்து போகிறவன் அதைக் இரட்சித்துக் கொள்ளுவான். மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப் படுத்திக் கொண்டாலும் தன் ஜீவனை நஷ்டப் படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? 51. மனுஷன் தன் ஜீவனுக்கு (ஆங்கில வேதாகமத்தில் ஆத்துமாவிற்கு - Soul என்று இருக்கிறது - தமிழாக்கியோன்) ஈடாக என்னத்தைக் கொடுப்பான்? இப்பொழுது, 35- வது வசனத்தை எடுத்து, நாம் இதை ஒன்று சேர்த்துக் கூறுவோம். அது சரி. இப்பொழுது இதை ஒன்று சேர்த்துக் கூறுவோம். மாற்கு 8:16-ஐ நாம் எடுக்கப் போகின்றோம், இப்பொழுது இதை ஒன்றாகக் கூறுவோம்; மாற்கு 8:16, என்னை மன்னியுங்கள், மாற்கு 8:16, 35. இல்லை, நான் அதைத் தவறாக எடுத்து விட்டேன். மாற்கு 8, சற்று பொருத்துக் கொள்ளுங்கள். மாற்கு, பரி. மாற்கு, 8 - வது அதிகாரம், 35 - வது வசனம். இப்பொழுது, இதை நாம் முயற்சிப் போமாக. பரி. மாற்கு, 8-வது அதிகாரம், 35வது வசனம். இப்பொழுது அதை எடுத்துள்ளோம். அதைப் படிப்போம். (சகோதரன் பிரான்ஹாம் மற்றும் சபையார் இந்த வேத வசனத்தை சேர்ந்து படிக்கின்றனர்-ஆசி). தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்து போவான்; என்னிமித்த மாகவும், சுவிசேஷத்தின் நிமித்தமாகவும் தன் ஜீவனை இழந்து போகிறவன் அதை இரட்சித்துக் கொள்ளுவான். 52. அது அற்புதமான தல்லவா? இப்பொழுது சிறு பிள்ளைகள் வந்து தங்கள் இடங்களில் உட்காருகையில் நாம் நமது சிறுகதையை ஆரம்பிப்போம். நாம் நமது கதையை துவக்கி ஆரம்பிக்கையில் வாயில் காப்பாளர்கள் அவர்களை இங்கே கொண்டு வந்து அவர்களை அமைதிப்படுத்துவீர்களாக. நாம் இக்காலை ஒரு நாடகத்தின் பேரில் இதை அஸ்திபாரப் படுத்துவோமாக. ஆகவே நான், அநேக முறை, இங்கே சில நாட்களுக்கு முன்னர் நான்.... 53. கடந்த கூட்டத்தில் சகோதரன் மற்றும் சகோதரி வுட் என்னுடன் இருந்தனர் என்று நான் நம்புகிறேன், கிறிஸ்தவ வியாபாரிகள் குழுவின், காலை உணவு கூட்டத்தில் நான் பேசிக் கொண்டி ருந்தேன். ஆகவே சகேயுவைக் குறித்த ஒரு சிறு நாடகத்தை நான் அளித்தேன். அங்கே காட்டத்தி மரத்தின் மேலே இருந்தான், இயேசு அந்த பக்கமாக வந்த போது, எப்படி அவன் குப்பையை கொட்டும் தொட்டியைக் கொண்டு (நாம் அதை நாடக வடிவில் அமைத்தோம்). இயேசுவைக் காணத்தக்கதாக ஒரு மரத்தின் மீது ஏறினான். உங்களுக்குத் தெரியுமா, அந்த வாணிபத் தொழில் செய்பவன் மரத்தின் மீது அமர்ந்து கொண்டிருந்தான், இயேசுவிட மிருந்து ஒளிந்துக் கொண்டிருந்தான். உங்களுக்கு தெரிந்த வரையில், அவன் எங்கிருக்கின்றான் என்று இயேசுவிற்கு தெரியாதிருந்தது. ஆகவே அப்பொழுது அவன், இந்த மனிதன் எல்லா காரியங்களையும் அறிந்திருக்கிறார் என்றும், காரியங்களை முன்னுரைக்கிறவர் என்றும், எந்த மீனிடத்தில் என்ன இருக்கிறதென்றும்... நான் அதை நம்புவதில்லை'' என்று கூறினான். அப்பொழுது இயேசு அந்த மரத்தைச் சுற்றி நடந்து கொண்டிருந்தார். ஆகவே அவன் ''சரி, என்னைக் காண முடியாது, நான் மரத்தின் மீது உட்கார்ந்துக் கொண்டிருக்கிறேன்'' என்று கூறிக் கொண்டிருந்தான். 54. இயேசு நின்று மேலே நோக்கிப் பார்த்து, "சகேயுவே கீழே இறங்கி வா'' என்றார். அவன் அங்கேயிருக்கின்றான் என்பதை மாத்திரம் அவர் அறிந்திருந்தவராயிருக்கவில்லை, அவன் யாரென்பதையும் அவர் அறிந்திருந்தார். 55. ஆகவே ஒரு சிறிய நாடகம் சில சமயங்களில் வயதான ஜனங்களுக்கும், வயது சென்ற சிறுவர்களுக்கும் சிறுமியருக்கும், இளம் வயதினருக்கு உதவுவதைப் போலவே உதவும் என்று நான் எண்ணுகிறேன். 56. ஆகவே இப்பொழுது இது முடிவுற்ற பிறகு நீங்கள் என்னை ''சகோதரன் பிரான்ஹாம், இந்த கதா பாத்திரங்களைப் பற்றியும், பெயர்களைப் பற்றியுமான தகவல்களை எங்கிருந்து பெறுகின்றீர்?'' என்று கேட்கலாம். அவைகளில் சில, என்னுடைய அருமை நண்பரான சகோதரன் பூத்- கிளிப்பார். அவர்களிட மிருந்து எனக்கு உதவி கிடைக்கின்றது. மகத்தான வரலாற்று ஆசிரியரான, ஜோசபஸ் என்கிற மற்றொருவர். பிறகு இச் சம்பவங்கள், குறித்து நான் படித்த வரலாற்றின் பேரிலான புத்தகங்கள், இன்னும் மற்றவை. ஆகவே நாங்கள் இங்கே இக் காலையில் அளிக்கப் போகின்ற நாகடத்தைக் குறித்த தகவல்களை - குறிப்புகளை இவ்வாறு தான் நான் பெற்றுக் கொண்டேன். 57. நாம் இக்காலை வேளையில் அளிக்கப் போகின்ற இந்த கதைக்காக நம்முடைய சிறிய பிள்ளைகள் வெளியே வருவதை நான் காண்கிறேன். இப்பொழுது சிறிய பையன்கள், சிறுமிகளாகிய நீங்கள், உங்களால் முடிந்த வரை, விருப்ப மானவர்கள் இங்கே முன்பாக வரலாம். ஐந்து அல்லது ஆறு காலி இருக்கைகள் நமக்கு உண்டு. நீங்கள் இங்கே வர விரும்புவீர்களானால், நீங்கள் வருவதைக் குறித்து நாங்கள் மகிழ்ச்சி கொள்வோம். இங்கே இந்த சிறிய நாடகத்திற்காக, சரியான நேரத்தில் நீங்கள் வந்திருக் கின்றீர்கள். 58. ஆகவே இப்பொழுது நான் இவ்விதமாகவே இந்த குறிப்புகளை, தகவல்களைப் பெற்றுக் கொண்டேன், அறிந்து கொண்டேன். யாராவது சிலர் இதைக் கவனித்து ''நல்லது, அதைப் போன்ற பாகத்தை நான் வேதத்தில் கண்டதே இல்லை'' என்று கூறலாம். ஆனால் நீங்கள் அதைக் காணவில்லை என்றாலும், வரலாறு அதை பதிவு செய்தது, நீங்கள் பாருங்கள். ஆகவே இது அதே கதை தான் ஆகும், இது ஒரு-ஒரு-ஒரு சிறிய நாடக வடிவின் மூலமே அளிக்கப் படுகின்றது. 59. ஆகவே, ஆதலால், அதுவே தான் அது தான் அது உன்னுடைய சிறிய சகோதரனா? ஓ, ஓ நிச்சயமாக அவன் உன்னைப் போலவே இருக்கின்றான். அவன் ஒரு அருமையான பையன். அவ்வாறு தான் என்று நீ கூறலாம். அது சரி. 60. இப்பொழுது நீங்கள் இங்கே வந்து அமர விரும்புகிறீர்களா? அங்கே இரண்டு அல்லது மூன்று சிறுமிகள் உள்ளனர். என்னே, அது அருமையாயும், அழகாகவும் உள்ளது! இப்பொழுது நான்... இக்காலையில் கொடுக்கப்பட போகின்ற இந்த சிறிய கதை சிறிய பையன்களும் சிறுமிகளுக்கு மாத்திரமே. திருமதி. காலின்ஸ் மற்றும் அங்கே யிருக்கின்ற சிறிய சகோதரி, நீங்கள் அங்கு இருக்கிறீர்கள் என நான் நம்புகிறேன்; தேனே நீ அங்கு சென்று உட்கார விரும்புகிறாயா. ஆம், அந்த ஸ்திரீ தன்னுடைய சட்டைப்பை புஸ்தகத்தை அங்கே சிறிது நகர்த்துவார்களானால், அங்கே ஒரு இடம் இருக்கும் என்று நான் நம்புகிறேன். ஆகவே இங்கே சில இடங்கள் உள்ளன. 61. இந்த எல்லா சிறுவர்களும் சிறுமியர்களும் இங்கே முன்னே வர நான் விரும்புகிறேன், ஆதலால் இவர்களிடம் நான் பேசுவதற்கு ஏதுவாயிருக்கும். இங்கே, இங்கே சில நாற்காலிகள் நமக்கு உண்டு. உங்களுக்கு சில இருக்கைகள் கிடைக்க நாங்கள் பிரயாசப் படுகின்றோம். ஆம், ஐயா, அவர்களில் சிலர் இங்கே நமக்கு உதவுவர், நாம் - நாம் காணத் தவறாதபடிக்கு, சிறுவர் சிறுமிகளுக்காகவே இது இருக்கட்டும். ஓ, என்னே அது அருமையான தல்லவா? இப்பொழுது அது... இன்னும் உங்களுக்கு தேவையாயிருக்கிறதென்று நான் நம்புகிறேன், சகோதரன் நெவில், இன்னும் சிலர் வருவதை நான் காண்கின்றேன். ஆகவே, இப்பொழுது அது அருமையானது! 62. எத்தனை தாய்மார்கள் இங்கே இருக்கின்றனர்? உங்கள் கரங்களை உயர்த்துங்கள். ஓ, அது மகத்துவமானது! இப்பொழுது, அது மிகவும் அருமையான ஒன்று. 63. இப்பொழுது இங்கே பின்புறம் இருக்கும் சிறுமிகளே நீங்கள் முன்னே வர விரும்புகிறீர்கள் என்றால், உங்கள் அம்மாவிட மிருந்தது சற்று அப்பால் வரத்தக்கதான பக்குவம் உங்களுக்கு இருக்குமானால், முன்னே வாருங்கள். உங்கள் அம்மா உங்களை முன்னே கொண்டு வர விரும்பினால், நல்லது, அவர்களையும் முன்னே வரச் சொல்லுங்கள். இது அம்மாவிற்கும் கூட. அது சரி இப்பொழுது. 64. பிள்ளைகளே, நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நாங்கள் ஒரு வசனத்தை இங்கே படித்தோம் என்று. நீங்கள் எல்லாரும் என்னுடன் சேர்ந்து இதைப் படிப்பீர்களா? நீங்கள் எல்லோரும் இந்த வசனத்தை என்னுடன் சேர்ந்து படிப்பீர்களா? இப்பொழுது, நாம் எதைக் குறித்துப் பேசப் போகின்றோமோ அது பரி. மத்தேயு 16-ஆம் அதிகாரம் 25- வது வசனத்தில் காணப் படுகின்றது. இப்பொழுது இந்த சிறிய... ஒவ்வொரு சிறுவனும் சிறுமியும் இந்தக் காலை வேளையில் என்னுடன் சேர்ந்து இதைப் படியுங்கள். கூறுங்கள் ''பரி. மத்தேயு (சிறுவரும், சிறுமியரும் "பரி. மத்தேயு என்று கூறுகின்றனர்-ஆசி]16-ஆம் அதிகாரம்'' (''16-ஆம் அதிகாரம் 25-வது வசனம் [25வது வசனம்) இப்பொழுது என்னுடன் சேர்ந்து படியுங்கள். ''தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன்" [''தன்ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன்) ''அதை இழந்து போவான்'' ('அதை இழந்து போவான்''] ''என்னிமித்தமாக தன் ஜீவனை இழந்து போகிறவன் அதைக் கண்டடைவான்'' (''என்னிமித்தமாக தன் ஜீவனை இழந்து போகிறவன் அதைக் கண்டடைவான். அதைக் கண்டடைவான்! ஆம், நாம் அதை மறுபடியும் கூறுவோம். என்னிமித்தமாக தன் ஜீவனை இழந்து போகிறவன் அதைக் கண்டடைவான் (''என்னிமித்தமாக தன் ஜீவனை இழந்து போகிறவன் அதைக் கண்டடைவான்) அருமையானது! 65. இப்பொழுது, சிறுவர் சிறுமியரே உங்களுக்கு தெரிந்திருப்பது என்ன? உண்மை யாகவே மதிப்பு மிக்க காரியங்கள் உலகத்தில் அதிகம் உண்டு. அவைகளில் ஒரு காரியம், இன்றைக்கு உங்களுடன் அதை வைத்துள்ளீர்கள், அது சரீரத்திற்குள்ளாக இருக்கின்ற ஆத்துமா ஆகும். உலகத்தில் உங்களுக்கு இருக்கின்ற விலையேறப் பெற்ற ஒன்று அதுவே ஆகும். தாயே, அது சரிதானே? ''ஆமென்'' என்று கூறுங்கள். (தாய்மார்கள் "ஆமென்" என்று கூறுகின்றனர்- ஆசி) நீங்கள் கொண்டுள்ள விலையேறப் பெற்ற ஒன்று என்ன வென்றால் உங்களுடைய ஆத்துமா ஆகும். 66. ஆகவே இப்பொழுது, நீங்கள் உங்கள் ஆத்துமாவை வைத்துக் கொள்வீர்களானால், அப்பொழுது அதை நீங்கள் இழக்கப் போகின்றீர்கள். நீங்கள் உங்கள் ஆத்துமாவை இழக்கச் செய்வீர்களானால், அப்பொழுது அதை நீங்கள் இரட்சித்துக் கொள்வீர்கள்; உங்கள் ஆத்துமாவை இயேசுவிடம் இழக்கச் செய்வீர்கள் என்றால், பாருங்கள். வேறு விதமாகக் கூறினால், நீங்கள் இயேசுவை விசுவாசித்தால், அவருடைய சீஷர்களாவீர்கள். ஆகவே நீங்கள் இப்படி இளம் வயதினராக இருக்கும் போது உங்களுடைய வாழ்க்கையை இயேசுவிற்கு அளித்தீர்களானால், பிறகு நீங்கள்... என்றென்றுமாய் ஜீவிப்பதற்கென அதை அவர் பாதுகாக்கப் போகின்றார். ஆனால் நீங்கள் - நீங்கள் அதை வைத்துக் கொள்ள விரும்புவீர் களானால், நீங்கள் அதை இழக்கப் போகின்றீர்கள்; ஆம், அதை இழந்து விடுவாய். இங்கே சுற்றிலும் இருக்கும் சிறுவர் சிறுமியரைப் போன்று நீங்கள் விரும்பி, பிறகு வெளியே சென்று அவர்கள் செய்வதைப் போன்று நீங்கள் செய்வீர்களானால், அப்படியானால் நீங்கள் அதை இழக்கப் போகின்றீர்கள். ஆனால் உங்கள் வாழ்க்கையை இயேசுவிற்கு அளிக்க விரும்புவீர்களானால், அப்பொழுது அதை நீங்கள் நித்தியத்தி கென்றும் என்றென்றுமாக காத்துக் கொள்வீர்கள். இப்பொழுது, நீங்கள் அதை நினைவில் கொள்ளுங்கள். உங்களுடைய சிறிய ஆத்துமா தான், உலகத்திலேயே மிகவும் விலையேறப் பெற்ற ஒன்றாகும். ஆகவே நீங்கள் அதை வைத்துக்கொள்வீர் களானால், அதை இழந்து போவீர்கள், அதை இயேசு விற்களித்தீர் களானால், அதை இரட்சித்துக் கொள்வீர்கள். என்னுடன் சேர்ந்து அதைக் கூறுவீர்களா? அப்ப... கூறுங்கள், ''நான் அதை வைத்துக் கொள்வேன் என்றால்" (சிறுவரும், சிறுமியரும் ''நான் அதை வைத்துக் கொள்வேன் என்றால் என்று கூறு கின்றனர் -ஆசி) ''அதை நான் இழந்து போவேன்' (''அதை நான் இழந்து போவேன்''); ''அதை நான் இயேசுவிற்கு கொடுத்தால்'') ''அதை நான் காத்துக் கொள்வேன்'' (''அதை நான் காத்துக் கொள்வேன்"] அது தான்! இப்பொழுது நீங்கள் அதை கிரகித்துக் கொண்டீர்கள். அது மிகவும் 67. எல்லா தாய்மார்களும் அது நல்லது என்று எண்ணுகிறீர்களா, ''ஆமென்'' என்று கூறுங்கள்... தாய்மார்கள் ஆமென்! என்கின்றனர்-ஆசி) ஓ, அது அருமையானது! நல்லது. 68. இப்பொழுது, நீங்கள் பாருங்கள், நீங்கள் செய்ய வேண்டிய ஒரு காரியம் உண்டு. இப்பொழுது, நீங்கள் முன்னோக்கிச் செல்லுங்கள். அவர்கள் அதைப் போன்று நடக்க விரும்பினால், தங்கள் உலகின் தேவைகளை பெற்றுக் கொண்டால், சிறுவரும், சிறுமியரும் அங்கே வெளியே சென்று காரியங்களைச் செய்து, கதைகளைக் கூறி, தவறான காரியங்களைப் பேசி, ஏமாற்றி, திருடி, கெட்ட காரியங்களைச் செய்து, பள்ளிக் கூடங்களில் காப்பி அடித்து, காரியங்களைச் செய்து, முன்னே செல்வார்களானால் அவர்கள் இழந்து விடுவார்கள். அதை அவர்கள் இழந்து விடுவார்கள். ஆனால், அவைகளைச் செய்யாதிருந்து, இயேசுவிடம் அதை [ஆத்துமாவை - தமிழாக்கியோன்) அளித்தீர்களானால், அப்பொழுது அதை அவர்கள் காத்துக் கொள்வார்கள். அதைத் தான் நீங்கள் செய்ய விரும்பு கிறீர்கள். அப்படித் தானே? 69. இப்பொழுது நம்முடைய சிறிய கதையை நாம் ஆரம்பிக்கப் போகின்றோம். இப்பொழுது அது தான் நம்முடைய பின்னணி, இப்பொழுது அதை நினைவில் கொண்டிருக்கிறீர்களா. இப்பொழுது நம்முடைய சிறிய கதையை ஆரம்பிப்போமாக. இப்பொழுது வயது சென்ற மக்களுக்கு, தாய்மார்கள், தந்தைகள், நீங்களும் கூட கவனியுங்கள். இப்பொழுது விசேஷமாக தாய்மார்களும், தந்தை மார்களும். இப்பொழுது சற்று... நாம் ஆரம்பிப்போம். சிறிய கதைகளை நீங்கள் விரும்புகிறீர்களா? அப்படியா? ஓ, அவைகளை நான் மிகவுமாக விரும்புகிறேன். முக்கிய மாக இப்பொழுது... உண்மை யில்லாத அநேகக் கதைகளை நீங்கள் படிக்கின்றீர்கள். ஆனால் இந்த கதையோ உண்மையான தாகும்; அதின் ஒவ்வொரு வார்த்தையும் முற்றிலும் சத்தியம் ஆகும். அது தேவனுடைய வேதாகமத்தில் உள்ளது. ஆதலால் அது சத்தியமாகத் தான் இருக்க வேண்டும், ஏனெனில் அது தேவனுடைய வார்த்தையாகும். தேவனுடைய வார்த்தை தான் சத்தியம். 70. 'இப்பொழுது, உனக்குத் தெரியுமா? நான் மிகவுமாக களைத்துப் போயிருக்கின்றேன். நான்-நான்-நான் மரித்துப் போகும் அளவிற்கு களைத்துப் போய் சோர்வாயிருக்கின்றேன்'' என்றான். 71. "நல்லது, ஏன் நீங்கள் மேலே சென்று படுக்கைக்கு செல்லக் கூடாது? அங்கே கட்டிலின் மேலே, சோபாவின் மேலே சென்று படுக்கக் கூடாதா?' என்றாள். 72. அதற்கு அவன், "ஆனால், ஓ நான் மிகவுமாக சோர்ந்து போயிருக்கிறேன், ஓ, தேனே, நான் பார்த்ததை நீ பார்த்திருந்தாயானால், ஓ, நான்... என்னால், நான்... எனக்கு இரவு ஆகாரம் கூட தேவை யில்லை. ஓ, நான் இன்று கண்ட அந்த காட்சி, அது பயங்கர மானதாய் இருந்தது!'' என்றான். அவள், ''நல்லது, நீர் பார்த்தது என்ன?' என்றாள். 73. அதற்கு அவன், "குழந்தைகளுக்கு முன்பாக அதை நான் உனக்கு சொல்ல முடியாது, ஓ, அது மிகவும் பயங்கரமானது. என்னே, அது மோசமானது" என்றான். ''நல்லது, நீங்கள் கண்ட காட்சி என்ன?' 74. "நல்லது, நான் மேலே சென்று சிறிது நேரம் படுத்துக் கொள்கிறேன், இரவு ஆகாரத்திற்குப் பிறகு - பிறகு நாம் குழந்தைகளை படுக்கையில் உறங்க வைத்த பிறகு இன்று நடந்ததை நான் உனக்கு கூறுகிறேன்'' அவள், "அது சரி'' என்றாள். 75. ஆகவே அவன் மேலறைக்குச் சென்று படுத்துக் கொண்டான். ''ஓ, மிகவும் சோர்ந்து போயிருக்கின்றார்! ஓ, என்னே! ''உங்கள் அப்பா மிகவுமாக மிகவுமாக களைத்துப் போயிருக்கின்ற வேளையில் எப்படியிருப்பார் என்று உங்களுக்குத் தெரியுமா? 76. ஆகவே சிறிது நேரம் கழித்து, அந்தச் சிறிய வெளுப்பான கண்களை உடைய அந்தச் சிறிய சிறுமி தரையில் சத்த மிட்டு சுற்றிலும் ஓடத் துவங்கினாள். ''உஷ்-உஷ்-உஷ், அதைச் செய்யாதே. அப்பாவை எழுப்பி விடுவாய். ஓ, அவர் மரித்துப் போனால் நலமாயிருக்கும் என்கிற அளவிற்கு அவர் களைத்துப் போயிருக்கிறார். இனி உயிர் வாழ அவர் விரும்பவில்லை. ஆகவே அப்பா சிறிது களைத்து போனால், நல்லது, சிறிது நேரம் அவரை தூங்க விட வேண்டும். அவரை எழுப்பி விடாதே என்றாள். ஆகவே சிறிய மிரியாம் அங்கே சென்று மிகவும் அமைதியாயிருக்கத் தக்கதாக அமர்ந்து கொள்கிறாள். 77. சிறிது நேரம் கழித்து இரவு ஆகாரத்தை தயார் செய்த பிறகு அவள் மெதுவாக படிகளின் மேலே சென்று ''அம்ராம்?'' என்று அழைக்கிறாள். 78. அதற்கு அவன், ''ஆம், யோகெபேத், அன்பே நான் கீழே வருகிறேன்" என்றான். ஆகவே அவர்கள் படிகளின் வழியாக கீழே வந்து ஒரு அருமையான இரவு ஆகாரத்தை உண்கின்றனர். 80. இரவு ஆகாரத்தை அவர்கள் உண்ட பிறகு, அந்த சிறிய பையனும் சிறுமியும் தங்கள் இரவு ஆகாரத்தை உண்ட பிறகு, அந்தத் தாய் எல்லாவற்றையும் சரி செய்து அவர்களை படுக்கையில் படுக்க வைத்தாள். ஆகவே அதன் பிறகு அவளும் அவளுடைய புருஷனும் அறையில் சென்று அமர்கின்றனர். "நல்லது, இப்பொழுது, அம்ராம், நீர் இனியும் வாழ விரும்பாத அளவிற்குச் செய்து, உம்மை மிகவுமாக மிகவுமாக இன்றிரவு பாதிப்படையச் செய்த, எப்படிப்பட்டதான ஒரு காரியத்தை இன்று நீர் கண்டீர்'' என்றாள். 81. 'ஓ, இனியவளே, அதை என்னால்-என்னால் புரிந்து கொள்ள முடிய வில்லை. நான் கண்டேன்... நல்லது, நாம் அதை ஒவ்வொரு நாளும் காண்கிறோம். ஆனால் இன்றைக்கோ, ஓ, நான் - நான் என்றுமே கண்டிராத ஒரு கோரமான காட்சியை நான் கண்டேன். நம்முடைய ஏழை பையன்கள் அவர்களில் சிலருக்கு பன்னிரண்டு வயது கூட இருக்காது, அதைப் போன்று கயிறுகள் அவர்கள் கழுத்துகளில் சுற்றப் பட்டிருந்தது. அந்தச் சிறு பிள்ளைகள் அவர்களால் இழுக்க முடிந்த அளவிற்கு இழுத்தனர். அந்த பெரிய பெரிய மகத்தான சரிவில், அந்த பெரிய கற்களை வைத்துக் கொண்டு, அவர்களால் இன்னுமாக இழுத்துச் செல்ல முடியவில்லை. சிறிது நேரம் கழித்து அந்த கற்கள் அடங்கிய பெட்டி மெதுவாக வேகம் இழந்து சிறிது நேரம் கழித்து நின்று விட்டது. அப்பொழுது அந்தச் சாலையின் வழியாக ஒரு மனிதன் வந்தான், ஓ, அவனுக்கு பைத்தியம் பிடித்திருந்தது. அவன் "ஏன் வண்டியை நிறுத்துகிறீர்கள்? ஊம்' என்று கர்ஜித்தான். பாம்பைப் போன்ற அந்த பெரிய சாட்டை களினால் அவர்களை அடித்ததால் அவர்கள் முதுகில் இரத்தம் பீறிட்டு வந்தது. அந்த ஏழைப் பிள்ளைகள் கயிற்றில் தொங்கி அழுதுக் கொண்டிருந்தனர்'' என்றான். "ஓ, யோகெபேத், தாயானவளே, நம்மால் என்ன செய்ய முடியும். நாம் தேவனுடைய ஜனங்கள். தேவன் நம்மை ஆசீர்வதித்தார். ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபின் பிள்ளைகள் நாம். ஆகவே நாம் ஏன் இக் காரியங்களுக்கு அடிமைகளாய் இருக்க வேண்டும்? அந்த ஏழைப் பிள்ளைகள் அழுத்து எவ்வளவு பயங்கரமாய் இருந்தது. ஓ நான் ஜெபிக்கிறேன், ஜெபிக்கிறேன், ஜெபித்து கொண்டேயிருக்கிறேன். யோகெபேத், தேவன் எனக்குச் செவி கொடுத்துக் கேட்பதேயில்லை என்பது போல இருக்கின்றதே. நான் ஜெபிக்கிறேன், ஜெபிக்கிறேன். அவர் எனக்குச் செவி கொடுக்க மறுப்பது போன்று தெரிகின்றதே, அவர் காது கொடுத்துக் கேட்பதேயில்லை. எதற்குமே கவலை கொள்ளாதவர் போல அவர் காணப்படுகின்றாரே" என்று கூறினான். 82. அதற்கு அவள், ''இப்பொழுது அம்ராம் இங்கே பாருங்கள், நீர் அவ்வாறு பேசும் நபர் கிடையாதே. நீர் ஒரு உண்மையான தகப்பனாயிற்றே. ஆகவே நீர். நீர் பேசுவது போன்று அது இல்லையே, ஏனென்றால் நீர் தேவனிடம் விசுவாசம் வையுங்கள் என்று எங்களை எப்பொழுதுமே ஊக்கப்படுத்திக் கொண்டே இருந்தீர் அல்லவா'' என்றாள். 83. "ஓ, ஆனால், அன்பே, நான் அதிகமாக ஜெபிக்கையில், இன்னுமாக தேவன் எனக்கு செவி கொடுக்காமல் இருக்கின்றார், காரியங்கள் இன்னுமாய் மோசமாக ஆகின்றது போல் தோன்றுகிறது. எவ்வளவு அதிகமாக நான் ஜெபிக்கிறேனோ, இன்னும் மோசமாக அது ஆகின்றது.'' 84. ஆனால் சிறு பையன்களே, சிறுமியரே தேவன் ஜெபத்தைக் கேட்கின்றாரா? (சிறுவரும் சிறுமியரும் ''அவர் ஜெபத்தைக் கேட்கின்றார்'' என்று பதிலளிக்கின்றனர் - ஆசி). அவர் ஜெபத்தைக் கேட்கின்றார். தேவன் ஜெபத்திற்கு பதிலளிக்கின்றாரா? [''ஆம்'') ஆமாம். உடனடியாக அவர் பதிலளிக்கிறாரா? எல்லா நேரத்திலும் அல்ல. அப்படி செய்கிறாரா? இல்லை. சில சமயங்களிலும் அவர் நம்மை காத்திருக்கச் செய்கின்றார்? அது சரிதானே (''ஆம்'']. ஆனால், தேவன் ஜெபத்திற்கு பதிலளிக்கின்றார். அப்படித் தானே? ஆகவே எல்லாக் காரியங்களும் தவறாகப் போகின்றது என்றால் நாம் ஜெபம் செய்வதை நிறுத்த வேண்டும் என்பதற்கு அது அடையாளம் அல்ல. எப்படியாயினும் நாம் ஜெபித்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்படித்தானல்லவா? அது சரி. இப்பொழுது நீங்கள் சரியாக பதிலளித்தீர்கள். தேவன் ஜெபத்திற்கு பதிலளிக்கின்றார். நாமெல்லாரும் சேர்ந்து இதைக் கூறுவோமாக (சகோதரன் பிரான்ஹாமும் சபையோரும் ''தேவன் ஜெபத்திற்கு பதிலளிக்கின்றார்'' என்று கூறுகின்றனர் - ஆசி) ஆம். சூழ்நிலைகள் எவ்வாறு இருப்பினும் அதைக் குறித்து ஒன்றுமேயில்லை, எப்படி யாயினும் அவர் பதிலளிக்கின்றார். அது சரி. "நல்லது மறுபடியுமாக ஜெபிக்க நீர் மேலே செல்லப் போகின்றீரா?'' என்றாள். 85. "ஆம்" ஆகவே மேல்மாடியில் உள்ள ஒரு சிறு ரகசிய அறை அப்பாவிற்கு இருந்தது. அதில் அவன் சென்று ஜெபிப்பது வழக்கமா யிருந்தது. ஆகவே அந்த இரவு அவன் எழுந்து முழங்காலிட்டு, அவன் கூறினான். இப்பொழுது ''யோகெபேத் நீயும் குழந்தைகளும் படுக்கச் செல்லுங்கள். என்னை எழுப்பாதே. ஏனெனில் நான் ஜெபம் செய்யப் போகிறேன், ஒருவேளை இன்றிரவு முழுவதும் ஜெபிப்பேன்" என்றான். 86. ஆகவே அவன் முழங்காலில் நின்று ஜெபிக்கின்றான். ஜெபித்துக் கொண்டேயிருக்கிறான். "ஓ, ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபின் தேவனே, உம்முடைய ஜனங்களுக்குரிய உம்முடைய வாக்குத்தத்தத்தை நினைவு கூறும்! இங்கே எகிப்தில் அடிமைகளாக நாங்கள் இருக்கின்றோம். ஓ, எங்களை வேலை வாங்கும் கொடியவர்கள் எங்களை அடித்து துன்புறுத்தி காரியங்களை செய்ய வைக்கின்றனர். எங்கள் ஏழை ஜனங்கள் நிர்வாண மாக்கப்பட்டு சுள்ளிகளை உடைய சாட்டைகளினால் அடிக்கப் படுகின்றனர். நாங்கள் உம்முடைய ஜனங்கள். ஓ, தேவனே, நிச்சயமாக நீர் ஜெபத்தைக் கேட்பவர் நிச்சயமாக நீர் ஜெபத்திற்கு பதிலளிப்பவர் நான் ஜெபிக்கிறேன், ஜெபிக்கிறேன், ஜெபித்துக் கொண்டே யிருக்கின்றேனே, நீரோ எனக்கு பதிலளிக்காதவர் போன்று காணப் படுகின்றதே. ஆனால் தேவனே நீர் தேவன் என்றும், முடிவிலே ஜெபத்திற்கு பதிலளிக்கின்ற தேவன் என்றும் நான் விசுவாசிக்கிறேன்" என்று அவன் தன் கைகளை உயர்த்தி கூறுவதை நான் காண்கிறேன். ஆகவே ஏறக்குறைய இரவு முழுவதும் இவ்வாறு ஜெபித்துக் கொண்டே இருந்தான். 87. அடுத்த நாள் காலை மூன்று அல்லது நான்கு மணியளவில் அந்தச் சிறிய படிகளின் வழியாக கீழே வருகின்றான். அவன் அங்கே நோக்கிப் பார்க்கின்றான், அங்கே அவனுடைய அருமையான சிறிய யோகெபேத் கட்டிலில் படுத்து அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள். சிறிய ஆரோனும், சிறிய மிரியாமும் ஏற்கனவே படுக்கையில் படுக்க வைக்கப் பட்டிருந்தனர். ஆகவே, அந்த பிள்ளைகளும் ஆழ்ந்த நித்திரையில் இருந்தனர். அது சரி. அவன் அவளிடம். அவள் மிகவும் நேரமாகிவிட்டிருக்கின்றதே, நீர் இப்பொழுது தானா உள்ளே வருகின்றீர்?'' என்றாள். 88. ''ஆமாம், இரவு முழுவதும் நான் ஜெபித்தேன்,'' ஆகவே யோகெ... (ஒலிநாடாவில் காலியிடம் -ஆசி].... கண்ணீரால் நிறைந்திருந்தது. ஏனெனில் அவன் ஜனங்களுக்காக அழுது கொண்டிருந்தான். 89. ஆகவே, அவள், "இப்பொழுது இங்கே பார் அம்ராம், நீங்கள் இவ்வளவு பிரயாசப்படக் கூடாது'' என்றாள். 90. அவன், ''இப்பொழுதும், அன்பே, கவனி. அது அருமையானது. ஆனால் இப்பொழுது கவனி, நீ வளர்க்கத் தக்கதாக இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். ஆகவே இந்த பாரம் என்னுடையது. நம்முடைய ஏழை ஜனங்களுக்காக யாராவது ஜெபிக்காவிட்டால் அவர்களுடைய கதி, நிலைமை எப்படியாகும். அந்த ஜனங்களை யாராவது இருதயத்தில் வைத்திராவிட்டால் என்ன ஆகும்? யாராவது ஒருவர் ஜெபித்து தான் ஆகவேண்டும். அவள், ''நல்லது அம்ராம். அந்த பாரம் அனைத்தும் உம்முடைய தல்ல'' என்று கூறுகிறாள். 91. ''நல்லது அப்படித் தான் காணப் படுகின்றது. ஆனால் எப்படியாயினும், எல்லா நேரத்திலும் நான் ஜெபிப்பேன்!'' 92. அந்த நாளிலே அவன் வேலைக்குச் செல்கின்றான். ஆகவே அவன் ஒவ்வொரு நாளும் அவன் வந்து அதே கடின உழைப்பை உழைத்து விட்டுச் செல்கின்றான். மிகக் கடினமான வேலை அவனுக்கு இருந்தது. அவன் அந்த... அவர்கள் பெரிய பீப்பாய்களில் சுண்ணாம்புக் கலவையை கொட்டுவார்கள். அவன் அந்த பெரிய அக்கினிச் சூளைக்கு அருகில் நிற்க வேண்டும். அவர்கள் அதைத் திறந்த போது, ஓ, என்னே, அது ஏறக்குறைய அவனுடைய தோலை வெடிப்புறச் செய்யும். அவ்வளவு பயங்கரமான வெப்பம்! அவன் அந்த செங்கல்களை அதற்குள் தள்ளி அவைகளைப் பெரிய மகத்தான சாலைகளை, மகத்தான பெரிய கோபுரங்களை கட்டவும், விக்கிரக தேவர்களுக்காகவும் மற்ற காரியங்களுக்காக உபயோகப் படுத்தத்தக்கதாக அவன் சுட்டு வெளியே எடுப்பான். எதிரிக்காக இந்த உண்மையான கிறிஸ்தவன் அவ்வாறு வேலை செய்து கொண்டிருக்கின்றான். ஆனால் அவன் ஒரு அடிமையாக சிறைப் படுத்தப் பட்டிருக்கிறான். அவன் அதைச் செய்தேயாக வேண்டும். 93. ஒவ்வொரு இரவும் அவன் வீட்டிற்கு வந்த பிறகு ஜெபிப்பான். மறுபடியுமாக அவன் படிகளின் மேலே சென்று ஜெபிப்பான், ஜெபிப்பான், ஜெபித்துக் கொண்டேயிருப்பான், பிறகு கீழே வருவான். நிலைமை சீரடையவில்லை; இன்னும் மோசமாகிக் கொண்டே இருந்தது. 94. ஒரு நாள் அவன் வேலையில் இருந்த போது ஒரு வதந்தியை அவன் கேள்விப் பட்டான். "என்ன அது? என்ன அது என்னிடம் கூறுங்கள்!'' என்றான். யாரோ ஒருவரோடொருவர் முணுமுணுத்துக் கொண்டிருந்தனர். சிறிது நேரம் கழித்து என்ன நடக்கப் போகின்தென்ற அந்தச் செய்தி முழு தேசத்திற்கும் பரவியிருந்தது. 95. அது என்ன? அந்த இரவு சங்கம் ஒன்று கூடப் போகின்றது. அந்த வயதான துஷ்ட பார்வோன் ராஜா ஒரு பெரிய ஆலோசனை சங்கத்தை கூட்டுவதற்காக தன்னுடைய எல்லா ஜனங்களையும் கூட்டி அழைக்கப் போகின்றான். அங்கே ஒருபெரிய ஆலோசனை சங்கக் கூட்டத்தை அவர்கள் நடத்தினர். 96. ஆதலால் அந்த இரவு அவன் உள்ளே செல்கிறான், ஓ, அவன் மிகவுமாக சோர்ந்து போயிருந்தான். அவன் உள்ளே செல்கிறான், அவனுடைய மனைவி, ''அன்பே அம்ராம் '' என்றழைக்கின்றாள். அவள் அவனை கதவினருகே சந்தித்து அவனுக்கு முத்தமிட்டு ''உங்களுடைய இரவு ஆகாரத்தை சூடாக வைத்திருக்கின்றேன். ஆனால் அன்பே நீர் மிகவும் வெலவெலத்து சோர்வாகக் காணப்படுகிறீரே. என்ன ஆயிற்று?'' என்றாள். 97. "ஓ யோகெபேத் என்ன நடந்து கொண்டிருக்கிறதென்று நீ மாத்திரம் அறிந்திருப்பாயானால் ஓ, முன்பு எப்பொழுதும் இருந்திராத வகையில் மிகவும் மோசமாக இருக்கிறதே'' என்றான். ''என்ன?'' 98. ''உஷ், நான் அதைக் கூற முடியாது, பிள்ளைகள் இருக்கின்றார்கள். இரவு ஆகாரம் உட்கொள்ளும் வரை பொறுத்திரு. பிறகு அதைக் குறித்து நான் உனக்குச் சொல்கிறேன்.'' ''சரி 99. ஆகவே, இப்பொழுது அவள் இரவு ஆகாரத்தை தயார் செய்தாள். இரவு ஆகாரத்தை முடித்து, பிறகு குழந்தைகளை கட்டிலில் தூங்க வைத்தாள். 100. பிறகு அவர்கள் உள்ளே சென்றனர். அவன் "யோகெபேத், உன்னிடம் ஒன்றைக் கூற விரும்புகிறேன். மிகவும் கொடியதான காரியங்களில் ஒன்று சம்பவித்துக் கொண்டி ருக்கின்றது'' என்றான். ''என்ன?'' 101. "இன்றிரவு வேறொரு ஆலோசனை சங்கத்தை அவர்கள் கூட்டப் போகின்றார்கள். அவர்கள் அதைச் செய்யும் போது, நம்முடைய ஜனங்களின் மேல் அவர்கள் வேறொரு சுமையை அவர்கள் சுமத்தப் போகின்றனர்" என்றான். 102. ஆகவே நாம் ராஜாவின் அரண்மனைக்கு இப்பொழுது செல்லுவோம். பார்வோன் ராஜா அவர்களெல் லாரையும் வெளியே அழைத்து வருகிறான். ''அது சரி, தளபதிகளே! உங்களுக்கு என்ன ஆயிற்று? என்னுடைய உத்தரவுகளை நான் இங்கே பிறப்பிக்கிறேன். இந்த ஜனங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றனர். என்ன வாயிற்று? நாம் இதை நிறுத்த முடியாதா? என்றாவது ஒரு நாளிலே வேறொரு சேனை இங்கே வரும். இங்கே கோசேனிலுள்ள நம்முடைய இந்த எதிரிகள், இந்த இஸ்ரவேலர் அந்த சேனையுடன் இணைந்து நம்மை மேற் கொள்வார்கள். நம்முடைய மகத்தான பொருளாதார நிலை சீரழிக்கப்படும், நம்முடைய மகத்தான சாம்ராஜ்ஜியம் அழிக்கப்படும். அவர்கள் நம்மை பிடித்துக் கொள்வார்கள். உங்களுக்கு என்ன வாயிற்று? யாராவது பேசுங்கள். ஏதாவது பேசக் கூட உங்களுக்குத் தெரியாதா? என்று கூறினான். ஓ, அவன் மிகவும் கீழ்த்தரமுள்ள வனாகவும் அசுத்தமான வனாகவும் இருந்தான். எல்லா தளபதிகளும் நடுங்கிக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவன் எழுந்து ''பார்வோன் ராஜா நீடுழி வாழ்க'' என்றான். ''நல்லது நீ கூற விரும்புவது என்ன?'' 103. ''ராஜா நீடூழி வாழ்க. மேன்மை பொருந்திய ஐயா, அந்த ஜனத்தின் மேல் இன்னும் அதிகமான பாரங்களை சுமத்த வேண்டும் மென்று நான் விரும்புகிறேன்'' என்றான். 104. ''உன்னுடைய கண்கள் பிடுங்கப்பட விரும்புகிறாயா? அதிகமாக பாரங்கள் அவர்கள் மீது நீங்கள் சுமத்தியிருக்கின்றீர்கள், ஆனால் இன்னுமாக அவர்கள் தொகை பெருகிக் கொண்டே இருக்கின்றது. என்ன, நீ இதைப் போன்ற கருத்துக்களை நீ கொண்டிருந் தாயானால், அதை உன்னோடே வைத்துக்கொள்!'' ஓ, அவன் மிகவும் கடினமானவனாக இருந்தான். 105. சிறிது நேரம் கழித்து பெரிய புன்னகையோடு, பிசாசைப் போன்ற ஒருவன் எழுந்து நின்றான். அவன், ''பார்வோன் ராஜா வாழ்க வாழ்க, என்னிடம் ஒரு கருத்து இருக்கின்றது'' என்றான். ''நல்லது, பேசு அப்படியே நின்று கொண்டிருக்காதே'' என்றான் ராஜா. 106. அதற்கு அவன், ''நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்று நான் உங்களுக்குக் கூறுகிறேன். இம்மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது என்று உமக்குத் தெரியும் அல்லவா.'' 107. "ஆம்! அது சரியே'. மேலும் அவன் அந்த ஜனங்களில் சிலர் பதினான்கு பிள்ளைகள் உடையவர்களாயிருந்தனர். வேறு சிலருக்கு இருபது பிள்ளைகள் கூட இருக்கின்றனர். ஆனால் நம் ஜனத்திற்கோ ஒன்று கூட இருக்கிறதோ என்னவோ. அவர்கள் வேகமாக பெருகி தேசம் முழுவதிலும் பரவி நிரம்பியிருக்கின்றனர்'' என்றான். 108. பாருங்கள், தேவன் ஏதோ ஒன்றைச் செய்து கொண்டி ருக்கின்றார். பாருங்கள், தேவன் எப்பொழுதுமே பிசாசின் கண்களின் மேல் போர்வையைப் போர்த்தி விடுகின்றார். நீங்கள் பாருங்கள்? பாருங்கள்? தாம் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பது அவருக்கு தெரியும். பாருங்கள்? ஆகவே இந்த எல்லா ஸ்திரீகளும் நிறைய பிள்ளைகளைப் பெற்றிருந்தனர். 109. ''ராஜா நீடூழி வாழ்க!'' ''என்ன?'' ''நல்லது, என்ன வென்று நான் உங்களுக்கு கூறுகிறேன். ஒரு ஸ்திரீ ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுக்கும் ஒவ்வொரு முறையும்... தேசத்திலே தாயாக அல்லாத சில பெண்களைக் கொண்டு வாருங்கள். நீங்கள் பாருங்கள், பிள்ளைகள் இல்லாத பெண்கள், குழந்தைகளே தேவை யில்லாத பெண்கள், பிள்ளைகளையே நேசிக்காத, நீண்ட மூக்கை உடைய சூன்யக்கார கிழவிகள், பாருங்கள் எவ்வளவு நீளமாக மூக்கு இருக்கின்றதோ அவ்வளவு நல்லது! நீளமான விரல்கள், வர்ணம் தீட்டப்பட்ட முகங்களை உடைய அவர்களைக் கொண்டு வாருங்கள். தாய் அன்பு என்பது என்ன என்று தெரியாதவர்கள். ஆகவே ஒரு சிறிய ஆண் குழந்தை பிறக்கும் போது அவர்களை அனுப்புங்கள். அவர்கள் சென்று அந்தக் குழந்தையை வெளியே கொண்டு வந்து அதன் தலையை சுவற்றிலே மோதி, பிறகு பெற்ற தாயினிடத்தில் வீட்டுக்குள்ளே எறிந்து விட்டு வருவார்கள். ஒரு பெரிய கிணற்றினுள் அதைப் போட்டு விடுவார்கள். ஓ அதை விடச் சிறந்த ஒன்று என்ன வென்றால், அக்குழந்தையின் கையையும் காலையும் கட்டி, முதலைகளுக்குப் போட்டு அவைகளைக் கொழுக்கச் செய்யலாம். அதை ஒழிக்க இது தான் சிறந்த வழியாகும். பிறகு அவர்கள் பெருக மாட்டார்கள். ஏனெனில் ஒரு மனிதனும் மீதமாக விடப்பட்டிருக்க மாட்டான். எல்லா ஆண் குழந்தைகளையும் கொல்லுங்கள் என்றான். 110. அதற்கு பார்வோன், "ஓ, அது அருமையானது! அது அருமையான ஒரு திட்டமாகும். ஆகவே செய்ய வேண்டிய காரியம் அது தான் சென்று அதை... நீ... இப்பொழுது அவ்விதமான திட்டத்தை, கருத்தை நீ கொண்டிருந்தபடியால், அக்காரியத்திற்கான கண்காணியாக, மேற்பார்வையாளனாக உன்னையே நான் நியமிக்கிறேன். நீ சென்று, தாய்களே அல்லாமல், பிள்ளைகளை நேசிக்காத அந்த எல்லா கிழவிகளையும் நீ கொண்டு வா. அவர்களை... ஆம் பிசாசு எப்படிப்பட்டவன் பார்த்தீர்களா? அவன் துஷ்டன், அப்படித் தானே? 111. குழந்தையை ஒரு தாயால் தான் நேசிக்க முடியும். பாருங்கள்? தாய் உங்களை எவ்வளவாக நேசிக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா? நல்லது, பாருங்கள், சிறிய குழந்தைகளை தாய் நேசிக்கின்றாள். 112. ஆகையால் பிள்ளைகளையே கொண்டிராத, பிள்ளைகள் வேண்டாம் என்று சொல்லுகிற கீழ்த்தரமான வயது சென்ற அந்த யாரோ சில கிழவிகளை அவர்கள் கொண்டு வர வேண்டியதாய் இருந்தது. ஆகவே, அவன் அவர்களைக் காவல் துறையினராக ஆக்குங்கள். அவர்களை போலீஸ்காரிகளாக்கி, அவர்கள் விரும்பும் எந்த வீட்டிற்குள்ளும் நுழைந்து ஒவ்வொரு சிறிய குழந்தையையும் வெளியே எடுத்து அதன் தலையை சுவற்றில் மோதி, அதை முதலைகளுக்கு உணவாக போடும் படிக்கு அவர்களுக்கு கட்டளை யிடுங்கள். ஒவ்வொரு சிறிய குழந்தையையும்'' என்றான். ஓ, எவ்வளவு கொடூரமானது! பிறகு அவர்கள் என்ன செய்தார்கள் என்பது உனக்கு தெரியுமா? ''அது சரியே, அது அருமையானது!'' 113. பிறகு அடுத்த நாள் அம்ராம் அங்கே வேலை செய்துக் கொண்டிருந்த போது, இக்காரியம் தீர்மானிக்கப் பட்டதை அவன் கேள்விப்படுகின்றான். 114. ஆகவே, ஓ, அவன் வீட்டிற்கு செல்கிறான். "ஓ யோகெபேத்! அருமையானவளே, உனக்கு ஒன்றை நான் கூறட்டும். பிரகடனப் படுத்தப்பட்ட உத்தரவு என்ன வென்று நீ அறிவாயா? சிறிய குழந்தைகள் எல்லாம் கொல்லப்பட வேண்டும் என்பதே. ஓ, என்னால் அதை தாங்க முடியவில்லையே'' என்று அவளிடம் கூறினான். மறுபடியுமாக அவன் ஜெபிக்கத்தக்கதாக மேலே சென்றான். முன்பு எப்போதுமே செய்யாத வகையில் அந்த இரவு அவன் ஜெபம் செய்தான். 115. நாம் ஜெபம் செய்து கொண்டே இருக்கத் தான் வேண்டுமா? ஓ, ஜெபம் செய்து கொண்டே இரு! அது சரி தானே? ஜெபம் செய்து கொண்டே இரு. என்ன நடந்து கொண்டிருந்தாலும் பரவாயில்லை. ஜெபித்துக் கொண்டேயிரு. 116. இப்பொழுது முதலாவது காரியம் என்ன வென்று உங்களுக்கு தெரியுமா, அவன், முழு இரவும் ஜெபித்தான், "ஓ தேவனே, இரக்கமாயிரும்! தேவனே உதவி செய்யும் நீர் எவ்விதத்திலாவது எங்களுக்கு உதவி செய்யுமாறு நாங்கள் ஜெபிக்கிறோம்'' பகல் வெளிச்சம் வந்தவுடன் அவன் கீழே இறங்கி வந்தான். 117. நாளுக்கு நாள், ஓ, தேசம் முழுவதும் எப்படிப்பட்ட ஒரு கதறல், கூக்குரல், ஒவ்வொரு நாளும் தாய்மார்கள் தெருக்களில் மேலும் கீழுமாக கதறி கூக்குரலிட்டதை அவர்கள் கேட்டனர். அவர்கள் அந்த தாய்களின் கரங்களிலிருந்த சிறிய குழந்தைகளை அல்லது சிறிய சின்னஞ் சிறிய ஆண் குழந்தைகளைப் பிடுங்கினர். அந்த வயதான சூனியக்கார கிழவிகள் அங்கே சென்று அவைகளைக் காலால் பிடித்து சுவற்றில் மோதி, அவைகளைக் கொன்று முதலைகளுக்கு வீசி விடுவர். அந்த ஏழைத் தாய் முழங்காலில் நின்று, "ஓ, என் குழந்தையை எடுத்துக் கொள்ளாதே! என் குழந்தையை எடுக்காதே!'' என்று கதறி அழுவாள். ஓ எந்த விதமான நேரத்தை அவர்கள் பெற்றிருந்தனர்! 118. தாய் எப்படி குழந்தைகளை நேசிப்பாள் என்பது உங்களுக்கு தெரியும், எப்படி அவனை தாடையில் அணைப்பாள். எப்படி உன் தாய் உன்னைக் கழுவி, சுத்தம் செய்து, முத்தமிட்டு நீ எவ்வளவு அழகாய் இருக்கிறாய் என்று கூறினது உனக்கு நினைவிருக்கிறதா. எப்படி அவள் இரவில் உன்னை படுக்கையில் தூங்க வைப்பாள். ஓ, ஆகவே நீ மாத்திரம்... கதவு சிறிது திறக்கும், சிறிய உள்ளே வரும் அல்லது ஏதோ ஒன்று, ஓ, என்னே, அவள் வேகமாக ஓடி கதவை மூடி சிறிய குழந்தையை மூடி எப்படி அவள் அதைக் குறித்து அக்கறை எடுத்தாள். அவள் உன்னை நேசித்தாள். பாருங்கள்? அவள் உன்னை நேசித்தாள். ஓ, தேவன் அவளுக்களித்த அந்தச் சிறிய, ஒன்றுமே செய்ய முடியாத, தனக்குத் தானே உதவி செய்து கொள்ள முடியாத அந்தக் குழந்தையை எவ்வளவாக அவள் நேசிப்பாள். அவள் தன் சிறிய குழந்தைகளை முத்தமிட்டு அதனுடன் விளையாடுகின்றாள், ஏனெனில் அவள் ஒரு உண்மையான தாய் ஆவாள். பாருங்கள்? 119. ஆனால் தாயன்பு என்பதே தெரியாத குழந்தைகளைக் கொல்லுகின்ற இந்தக் கிழவிகள், இவர்கள் தாய்களே அல்ல. அவர்கள் நினைத்த தெல்லாம் உலகத்தின் காரியங்களைப் பற்றியும் தங்களுக்கு இருக்கும் பெரிய நேரத்தையும் தான். ஆகவே அவர்கள் சென்று, அந்தச் சிறிய குழந்தைகளைக் கொலை செய்வார்கள். நீங்கள் மிகவும் சிறியவர்களாய் இருக்கிறீர்கள். ஆனால் அது இன்னுமாக நடந்து கொண்டிருக்கிறது. அது சரி. நான் எதைக் குறித்துப் பேசிக் கொண்டிருக்கிறேன் என்பதைப் பெரியவர்களாகிய நீங்கள் புரிந்து கொள்வீர்கள். அது சரி, மிகவும் அதிகமாக இருக்கிறது! ஓ, நீங்கள் கூறலாம், ''நான் அப்படி...'' ஆனால் குழந்தைக் கருவைக் கலைத்தல் காரியமும் அதேப் போன்று தான். அது சரி. ஆனால் தாய் அன்பு என்பது என்ன வென்று அவர்களுக்கு தெரியாதிருந்தது. இப்பொழுது ''உண்மையான தாய்மார்கள்'' என்று நான் கூறும் போது என்ன கூற விழைகிறேன் என்பதை நீங்கள் கவனியுங்கள்! அது சரி. அதே பிசாசுதான். எந்த விதமான மாற்றமும் இல்லை. ஆகவே, அங்கே - அதன்பின் ஒவ்வொரு வருடமும் ஆயிரம், ஆயிரம், ஆயிரம் மடங்கு இருப்பதை நினைக்கும் போது, எகிப்தில் இருந்ததைக் காட்டிலும் அக்கிரமமாக நியாயமற்றதாய் அல்லது மோசமாக இருக்கிறது. அங்கே! 120. ஆகவே அவர்கள் உள்ளே வந்தனர். தாய் அன்பு அவர்களிடத்தில் இல்லவே இல்லை. ஆகவே, அந்தச் சிறிய குழந்தைகளை எடுத்து அவைகளைக் கொலை செய்தனர். ஓ, அது மோசமாகிக் கொண்டு, மோசமாகிக் கொண்டே போனது. பிறகு ஒருநாள் அவர்கள் ஆலோசனைச் சங்க கூட்டத்தை கூட்டப் போவதாக வேறொரு வதந்தி வந்தது. 121. பார்வோன் தன்னுடைய ஆலோசனை சங்கத்தைச் சேர்ந்த எல்லோரையும் ஒன்று கூட்டினான், அவன் அங்கே வந்து, ''அது சரி, அவர்கள்; இன்னுமாக அதிகரித்துக் கொண்டேயிருக்கின்றனரே அதைக் குறித்து நாம் இப்பொழுது என்ன செய்வது?'' என்றான். 122. இந்த குழைந்த, சேற்று சாக்கடையான பிசாசின் முகத்தை உடைய இந்த ஆள் எழுந்து ''பார்வோன் ராஜா நீடூழி வாழ்க. எனக்கு ஒரு திட்டம் உள்ளது. பாருங்கள், ஆண்கள் தான் வேலை செய்கின்றனர். செங்கல் சூளையில் ஒரு நாளுக்கு இவ்வளவு என்று அறுக்க வைக்கிறீர், வைக்கோலை உபயோகித்து செங்கல் தயாரிக்கச் செய்கின்றீர். சிறிய குழந்தைகளைக் கொன்று போட்டீர். மற்றவைகளைச் செய்தீர், ஆனால் இன்னுமாக அவர்கள் தொகை அதிகரித்துக் கொண்டு தான் இருக்கின்றது. ஆகவே நீர் செய்ய வேண்டிய காரியம் என்னவெனில், ஸ்திரீகளையும் வேலை செய்ய வைப்பதே ஆகும். ஆகவே நீர் ஸ்திரீகளை வேலை செய்ய வைத்தால், அப்பொழுது அவர்களால்...'' என்றான். இப்பொழுது அது ஒரு ஸ்திரீயின் ஸ்தானம் அல்ல. இல்லை. ஆகவே அவன் மேலும் ஆனால் நீர் ஸ்திரீகளை வேலை செய்ய பணித்து, அவர்களையும் செங்கல் அறுக்க அங்கே நீர் வைத்தீரானால், ஆகவே அவர்கள் பிறகு வீடு திரும்பும் போது மிகவுமாக சோர்ந்து போய், தங்கள் புருஷர்மார்களுக்கு தேவையான இரவு உணவு ஆகாரத்தை சமைக்க முடியாது. ஒரு நல்ல தாயாக அவர்களால் இருக்க முடியாது. பாருங்கள், ஆகவே அவர்கள் வேலைக்குச் சென்று அவ்வாறே செய்வார்களாயின், அவர்களால் - அவர்களாலே அதைச் செய்ய முடியாது. ஆதலால், அவர்களையும் வேலையில் கொண்டு போய் அமர்த்தச் செய்யும்'' என்று கூறினான். 123. "அது அருமையானது! என்னே, நீ ஒரு அறிவாளி.'' ஆகவே அவன் எல்லா ஸ்திரீகளும் வேலை செய்ய வைக்கின்றான். 124. ஆகவே இந்த ஏழை அம்ராம் அந்த இரவு வருகிறான். ''ஓ, யோகெபேத், நாம் என்ன செய்யப் போகிறோம் என்று தெரிய வில்லையே. இப்பொழுது அவர்கள் எல்லா ஸ்திரீகளும் வேலை செய்ய வேண்டும் என்று பணிக்கின்றனரே. நான் - நான் உன்னிடம் கூறகிறேன், ஓ என்ன செய்ய வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை! நாம்-நாம்-நாம் அடிமைகள் மாத்திரமே, நமக்கு காரியங்கள் இன்னும் மோசமாகிக் கொண்டே, மோசமாகிக் கொண்டே போகிறதே. நான் இதை முன்னுரைக்கிறேன்; தேவன் நமக்கு ஏதாவது செய்வாரென்றால், அது நாமெல்லாரும் மரித்த பிறகே இருக்கும்'' என்று கூறுகிறான். 125. இப்பொழுது, தேவன் அவ்வாறே காத்துக் கொண்டிருப்ப தில்லை. அப்படியா? இல்லை, தேவன் நம்மைக் கூர்ந்து கவனித்துக் கொண்டி ருக்கின்றார். அவர் அப்படித் தானே? அது சரி. 126. ஆகவே பிறகு அந்த இரவு அவன், ''நான் மேலே போகிறேன், முன்பு எப்பொழுதுமே ஜெபித்திராத வகையில் நான் ஜெபிக்கப் போகிறேன்" என்றான். 127. இப்பொழுது, ஜெபம் அப்படித் தான் செய்யப்பட வேண்டும். அப்படித் தானே? நீங்கள் முன்பு எப்பொழுதுமே ஜெபித்திராத வகையில் நீங்கள் ஜெபம் செய்யுங்கள், சீக்கிரம் அலுவலில் இறங்குங்கள்! பாருங்கள் நீங்கள் சென்று "கர்த்தாவே இன்னார் இன்னாரை ஆசீர்வதியும்'' என்று மாத்திரம் கூறுவீர்களானால் அதைக் குறித்து தேவன் அவ்வளவாக அக்கறைக் கொள்வதில்லை. சிறு பையன்கள், சிறுமிகளாகிய நீங்கள் உங்கள் அலுவல்களில் ஈடுபடும் போது அதைச் செய்கிறீர்களா? அதை நீங்கள் பள்ளிக் கூடங்களில் செய்கிறீர்களா? பள்ளிக் கூடத்தில் உங்களுக்கு உதவி செய்ய தேவனிடத்தில் கேட்கிறீர்களா? நீங்கள் பள்ளிக் கூடத்திற்கு செல்லும் போது, அங்கே நீங்கள் நல்ல மதிப் பெண்களைப் பெறாவிடில், நீங்கள் சென்று, ''தேவனே எனக்கு நீர் எனக்கு உதவ வேண்டுகிறேன்'' என்று கூறுகிறீர்களா? 128. நீங்கள் ஜெபம் செய்கிறீர்களா? எத்தனை சிறு பையன்கள், சிறுமிகள் ஜெபிக்கின்றீர்கள். உங்கள் கரங்களை நான் காணட்டும். ஓ, அது அருமையானது. இப்பொழுது, அது அருமையானது. உன் அம்மாவும் அப்பாவும் உன்னைக் காணக் கூடாதவாறு, நீங்கள் ஜெபிக்கத்தக்கதாக உங்களுக்கு ஒரு ரகசிய அறை இருக்கின்றதா? நீ அவ்வாறு ஜெபிக்கிறாயா? அந்த விதமாக நீ ஜெபிப்ப தில்லையா? ஒரு சிறிய இடத்தை வைத்துக் கொண்டு, சென்று உங்களுடைய சிறிய ஜெபத்தை செய்யுங்கள். ஒவ்வொரு இரவும் தூங்கச் செல்லும் முன்பு நீங்கள் அதைச் செய்கிறீர்களா? பிறகு காலையில் எழுந்தவுடன்? ஓ, அது அருமையானது. ஜெபிக்கின்ற சிறுவர் சிறுமியர் இந்த கட்டிடத்தில் உள்ளனர். கைகளை உயர்த்துங்கள். ஓ, அது மிக அருமையானதல்லவா! நல்லது, இப்பொழுது, இது அருமையானது. அது எதைக் காண்பிக்கிறது என்றால் இக்காரியங்களை உனக்கு கற்றுக் கொடுக்கும் உண்மையான தாயும் தந்தையையும் நீ பெற்றிருக்கின்றாய் என்பதே. இப்பொழுது, உண்மை யாகவே உங்களுக்கு தேவையிருக்கும் பட்சத்தில், நீங்கள் ஊக்கமாக ஜெபிக்க வேண்டும். அப்படி செய்கிறாயா? 129. ஆதலால் இந்தச் சிறிய அம்ராம் மேலே செல்கிறான். ஓ, என்னே! அவனுக்கு இரவு ஆகாரம் தேவையாயிருக்கவில்லை. அவன், "ஓ, என்னே, மிகவும் மோசமாக இருக்கிறதே!'' என்றான். அவள், "ஓ, என்னப்பா நீர் இரவு ஆகாரம் உண்ண வேண்டும்;'' என்றாள். ''யோகெபேத், என்னால் முடிய வில்லை. என்னால் முடிய வில்லை. நான் - நான்...'' 130. "ஓ நீங்கள் இளைத்துக் கொண்டே வருகிறீர்கள், உங்களுக்கு நரம்பு தளர்ச்சி உண்டாகிறது, முகத்தில் இரத்தமே இல்லாமல் வெளுப்பாய் காணப்படுகிறது. உங்கள் உணவை வாந்தி எடுத்து விடுகிறீர்களே. 131. "ஓ என்ன செய்வ தென்று எனக்குத் தெரிய வில்லையே! ஆனால், அன்பே, யாராவது இந்த ஜனத்தின் பாரத்தை இருதயத்தில் கொள்ள வில்லையானால், யாராவது இந்த ஜனத்திற்காக ஜெபம் செய்ய வில்லையெனில், நாம் என்ன செய்ய முடியும்? நம் நிலைமை இன்னும் மோசமாகிக் கொண்டே செல்கின்றது. நிச்சயமாக, ஒரு நாளிலே தேவன் செவி கொடுப்பார்.'' 132. ஆம், அது சரி. அது சரி. தேவன் கேட்பார். நீ உன் அலுவலைச் செய்யத் துவங்கி அதிலே நிலைத்து நில். 133. ஓ, இந்த முறை அவன் வித்தியாச மானவனாக மேலறைக்குச் செல்கிறான். இப்பொழுது அவன் மேலே சென்று முழங்காற் படியிட்டு, தன் கைகளை மேலே உயர்த்தி, "தேவனே, நான் இப்பொழுது உம்முடன் பேசுகிறேன்!'' ஆமென், அதுதான் அலுவலில் ஈடுபட ஆரம்பித்தல்! தேவனே, உமக்கு காதுகள் உள்ளன. ஆதலால் உம்மால் கேட்க முடியும். உமக்கு கண்கள் உள்ளன. ஆதலால் உம்மால் காண முடியும். உமக்கு ஞாபக சக்தி உள்ளது. ஆதலால் உம்முடைய வார்த்தையை நீர் அறிந்திருக்கிறீர். உம்முடைய வாக்குத்தத்தத்தையும் நீர் அறிந்திருக்கிறீர். நான் உம்மிடம் மன்றாடுகிறேன், தேவனே இங்கே நோக்கிப் பாரும். ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபின் தேவனே உம்முடைய ஜனங்கள் துன்பத்தில், துயரத்தில் தவித்து மரித்துக் கொண்டிருக்கிறார்களே. எங்களுக்கு ஏதாவ தொன்றை உடனே செய்தருளும் தேவனே! உம் ஒருவரைத் தான் நாங்கள் நம்பியிருக்க முடியும். நாங்கள் உம்மைத் தான் கொண்டிருக்க முடியும். அல்லது நாங்கள் மரித்துப் போவோம். உம்மைத் தான் நாங்கள் நம்பியிருக்க முடியும். நாங்கள் உயிர் வாழ்வோமானால், உம்மைத் தான் நாங்கள் கொண்டிருக்க முடியும்.'' என்று கதறினான். அந்த விதமான நேரத்தில் தான் நீ உண்மையாகவே ஜெபம் செய்வாய். ஓ, அவன் ஜெபித்துக் கொண்டிருந்தான். 134. உங்களுக்கு தெரியுமா, சில சமயங்களில் மக்கள் ஜெபம் செய்யும் போது, களைத்துப் போய் விடுகிறார்கள். தாய் தந்தையரே, அப்படித் தானே? ஓ, மிகவுமாக களைத்துப் போய் விடுகின்றனர்! சகோதரன் பிரான்ஹாம் சில சமயங்களில் மிகவுமாக சோர்ந்து போய் விடுகின்றார். நான் நீண்ட நேரம் ஜெபம் செய்யும் போது ஏறக்குறைய மயங்கி விழுந்து விடுவேன்; அப்படியே மயங்கி விழுந்து, நாட்கணக்காக உணவும் மற்ற காரியங்களையும், உட் கொள்ளாமல், ஜெபித்து, ஜெபித்து, ஜெபித்து, பிரசங்கித்துக் கொண்டிருத்தல். நான் மயங்கி விழுகின்ற நிலைக்கு நான் வந்து விடுவேன். சில சமயங்களில் ஜனங்கள் அவ்விதமாக ஆகிவிடுவர். அப்படி யென்றால் அதை விட்டு விட வேண்டும் என்பதல்ல. தொடர்ந்து சென்று கொண்டே இரு! தேவன் பதிலளிப்பார். ஆம் ஐயா. அப்படியே பிடித்துக் கொண்டிரு! ஆம், ஐயா. 135. ஆதலால், அந்த பழைய சிறிய படிகளின் மேல் அவன் செல்கிறான். அங்கே யோகெபேத் வந்து, "ஓ, அம்ராம், அப்படி இருக்காதீர்கள். தேனே, நான் - நான் விசுவாசிக்கிறேன்...' என்று கூறுவது என்னால் காண முடிகிறது. 136. அவள் ஒரு அழகான, அருமையான ஒரு சிறிய தாய். அவன் அவளை தட்டிக் கொடுத்துக் கொண்டே, இப்பொழுது யோகெபேத், கவனி, நீ ஒரு அருமையான... தாய், நீ சென்று ஆரோனையும் சிறிய மிரியாமையும் தூங்கவை. நான் ஜெபிக்க மேலே செல்கிறேன். நான் அழுது கொண்டிருக்கும் சத்தத்தை நீ கேட்பாயானால், நீ மேலே வராதே என்று கூறிச் சென்று கொண்டிருந்தான். 137. "நல்லது, ஆனால் அம்ராம், தேனே, நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? ஏறக்குறைய மரித்தாற் போல் இருக்கிறீர்களே.'' 138. ''ஆம், ஆனால் அந்த ஜனங்களுக்கான பாரத்தை என் இருதயத்தில் கொண்டவனாய் நான்-நான்-நான் இருக்கிறேன். அதைக் குறித்து ஏதாவதொன்றை நான் செய்தாக வேண்டும். என் முழங்காலில் நான் நின்றாக வேண்டும். ஆகவே எல்லா ஜனங்களும்...'' என்றான். மேலும் அவன், ''இன்றைக்கு தான் அங்கே செங்கற் சூளையின் அருகில் நின்று ''நல்லது பிள்ளைகளே, தேவன் செவி கொடுப்பார்!'' என்று கூறிக் கொண்டிருந்தேன். அப்பொழுது ஒரு பெரிய வயதான மனிதன் அங்கு வந்து தன் கைகளை இடுப்பில் வைத்துக் கொண்டு ''எப்பொழுது அவர் கேட்பார்? எப்பொழுது அவர் கேட்பார்? என்றான். பார் ஜனங்களும் மிகவும் வெறுப்படைந்திருக் கின்றனர்? அவர்களும் தேவனுக்கெதிராக திரும்பிக் கொண்டி ருக்கின்றனர். ஏனெனில் அவர்கள் ஜெபிக்கின்றனர், ஜெபிக்கின்றனர், ஜெபித்துக் கொண்டேயிருக்கின்றனர், ஆனால் ஒன்றுமே நடைபெறவில்லை. இந்த நபரும் ஜெபிக்கிறார், ஜெபிக்கிறார், ஜெபித்துக் கொண்டேயிருக்கிறார். ஒன்றும் நடக்க வில்லை. ஆகவே எல்லா ஆசாரியர்களும், ''அற்புதங்களின் நாட்கள் கடந்து விட்டன, நாம் செய்ய வேண்டிய ஒரே ஒரு காரியம் என்ன வெனில் இந்த அஞ்ஞானிகளை அல்லது அஞ்ஞான கடவுள்களை வணங்குகின்ற இந்த வேலை வாங்கும் அதிகாரிகளுக்கு கீழ்ப்படிந்து கிடப்பதே யாகும். நம்மால் என்ன செய்ய முடியும்?'' என்கின்றனர். ஆனால், நான் யேகோவாவில் விசுவாசம் வைத்திருக்கிறேன். ஆமென்! அவர் இன்னுமாக ஜெபத்திற்கு பதிலளிப்பவ ரென்று நான் விசுவாசிக்கிறேன்'' என்று கூறினான். 139. நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? அதை விசுவாசிக்கிறீர்களா? ஆமென் விசுவாசிக்கிறவர்கள் எல்லோரும் ''ஆமென்'' என்று கூறுங்கள் (சபையார் எல்லோரும் "ஆமென்'' என்கின்றனர் - ஆசி) இன்னுமாக ஜெபத்திற்கு பதிலளிக்கிறார் அது சரி. 140. சிறிய மெலிந்த உடம்பு மிகவும் எடை குறைந்து போயிருந்தது. அந்தப் படிகளில் கீச்கீச் சென்ற சத்தத்துடன் அவன் மேலே ஏறிச் சென்றான். அங்கே சென்று முழங்காற் படியிட்டு, ஓ, முன்பு எப்போதுமே இருந்திராத வகையில் அவன் ஜெபித்தான்! 'ஓ யேகோவா இங்கே பாரும்! நீர் உண்மையான தேவன். உமக்கு காதுகள் இருக்கிறதென்று நாங்கள் விசுவாசிக்கிறோம். உமக்கு கண்கள் உள்ளதென்று நாங்கள் விசுவாசிக்கிறோம். எல்லாக் காரியங்களையும் நீர் அறிந்திருக்கிறீர். நீர் எபிரேயர்களின் தேவனென்றும், நாங்கள் வாக்குத் தத்தத்தின் ஜனங்கள் என்றும் நாங்கள் விசுவாசிக்கிறோம். நீர் உம்முடைய வார்த்தையைக் காத்துக் கொள்கிறீர் என்று நாங்கள் விசுவாசிக்கிறோம். எங்கள் வேலையைக் கொண்டு மகத்தான பெரிய சாலைகளையும் விக்கிரகங்களையும் மற்ற காரியங்களையும் செய்து கொண்டிருக்கும் இந்த அஞ்ஞானிகளைப் பாரும். யேகோவாகிய நீர் பரலோகத்தில் உட்கார்ந்து கொண்டு அஞ்ஞானிகள் உம்மை ஆள விடுவீரா? அதை நீர் செய்வீர் என்று விசுவாசிப்பதில்லை'' ஆமென்! 141. அவர் அதைச் செய்வார் என்று இன்னுமாக நான் விசுவாசிப்பதில்லை! ஆமென்! பிசாசு வரும் போது; தேவன் இன்னும் தேவனாக இருக்கிறார்! பிசாசு அதைச் செய்ய அவர் அனுமதிக்க மாட்டார். எல்லா நாகரீகமும் அசுத்தங்களும் அபத்தமாக நடை பெற்றுக் கொண்டிருக்கின்ற இந்த நாளிலேயே இன்னுமாக தேவன் ஆண்டு கொண்டிருக்கிறார். அவர் இன்னும் தேவனாகவே இருக்கின்றார். சரி அம்ராமைப் போன்று, இருதயத்திலே பாரங் கொண்டு, வானங்கள் பிளந்து தேவன் இறங்கி வந்து ஜெபத்திற்கு பதிலளிக்கும் வரை அதிலே உறுதியாக நிலைத்திருந்து ஜெபித்துக் கொண்டிருக்கும் யாரோ ஒரு நபர் நமக்கு தேவையாயிருக்கிறது. ஆமென். 142. அவன், "இப்பொழுது, இங்கே நோக்கிப் பாரும், தேவனே அஞ்ஞானிகள் உம்முடைய ஜனங்களை இவ்வாறு பரியாசம் செய்ய விடுவீரா? வாரங்கள், மாதங்கள், வருடங்கள் கடந்து சென்று விட்டது. நாங்கள் இன்னுமாக தொடர்ந்து ஜெபித்துக் கொண்டு வருகிறோம். கண்ணீரால் நனை... (ஒலிநாடாவில் காலியிடம்- ஆசி] ஓ தேவனே இப்படிப்பட்ட ஒரு காரியத்தை அனுமதிப்பீரா?'' என்றான். 143. இன்றைக்கு நூற்றுக்கணக்கான சிறிய குழந்தைகள் ஆறுகளிலும், சாக்கடை நீர் தேங்கி கிடக்கும் பள்ளங்களிலும் தூக்கி யெறிப்பட்டு, கருச் சிதைவுகள் மற்ற எல்லா காரியங்களும் செய்யப்பட்டு வாழவிடாத காரியங்கள் நடை பெறுவதைக் குறித்து, நான் அதிசயப் படுகிறேன்; ஓ, யேகோவா, இப்படிப்பட்ட காரியங்கள் தொடர்ந்து நடைபெற நீர் அனுமதிப்பீரோ? இன்று இரவு விஸ்கி, பீர், மற்றும் இரவு களியாட்டங்கள் மற்ற எல்லாமும் கூச்சலிட்டுக் கொண்டிருக்கிறது. அதைக் குறித்து எதையுமே பேச பயப்படும் நிலைக்கு பிரசங்க பீடங்கள் மிகவும் பலவீனம் அடைந் திருக்கின்றன. யேகோவா இதைப் போன்ற சீர்கேடுகள் தொடர நீர் அனுமதிப்பீரா? 144. ஒரு நாளிலே அவர் பதிலளிப்பார். ஓ, அவருடைய உக்கிரக் கோபம் வரும் போது மிகவும் பயங்கரமாக இருக்கும். ஆம், ஐயா. ஸ்திரீகள் சென்று தங்கள் குழந்தைகள் சாகும் படிக்குச் செய்கின்றனர்; ஒரு சிகரெட்டுப் பெட்டி, சாம்பலை வைக்கும் பெட்டி, மற்ற எல்லாக் காரியமும். ஜனங்கள் தங்கள் சிறிய குழந்தைகளை பீர் கடைகளுக்கு கொண்டு செல்கின்றனர். ஆறு அல்லது எட்டு வயதுள்ள சிறுபையன்கள் சிறுமியர் அங்கே உட்கார்ந்து குடித்துக் கொண்டும் மற்றக் காரியங்களை செய்து கொண்டும் இருக்கின்றனர். தேசமும் அதை சட்ட பூர்வமாக்கி அது சரியானது என அழைக்கின்றது. ஓ, என்னே! யெகோவா அதை பார்க்க வில்லை என நினைத்துக் கொண்டி ருக்கிறீர்களா? தேவனோடு சரியாக நடக்கும் ஜனங்களைப் பார்த்து அவர்கள் பரியாசம் செய்கையில், மற்ற காரியங்களும் நடைபெற்றுக் கொண்டிருக்கையில். அப்படியே நிலைத் திரு, பிடித்துக் கொண்டிரு! யேகோவா பதிலளிப்பார். கவலை கொள்ளாதே. அது சரி. இன்னும் சிறிது கடந்து செல்வோம். அவன் அங்கே ஜெபித்துக் கொண்டிருப்பதை நாம் காண்கிறோம். அவன் மிகவும் சோர்ந்து போய் படுத்துக் கொள்கிறான். அவன் தரையில் விழும் வரை ஜெபம் செய்து கொண்டிருக்கிறான். அவனால் இன்னுமாக தொடர்ந்து ஜெபிக்க முடியவில்லை. ஆகவே சிறிது நேரம் தூங்கினான். அவன் விழித்துக் கொண்டான். "என்ன இது? இங்கே என்ன -? அந்த ஒளி எங்கிருந்து வருகின்றது? ஓ அங்கே பார் அந்த மூலையில் நின்று கொண்டிருக்கிறது. அங்கே ஒரு தூதன் நின்று கொண்டிருந்தான், அவனுடைய பட்டயம் தொங்கிக் கொண்டிருக்கிறது. ஓ, அவன் மறுபடியுமாக நோக்கிப் பார்த்தான், தன் கண்களை பிசைந்து கொண்டான். அவன் முழங்காலிலிருந்து எழுந்து "கர்த்தாவே, ஓ, ஓ நான் என்ன - என்ன செய்ய வேண்டும் என்று நீர் எதிர்பார்க்கிறீர்" என்றான். 145. அவன், ''அம்ராமே, நான் தேவனுடைய தூதன். தேவன் உன் ஜெபங்களைக் கேட்டார் என்று உன்னிடம் கூறத் தக்கதாக நான் பரலோகத்திலிருந்து அனுப்பப் பட்டுள்ளேன். அவர் ஒரு விடுவிப்பவனை அனுப்பப் போகின்றார் என்று உன்னிடம் கூற நான் வந்துள்ளேன். தம்முடைய எல்லா வாக்குத்தத்தங்களையும் அவர் நினைவில் கொண்டிருக்கின்றார் என்றான். அந்த தூதனை இப்பொழுது நான் காண்கிறேன்; அவன் தன்னுடைய பட்டயத்தை எடுத்து வடதிசையை நோக்கிக் காண்பிக்கிறதைப் பாருங்கள். அம்ராம் பார்த்தான். அவன் "இந்த பட்டயத்தின் முனை இருக்கிற திசைதான் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசமாய் இருக்கின்றது. ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு மற்றும் உன்னுடைய முன்னோர்களுக்கு, உங்களுடைய ஜனம் அந்த பிரதேசத்தை சுதந்தரித்துக் கொள்ளும் என்று வாக்குத்தத்தம் செய்திருக்கிறேன். ஆகவே நான் ஜனங்களின் கூக்குரலை கேட்டேன், பிள்ளைகளின் கதறலை நான் கேட்டேன். ஆகவே நான் இறங்கி வந்திருக்கிறேன். அம்ராமே, நீ ஜெபத்தில் மிகவும் உண்மையும் விசுவாசமும் உள்ளவனாய் இருந்த படியால் இந்த காரியத்தில் நீ ஒரு பெரும் பங்கை வகிக்கப் போகின்றாய் என்பதை நீ அறிந்து கொள்ள வேண்டுமென்று நான் விரும்புகிறேன். நீ உன் வீட்டில் உண்மை யுள்ளவனாய் இருந்தாய். ஆகவே அடுத்த வருடம் இதே சமயத்தில் உன்னுடைய அருமையான மனைவியாகிய யோகெபேத் ஒரு சிறு ஆண் குழந்தையை அணைத்துக் கொண்டிருப்பாள். அந்த சிறிய ஆண் குழந்தை தான் இரட்சகனாய் இருப்பான்'' என்றான். மகிமை! 146. அவன், "ஓ, ஆம், ஆம். ஓ, ஆம், ஆம், ஓ அவன் மிகவும் அழகாயிருக்கின்றான்'' என்றான். அவன் நோக்கிப் பார்த்தான். அந்த தூதன் உயர செல்ல ஆரம்பித்தான். முழு வானங்களும் திறந்தது போல் இருந்தது. அவன் அறையை விட்டு சென்றான். அம்ராம் சிறிது நேரம் காத்திருந்தான், பிறகு, "ஓ நான் தனியாகவா நின்றிருக்கிறேன்." 147. மிக வேகமாக படிகட்டுகளின் கீழிறங்கினான். "யோகெபேத்! யோகெபேத், சீக்கிரம்!'' அவள், ''ஆம், அன்பே என்ன விஷயம்?'' 148. அவன், ''எழுந்து நில்!'' என்றான். ஜன்னலில் நிலவு வெளிச்சம் பிரகாசித்துக் கொண்டிருந்தது. அவள் அழகாக காணப்பட்டாள். அவன், "நான் தேவனுடைய தூதனைக் கண்டேன், அவன் எல்லாக் காரியங்களையும் என்னிடம் கூறினான்'' என்றான். "ஓ, அவன் எப்படி இருந்தான்?" என்றாள் அந்தத் தாய். ''எப்படி அவன் காணப்பட்டான்?'' 149. "ஓ, அவன் அழகாயிருந்தான். ஒரு பளபளக்கும் ஆடையை அணிந்திருந்தான். அவனுடைய கண்கள் பிரகாசித்தன. தன்னுடைய கையில் ஒரு பட்டயத்தை வைத்திருந்தான். அதை அவன் வட திசையை நோக்கி காட்டினான்'' என்றான். உங்களுக்குத் தெரியுமா? எகிப்திலிருந்து வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட பிரதேசம் அந்த திசையில் தான் இருந்தது. பாலஸ்தீனா. மேலும், ''அவன் அதை வட திசையை நோக்கிக் காண்பித்தான். அடுத்த வருடம் இதே சமயத்தில் ஒரு குழந்தையை நாம் பெற்றிருப்போம். ஆகவே வரப்போகின்ற இந்த சிறிய குழந்தை ஜெயவீரனாக (Conqueror) இருப்பான். அவருடைய ஜனங்களை வெளியே கொண்டு வருவான். ஓ, அல்லேலூயா, யோகெபேத்!'' என்று கூறினான். 150. அவள் அமைதியாயிருந்ததை அவன் கவனித்தான். அவளுடைய முகம், அவளுடைய கண்கள் பிரகாசித்துக் கொண்டிருந்தன. அவளுடைய மகத்தான் கண்கள் அவனை நோக்கிக் கொண்டிருந்தன. "யோகெபெத் என்ன ஆயிற்று?'' ''ஓ, அம்ராம்! இல்லை, இல்லை, இல்லை! நமக்குத் தான் ஒரு ஆண் குழந்தை இருக்கின்றதே. 'ஆம்'' 151. ''ஓ, நீங்கள்... அது அவ்வாறு இருக்காது. உங்களுக்கு தெரியுமா? ஓ, நீங்கள் இந்த தரிசனத்தைக் காணாதிருந்தால், உங்களுக்கு தெரியுமல்லவா, எல்லா சிறு குழந்தைகளையும் பார்வோன் கொலை செய்து கொண்டிருக்கிறானே.'' 152. "ஆம், ஆனால், உனக்குத் தெரியுமா, இந்த குழந்தையை தேவன் கொடுக்கிறார் என்றால், அந்த குழந்தையை தேவன் பார்த்துக் கொள்வார். ஆமென்! தேவன் வாக்குரைத்திருக்கிறார். தேவன் அக் குழந்தையை கவனித்துக் கொள்வார்.'' 153. நல்லது, அடுத்த நாள் அவன் வேலைக்கு செல்கின்றான். அங்கே இருந்த எல்லா ஆட்களும் அம்ராமை கவனித்தார்கள். அவர்களைப் போல சோர்ந்து போய், குனிந்து நடந்து வராமல், இவன் நிமிர்ந்த தோள்களுடையவனாய் வந்து, ''இன்னும் சில செங்கல்களை கொடுங்கள், சீக்கிரம் ஆகட்டும்!'' என்றான். ''என்ன ஆயிற்று?'' 'தேவனுக்கு மகிமை தேவன் ஜெபத்திற்கு பதிலளிக்கப் போகிறார்'' ''ஓ, இல்லை.'' 154. ஒரு பதிலை நீங்கள் பெறும் போது அது உங்களுக்கு நல்லுணர்வை அளிக்கும் என்பதை நீங்கள் அறிவீர்களா? அப்படித் தானே தாயே, தந்தையே, தேவன் பதிலை அளிக்கும் போது? நீ ஒரு தரிசனத்தை காணத் தேவையில்லை. அந்த பதில் அங்கேயே தான் இருக்கின்றது என்பதை அறிந்து கொள்ளுங்கள், அவ்வளவு தான். அவ்வளவே தான், அதற்கான பதில் அங்கேயே தான் இருக்கின்றது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். 155. இப்பொழுது, கூர்ந்து கவனியுங்கள். இங்கே பாருங்கள், என்ன நடந்த தென்று பாருங்கள். இப்பொழுது உங்களுக்கு தெரியுமா, சிறிது நேரம் கழித்து, "அது சரி அம்ராம், உனக்கு என்ன ஆயிற்று?'' 156. "தேவன் ஜெபத்திற்கு பதிலளிக்கப் போகின்றார்! தேவன் ஜெபத்திற்கு பதிலளிக்கப் போகின்றார்!'' ''நல்லது, எவ்வாறு அவர் ஜெபத்திற்கு பதிலளிப்பார்?'' ''அதனால் ஒரு வித்தியாசத்தையும் உண்டாக்காது.'' 157. ஒரு வயது முதிர்ந்த நபர் நடந்து வந்து, "இப்பொழுது, ஜெபத்திற்கு எப்பொழுதாவது அவர் பதிலளிப்பார் என்று நீ நினைக்கிறாயா?'' என்றான். 158. ''நான் உனக்கு அதைக் கூறப்போவ தில்லை. ஏனெனில் நீ ஒரு அவிசுவாசி, எப்படியோ, இன்னும் சில செங்கல்களை என்னிடம் கொடுங்கள்'' அப்படி கூறத் தான் வேண்டும். இல்லை ஐயா. நீ அதைக் குறித்து கவனம் செலுத்தாதே, நீ அவ்விசுவாசிகளுக்கு எல்லா காரியங்களை கூறத் தேவையே இல்லை. அப்படித் தானே? அது ஒரு வித்தியாசத்தையும் உண்டு பண்ணாது. இல்லை ஐயா. நிச்சயமாக இல்லை. ''இன்னும் கூடுதலான செங்கல்களை என்னிடம் கொடுங்கள். அல்லேலூயா! தேவன் ஜெபத்திற்கு பதிலளிக்கப் போகின்றார்!'' அது நடக்கப் போகின்றது என்பதை நீங்கள் அறியும் போது அந்த விதமான உணர்வை தான் நீங்கள் கொண்டி ருப்பீர்கள். அப்படித் தான். ஆம் ஐயா. ''நல்லது அதை அவர் எப்படி செய்யப் போகின்றார்?'' 159. ''உனக்குத் தெரியாது, எப்படியோயிருக்கட்டும். ஆதலால் செங்கல்களை கொடுத்து கொண்டேயிரு.'' எல்லா வற்றையும் இங்கே அடுக்கிவை. பழைய செங்கல்களை அங்கே அடுக்கிவை.'' 160. ஆகவே அந்த இரவு அவன் வீட்டிற்குச் சென்றான், "ஓ, யோகெபேத், அதைக் குறித்து சற்று சிந்தி, நாம் ஒரு குழந்தையை உடையவர்களாக இருக்கப் போகிறோம்! ஓ, அவன் ஒரு இரட்சகனாக இருப்பான் தேவன் அவனை அனுப்பப் போகிறார். ஓ, அது அற்புதமானதாய் இருக்கப் போகின்றது.'' "ஓ, ஆனால் நான் மிகவும்...'' 161. "ஓ, கவலைப் படுவதை நிறுத்து கவலைப் படுவதை நிறுத்து! என்னே! தேவன் இதில் இருக்கிறார், தேவன் இப்பொழுது கேட்டுக் கொண்டி ருக்கிறார். தேவனுக்கு காதுகள் உண்டு, தேவனால் கேட்க முடியும். தேவனுக்கு கைகளுண்டு, அவர் விடுவிப்பார்'' என்றான். ஆதலால், ஓ, அவனுக்கு அதிகமான விசுவாசம் இருந்தது. 162. உங்களுக்கு தெரியுமா, நீங்கள் ஜெபம் செய்து கொண்டே இருக்கையில் பதிலைப் பெறுகிறீர்கள், அப்பொழுது அதிகமாக விசுவாசத்தை நீங்கள் பெறுவீர்கள். ஓ! தேவன் அதை உங்களுக்காக அதைச் செய்யப் போகிறார் என்று நீங்கள் அறிந்திருக்கின்ற ஏதோ ஒரு காரியத்திற்காக நீங்கள் ஜெபம் செய்திருக்கிறீர்களா? சிறிய பெண் பிள்ளைகள் அதைச் செய்கிறீர்கள், சிறுவர்களாகிய நீங்கள்? ஆம் நிச்சயமாக. அது நடக்கப் போகிறது என்று நீங்கள் அறிந்திருக்கிற பொழுது. அது சரி. 163. முழு வருடம் கடந்து செல்கின்றது. முதலாவது காரியம் என்ன வென்று உங்களுக்கு தெரியுமா, ஒரு நாள் வேலையிலிருந்து அம்ராம் வருகிறான். என்ன நடந்தது? சிறிய அழகு வாய்ந்த குழந்தை. இந்த அளவு நீளமான அந்த சிறிய அருமையான குழந்தையாய் இருந்தது. ஆகவே அவள் அதை எடுத்து அம்ராமிடம் அளிக்கிறாள். உங்களுக்கு தெரியுமா, அவன் அதை முத்தமிடுகிறான். அவன் அதை நேசிக்கிறான், பாருங்கள். தாய் அக் குழந்தையை பிடித்துக் கொண்டிருந்தாள். ஓ, எப்பேற் பட்ட ஒரு பொக்கிஷம். அவள், ''ஓ எனக்கு பயமாக இருக்கிறது. உமக்கு தெரியு மல்லவா. இந்தச் சிறிய குழந்தை மிக அருமையான இனிய குழந்தையாக இருக்கின்றது என்றாள். 164. அது என்னவென்று உங்களுக்கு தெரியுமா? பிறந்த குழந்தைகளிலே அக்குழந்தை தான் மிகவும் அழகான குழந்தையா யிருந்தது என்று வேதாகமம் கூறுகின்றது. அதைக் குறித்து தாய்மார்கள் என்னிடம் கருத்து வேறுபாடு கொள்வார்கள் என்று எனக்குத் தெரியும். நீங்கள் தான் மிக அழகுள்ள குழந்தை என்று உங்கள் தாய்மார்கள் நினைத்துக் கொள்வார்கள். அப்படித் தானே? ஆம். அவ்வாறு நினைக்க அவர்களுக்கு உரிமை உண்டு. ஆனால் வேதாகமம் இது ஒரு சிறிய அழகுள்ள குழந்தை என்று கூறுகிறது. ஓ, அது ஒரு ஆபரணமாய் இருந்தது. தேவன் தன் கரங்களை அவன் மீது வைத்திருந்தார் என்று உங்களுக்கு அது ஒரு மிக அருமையான சிறிய குழந்தையாயிருந்தது! அது அங்கே படுத்துக் கொண்டிருந்தது. அது - அது பல் இல்லாத ஒரு சிறிய சிரிப்பை சிரித்தது. 165. பல் இல்லாமல் அதைப் போன்ற புன்னகை செய்கிற ஒரு சிறிய சகோதரன் உங்களுக்கு உண்டா? ஆகவே, முதலாவது காரியம் என்ன தெரியுமா, "வீல்!'' 'ஓ போச்சு! வீயு! அங்கே நிறைய சூனியக்கார கிழவிகள் ஒளிந்திருக் கின்றனரே!' ''என்ன ஆயிற்று? நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்.'' 166. 'அதை கீழே கொண்டு போ. கட்டளை என்ன என்பது உனக்கு தெரியுமல்ல. பார், நீளமான மூக்கைக் கொண்ட அந்த சூனியக்கார கிழவிகள் இங்கே வந்தார்களானால், நம்முடைய குழந்தையை எடுத்துக் கொன்று போடுவார்கள். அது சரி. ஆகவே நாம் அதை அழ விடக் கூடாது. ஆதலால், ஒ, அதற்கு காலை அல்லது இரவு ஆகாரம் தேவையா யிருந்தது. ஆகவே அந்த தாய் அந்த மூலைக்கு கொண்டு சென்று அதற்கு பாலூட்டுகிறாள். பிறகு அது அமைதியானது. 167. ஆகவே அதற்கு பிறகு சில இரவுகள் அவர்கள் அதனுடன் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்பொழுது மறுபடியுமாக 'வீல்' என்று அழத் துவங்கியது. அப்பொழுது அவள் மிக வேகமாக ஓடி அதை மிக விரைவாக மறைத்து வைத்தாள். கீழே சுவற்றில் மறைத்து வைக்கத்தக்கதாக அம்ராம் ஒரு சிறு இடத்தை அமைத்திருந்தான். 168. ஆகவே முதல் காரியம் என்ன தெரியுமா, ஏதோ ஒன்று மேலே படிகளின் வழியாக சென்று கொண்டிருந்தது... (சகோதரன் பிரான்ஹாம் பிரசங்க பீடத்தை தட்டுகிறார்-ஆசி] "வ்யூ சீக்கிரம் வா!'' எல்லோரும் ஓரிடமாக கூடினர், ''அதோ அவர்கள் தான். அந்த சூனியக்கார கிழவிகள்" என்றாள். நீண்ட வர்ணம் தீட்டப்பட்ட விரல்கள் அந்த சூனியக்கார கிழவிகள் கீழே பார்த்தனர், ஜன்னலிற்கு வெளியே எட்டிப் பார்த்தனர். ''ஆம், அவர்கள் தான் அங்கே நின்று கொண்டிருக்கின்றனர்'' என்றனர். (சகோ. பிரான்ஹாம் பிரசங்க பீடத்தை தட்டுகிறார் - ஆசி) ''கதவைத் திறவுங்கள்!'' 169. அம்ராம் நடந்து சென்று கதவைத் திறந்து, ''உங்களுக்கு என்ன வேண்டும்?'' என்று கேட்டான். 170. "நீ இங்கே ஒரு குழந்தையை வைத்திருக்கிறாய், அது எங்களுக்குத் தெரியும். நாங்கள் அதை எடுத்துக் கொள்ளப் போகிறோம்.'' ''உங்களிடம் கொடுக்கத் தக்கதாக எங்களிடம் ஒரு சிறு குழந்தை கூட இல்லையே'' (அவர்கள் கொடுக்கவில்லை). 171. ''எப்படியாயினும், நாங்கள் உள்ளே வந்து பார்க்கப் போகிறோம். நாங்கள் பெண் போலீஸ். எங்களுடைய சின்னங்களைப் பார் சர்க்காரிடமிருந்து அதிகாரத்தை நாங்கள் பெற்றிருக்கின்றோம்!'' என்றனர். ஆகவே, ஒரு ஸ்திரீ அவ்வாறு இருக்கக் கூடாது, அப்படித் தானே? உங்களுக்கு தெரியுமா? அவர்களை இப்பொழுது நாம் கொண்டிருக்கிறோம். ஆகவே அவர்கள் சென்று சோதனை யிட்டனர். உள்ளே சென்றனர். சோபாவை தலை கீழாக புரட்டினர். எல்லா அலமாரி பெட்டிகளையும் வெளியே இழுத்தனர். படுக்கை விரிப்புகள் துணிகள் மற்ற எல்லா வற்றையும் உதறிப் பார்த்தனர். எல்லா வற்றையும் தரையில் எறிந்தனர். பிறகு அப்பா வைத்திருந்த ரகசிய அறையைப் பார்க்க மேலே சென்றனர். எல்லா இடங்களையும் ஆராய்ந்தனர். ஆனால் குழந்தையை அவர்களாலே கண்டு பிடிக்க முடியவில்லை. 172. அந்த குழந்தையை கண்டு பிடிக்க முடியவில்லை. ஆகவே அந்த ஸ்திரீயிடம் அவர்கள் நடந்து சென்று கேள்வி கேட்டனர். யோகெபேத் பரிதாபமாக நின்று கொண்டிருந்தாள். அவளுடைய முகம் வெளுத்துப் போயிருந்தது. அவர்கள் அவளிடம் நடந்து சென்று, ''இங்கே பார் நீ ஒரு தாயாகி இருக்கின்றாய் என்பதை நாங்கள் அறிவோம். உன்னைப் பார்க்கும் போதே தெரிகின்றதே. நீ பாலூட்டுகின்ற தாய் என்பது எங்களுக்கு தெரியும். அந்தக் குழந்தை இங்கிருக்கின்றது என்பது எங்களுக்குத் தெரியும். நாங்கள் மறுபடியுமாக வந்து அதை எடுத்துச் செல்வோம்!'' என்று கூறினர். அவர்கள் கதவை ''படார்!'' என்று அடித்து வெளியே சென்றனர். அவள், "ஓ, ஓ, நாம் என்ன செய்வது? நாம் என்ன செய்வது?'' என்றாள். 173. அதற்கு அம்ராம் ஜெபம் செய்'' என்றான். செய்ய வேண்டியது அது தானே? (சிறுவர் சிறுமியர் "ஆம்" என்கின்றனர் - ஆசி) அது தானே? "ஜெபம் செய்வோம்'' "ஓ, ஓ, ஓ! என்ன செய்வது என்று தெரியவில்லையே. ஓ 174. ஆகவே அவன், "இப்பொழுது இங்கே பார், அமைதியாயிரு. போய் குழந்தைக்கு பால் கொடு. நான் மேலே சென்று ஜெபிக்கப் போகின்றேன்" என்று கூறினான். 175. ஆகவே அவன் மேலே சென்று ஜெபிக்கின்றான், ''யேகோவா, உமக்கு காதுகள் இருக்கின்றன. யேகோவா, உமக்கு கண்கள் இருக்கின்றன. உம்மால் ஜெபத்திற்கு பதில் அளிக்க முடியும். நீர் இக் குழந்தையை எங்களுக்கு அளித்தீர், உம்முடைய வாக்குத் தத்தத்தை எங்களுக்கு அளித்தீர். ஆகவே நீர் உம்முடைய வாக்குத் தத்தத்தை காத்துக் கொள்வீர், இந்த குழந்தையையும் நீர் காத்துக் கொள்வீர். நான் நம்பிக்கையுள்ளவனாக இருக்கிறேன்.'' 176. ஜெபித்து முடித்த பின்னர், மிகவுமாக களைத்துப் போய் இப்படி விழுந்து தூங்கி விட்டான். அவன் மிகவும் களைத்துப் போனான் நாள் முழுவதும் வேலை செய்தான், இரவு முழுவதும் ஜெபித்துக் கொண்டிருந்தான். அவன் களைத்துப் போயிருந்தான். ஆகவே பிறகு என்ன நடந்ததென்று உங்களுக்கு தெரியுமா? ஒரு சொப்பனத்தைக் கண்டான். 177. உங்களுக்கு தெரியுமா, தேவன் சொப்பனங்களின் மூலமாகவும் பேசுவார். அப்படித் தானே? நிச்சயமாக, அவர் பேசுகிறார். ஆம், அவர் செய்கிறார். அவரால் முடியும் பாருங்கள்? அவர் சொப்பனங்களில் பேசுகிறார். 178. ஓ, அவன் விழித்துக் கொண்டான், (சகோதரன் பிரான்ஹாம் தன் விரலை சொடுக்குகிறார் - ஆசி] ''அதுவே, அதைக் குறித்து நான் சிந்தித்திருக்க வேண்டும். அதைத் தான் நான் செய்ய வேண்டியவனாய் இருக்கிறேன். அதைக் குறித்து நான் எதுவுமே பேச மாட்டேன்'' என்றான். கீழே செல்கிறான், "யோகெபேத்!'' என்றான். ''ஆம் அன்பே? ஓ, நான் மிகவும் சோர்ந்து போயிருக்கிறேன். என்னால் தூங்க முடியவில்லை'' 'ஓ, நீ தூங்கு, தூங்கச் செல். எல்லாம் முடிந்து விட்டது. ''எப்படி உங்களுக்குத் தெரியும்?'' "ஓ, எனக்கு தெரியும். எனக்கு நம்பிக்கை இருக்கின்றது.'' 179. அப்பா அந்த இரவு அங்கே மேலே ஜெபிக்கச் செல்வதற்கு பதிலாக கீழே வந்தார். இங்கே மிகவும் வேலையில் மூழ்கிப் போனவராய்க் காணப்பட்டார். அவன் என்ன செய்துக் கொண்டி ருக்கிறான் என்று தெரிய வில்லையே? நாம் கீழே நழுவிச் சென்று அவனைப் பார்ப்போம். அவனைக் காண்கிறேன், அங்கே அவன் அதை... [சகோதரன் ஒன்றை கட்டும் போது உண்டாகும் சத்தத்தை செய்து காட்டுகிறார் - ஆசி) "டக்,டக்,டக்' (சகோதரன் பிரான்ஹாம் ஒலி எழுப்புகிறார்- ஆசி) இந்த குச்சியை எடுத்து அதனுடன் இணைத்து சரியாக இருக்கிறதா என்று பார்க்கிறான். (சகோ. பிரான்ஹாம் ஒலி எழுப்புகிறார்) அந்தச் சிறிய ஆரோன் அன்றைய தினம் வெளியே சென்று நிறைய குச்சிகளை சேகரித்து அங்கே கொண்டு வந்து வைத்திருந்தான் என்பது உங்களுக்குத் தெரியுமா? "தேவன் உன்னை பார்த்துக் கொள்வார்" (சகோ.பிரான்ஹாம் சத்தத்தை எழுப்புகிறார் - ஆசி] "பழைய காலத்து மதம், அது உண்மையாக இருக்கத்தான் வேண்டும்'' (சகோ. பிரான்ஹாம் ஏதோ ஒன்றை அடிக்கின்றார் - ஆசி]....இப்படி அடித்துக் கொண்டிருந்தான். அவள், ''அம்ராமே, உமக்கு என்ன ஆயிற்று?' என்றாள். ''அல்லேலூயா! அன்பே, ஒன்றுமில்லை, உன் வேலையைக் கவனி.'' 180. (சகோதரன் பிரான்ஹாம் வாயை மூடிக் கொண்டு இசை பாடுகிறார் - ஆசி) ''அது பழைய கால மதம்'' (சகோதரன் பிரான்ஹாம் மறுபடியுமாக சத்தமிடுகிறார்) "அது பழைய கால மதம். அதை இங்கே கொண்டு வா." அது பழைய கால மதம்'' ஊஷ்ஷ்ஷ்ஷ்ஷ் அதை ஒட்டுப் போடு. "இது சரியாக இருக்கிறது. இதை எடுத்து கொடு...'' அவன் ஏதோ ஒன்றைச் செய்துக் கொண்டிருந்தான். 181. உங்களுக்கு தெரியுமா, ஒன்று அல்லது இரண்டு வாரங்கள் கழித்து, முதலாவது காரியம் என்னவென்று தெரியுமா, அவன் என்ன செய்து கொண்டிருக்கிறான் என்று அவர்கள் வியந்து கொண்டிருந்தனர். 182. ஒரு நாள் இரவு எல்லாரும் உறங்கிக் கொண்டிருக் கையில் அவன் மெதுவாக மேலே சென்று இந்தச் சிறிய காரியத்தை கொண்டு வந்தான், உங்களுக்குத் தெரியுமா, அதை இப்படி பிடித்துக் கொண்டு, எடுத்து வந்தான். தன்னுடைய மனைவி யோகெபேத் உறங்கிக் கொண்டிருந்த அந்த விரிப்பின் அடியில் அதை வைக்கிறான். சிறிய ஆரோனும் மிரியாமும் உறங்கிக் கொண்டிருந்தனர் என்பது உங்களுக்குத் தெரியும். ஓ, அவள் ஒரு அருமையான சிறுமியாயிருந்தாள், அப்படியே தான் ஆரோனும் ஆகவே, அவன் அதை அங்கே வைத்தான். அவன் "அன்பே, யோகெபேத்'' என்றான். 183. அவள், ''அம்ராமே இங்கே கீழே இரவின் இந்த நேரம் வரை ஜெபித்து கொண்டிருந்தீரா?'' என்று கேட்டாள். ''இல்லை, இங்கே கீழே நான் தேவனை துதித்துக் கொண்டிருந்தேன்" என்றான். ''என்ன செய்து கொண்டிருந்தீர்?'' என்றாள். 184. ''நான் உனக்கு கூற விரும்புகிறேன்: இப்பொழுது, அந்த சூனியக்கார கிழவிகள் வந்து கொண்டிருக்கின்றனர் என்று உனக்குத் தெரியுமா?' என்றான். ''ஆமாம்.'' 185. ''ஆகவே, நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதை உனக்கு கூறப் போகிறேன். நாம் குழந்தையை மூன்று மாதத்திற்கு நம்மிடம் வைத்திருந்தோம், நாம் அதை இங்கிருந்து அகற்றி விட வேண்டும்.'' ''ஓ, அம்ராம்! நீர் என்ன செய்யப் போகிறீர்?'' ''நாம் குழந்தையை இங்கிருந்து அகற்றி விட வேண்டும்.'' ''என்ன, குழந்தையை இங்கிருந்து அகற்றுவதா?'' ''ஆமாம்.'' ''ஓ, நீர் கொடூரமானவர்!'' ''இல்லை, நான் கொடூரமானவன் அல்ல. இல்லை, இல்லை, இல்லை. நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்று எனக்குத் தெரியும்.'' 186. "என்ன இது? என்ன, பார்வோனை விட கொடூரமானவராக நீர் இருக்கிறீர். நம்முடைய குழந்தையை ஒழித்து விடவா போகிறீர்" ''ஆம், குழந்தையை அகற்றப் போகின்றேன்.'' "ஓ, நம்மால் அது முடியாது. 187. ''இப்பொழுது கவனி. நாம் இதை வைத்துக் கொள்வோமானால், இதை நாம் இழக்கப் போகின்றோம். ஆகவே இதை நமக்கு கொடுத்த அவரிடமே நாம் இதை கொடுப்போமானால், அவர் அதை கண்டெடுத்துக் கொள்வார்' அது சரியா? "இப்பொழுது, இதை நாமே வைத்துக் கொள்வோமானால், இதை இழந்து விடுவோம்" ''எப்படி இதை இழக்கப் போகிறீர்?" ''என்ன, அந்த வயதான சூனியக்கார கிழவிகள் வரப் போகிறார்கள். இதை எடுத்துக் கொள்வார்கள்.'' 188. ஆகவே கவனியுங்கள், அந்த ஆத்துமாவை நீங்களே வைத்துக் கொண்டு, முன்னே சென்று உலகத்தாரைப் போல ஜீவிப்பீர்களானால், அதை நீங்கள் இழக்கப் போகிறீர்கள். பாதாளத்தின் சூனியக்கார கிழவிகள் உன் பின்னே வந்து கொண்டி ருக்கிறார்கள். அது சரிதான். இந்த உலகத்தின் அறிவீனமான செயல்கள், இன்னும் வெளியே இருக்கின்ற காரியங்கள், உன்னைப் பின் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஆகவே நீங்கள் அதை வைத்துக் கொள்வீர்களானால் அதை நீங்கள் இழந்து விடுவீர்கள் அதை உங்களுக்கு அளித்த ஒருவரிடமே நீங்கள் திருப்பி அளித்தீர்க ளானால், நீங்கள் அதைக் கண்டு கொண்டு காத்துக் கொள்வீர்கள். இப்பொழுது என்ன, நாம் அதை வைத்துக் கொள்வோமானால், நமக்கு என்ன ஆகும். [பிள்ளைகள் "அதை இழந்து விடுவோம்'' என்கின்றனர் - ஆசி] அதை இழந்து போவோம். அதை நாம் கிறிஸ்துவிடம் கொடுத்து விடுவோமானால் என்ன ஆகும்? அதை காத்துக் கொள்வோம். [''அதை காத்துக் கொள்வோம் ஆமென்! அது அருமையானது. இப்பொழுது நீங்கள் சரியாக பதிலளிக்கிறீர்கள். 189. இப்பொழுது அவன், "யோகெபேத், இதை நாம் வைத்திருப் போமானால் நாம் இழக்கப் போகிறோம். ஆகவே நாம் இதை நமக்கு அளித்த அவரிடமே இதை நாம் திருப்பி அளிப்போமானால் அப்பொழுது நாம் இதைக் காத்துக் கொள்வோம்'' என்றான். 190. இப்பொழுது, உனக்கு ஒரு ஆத்துமா இருக்கின்றது. அப்பா, அம்மா உங்களுக்கும் அதே தான். ஆனால் நீங்கள் வைத்திருப்பீர்க ளானால் அதை நீங்கள் இழக்கப் போகிறீர்கள். அது சரி, நரகத்தின் சூனியக்காரக் கிழவிகள் அதை எடுத்துக் கொள்ளுவார்கள். அவர்கள் எல்லோரும் அதன் மேல் குறியாயிருக்கிறார்கள். ஆனால் உனக்கு அதை அளித்த அவரிடம் நீங்கள் திருப்பி அளிப்பீர்களானால், அதை நித்திய ஜீவனுக்கென்று நீங்கள் காத்துக் கொள்வீர்கள். அல்லேலூயா ஆமென்! பிள்ளைகளே, என்னை பொறுத்துக் கொள்ளுங்கள். நான் பழைய சத்தமிடுகிற நபர் ஆவேன். நீங்கள் அதை நாம் எல்லாருமாக சேர்ந்து அதை கூறுவோமாக. (''நீ அதை வைத்துக் கொள்வாயானால் அதை இழந்து போவாய். அதை அளித்த அவரிடம் அதை அளிப்பாயானால் நீ அதை காத்துக் கொள்வாய்'' - என்று சகோ. பிரான்ஹாமும் சபையாரும் சேர்ந்து கூறுகின்றனர் - ஆசி) ஆமென். அதை அவரிடம் அளிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். 191. இப்பொழுது நாம் பார்ப்போமாக. ஓ, அவள் அழத் துவங்கினாள், "ஓ இக் குழந்தைக்கு என்ன செய்யப் போகிறீர்கள்?'' என்றாள். அவள்... "இதோ பார், நான் உனக்கு ஒன்றை காண்பிக்க விரும்புகிறேன்'' ''என்னுடைய கட்டிலின் கீழே என்ன வைத்திருக்கிறீர் ''நான் அதை உனக்கு காண்பிக்கட்டும்'' என்றான். ஆகவே அவன் அதை வெளியே இழுத்தான். ''ஓ இது ஒரு சிறிய நாணல் பெட்டி ஆயிற்றே'' 192. அது என்ன, ஒரு சிறிய கப்பல். அதற்கு திசை காட்டும் கட்டை கிடையாது, பாய்மரம் கிடையாது, பீரங்கிகள் கிடையாது, ஆனால் இன்னுமாக அந்த காலத்திலே ஒரு கப்பலில் என்றுமே வைக்கப் படாதிருந்த மிகவும் விலை மதிப்பு வாய்ந்த ஒரு சரக்கு ஏற்றப்படப் போகிறது. இதைக் கவனி! அந்த கப்பலிற்கு மாலுமியோ அல்லது எந்த கப்பலோட்டியோ கிடையாது. சகோதரனே, எனக்கு தெரிந்த, அதைப் போன்று, பெரியவர்களுக்கான கப்பலும் ஒன்று இருக்கின்றது. 193. அவள், "ஓ, அம்ராம் அதை நான் பார்க்கட்டும், ஆம், அதை நான் காண வேண்டும்'' என்றாள். அவள் இங்கே செல்கின்றாள். 194. அவன், ''இங்கே பார், அதற்கு ஒரு மூடியை அமைத்துள்ளேன். நீ அந்த மூடியை திறந்து பார்'' என்றான். ''வ்யூ நாற்றமெடுக்கின்றதே! உஹ்! வ்யூ என்னே!'' என்றாள். ''ஆம், அது நாற்றமெடுக்கிறது'' என்றான். ''ஏன்?'' 195. ''அதை சுற்றிலும் கீல் ஊற்றியுள்ளேன். அது முழுவதுமாக பிச்சுக் கட்டி பூசப்பட்டுள்ளது'' என்றான். பிச்சுக் கட்டி என்பது தார் என்று தெரியுமா? ஆகவே அதை பிச்சுக் கட்டியினால் பூசினர். அதைத் தான் அவன் அங்கே கொதிக்க வைத்து நாணற் புற்களின் மேலே ஊற்றினான். அவன் அதை பிச்சு கட்டியினால் பூசினான். ''இங்கே பார், இதனால் தண்ணீர் உள்ளே வர வாய்ப்பில்லை. ஏனென்றால் இது முழுவதுமாக பூசி முத்திரிக்கப் பட்டுள்ளது. தண்ணீர் உள்ளே வராது. நான் முழுவதுமாக பூசி விட்டேன்.'' ''வ்யூ, மிகவுமாக நாறுகிறதே'' என்றாள். 196. பிள்ளைகளாகிய உங்களுக்கு தார் என்றால் என்ன வென்று தெரியும், அவர்கள் சாலைகள் போடும் போது, ஓ, அது மிக நாற்ற மெடுக்கும். ஆனால் அது-அது-அது, சாலையை... அதிலுள்ள எல்லா வெடிப்புகளையும் அடைத்து விடும். ஆகவே அதே போன்று தான் இங்கேயும், தண்ணீர் வராமல் தடுக்கின்றது. 197. ஆகவே ஒரு விசுவாசிக்கு அதைத் தான் ஜெபமும் செய்கின்றது. நீ உன்னுடைய முழங்காலில் வேறூன்றிக் கொண்டு ''கர்த்தராகிய இயேசுவே!'' என்று கூறும் போது அனுதினமும் உலகம் உனக்குள்ளே வராதவாறு தடுத்து நிறுத்துகிறது. ஆகவே பிசாசானவன் உன்னை பிடித்துக் கொள்ளாத படிக்கு அந்த இரத்தம் வந்து உன்னை முத்திரை போடுகிறது. பாருங்கள், அது சரி. பாருங்கள்? ஆகவே பிறகு, ஓ, அநேக முறை மக்கள் அது மோசமாயிருக்கிறது'' என்று கூறுவர். ஆனால் அது ஒரு வித்தியாசத்தையுமே உண்டாக்காது, அது உன்னை பத்திரமாக பாதுகாக்கிறது. பாருங்கள்? உன்னை பாதுகாக்கும் ஒரு முக்கியமான காரியமாகும் அது. ''நீ மிகவும் பழைய நாகரீகமானவன்'' என்று கூறுவர். ஆனால் அதனால் ஒன்று மில்லை, அது உன்னை பாதுகாக்கிறது. ''நல்லது நாம் என்ன செய்யப் போகிறோம்" என்றாள். 198. "சரி, நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதை நான் உனக்கு கூறுகிறேன். நாம் குழந்தையை எடுத்து ஒரு சிறிய பிரிவு உபசார காரியத்தை நடத்துவோம், பிறகு குழந்தையை எடுத்து இதனுள் வைத்து நைல் நதியில் விட்டு விடுவோம்'' என்றான். 199. "ஓ! வேண்டாம்! வேண்டாம்! வேண்டாம்! அம்ராமே, நீங்கள் குழந்தையை நதியிலே கொண்டு போய் போட வேண்டாம்.'' 200. ''அடே! அடே! நான் என்ன செய்கிறேன் என்பதை நானறிவேன்'' என்றான். அவன் ஒரு சொப்பனத்தைக் கண்டான், தான் செய்கிறது என்ன வென்பதை அறிந்திருந்தான். பாருங்கள், தேவன் அவனுக்கு கட்டளையிட்டிருந்தார். என்ன செய்ய வேண்டும் மென்பதை அவன் அறிந்திருந்தான். அவன் இதை கட்டி, அங்கே நோவா தன் காலத்தில் கட்டின - அவனைக் காத்த - அதே பேழையைப் போன்று இருப்பதை அவன் கண்டான். 201. ஆகவே அவன், "இங்கே பார், இதன் மேலே ஒரு சிறிய துவாரத்தை அமைத் திருக்கிறேன், ஆதலால் குழந்தையால் மூச்சு விட முடியும், சூரிய வெளிச்சம் குழந்தையின் மேல் படவும் இது வழி வகுக்கும்'' என்றான். 202. பழைய ஏற்பாட்டில் காணப்படுகிற உடன்படிக்கை பெட்டியிலும் கூட இதே விதமாகத்தான் அமைக்கப் பட்டிருந்தது என்பது உங்களுக்குத் தெரியுமா? அதன் மேலே உன்னால் உள்ளே பார்க்கத்தக்கதாக, வெளியே பார்க்கத்தக்கதாக ஒரு துவாரம் இருந்தது. 203. ஆகவே, பிறகு இந்த பெயரில்லாத பரிதாபத்துக்குரிய, ஆனால் இன்னுமாய் உலகத்திலேயே மிகவும் அழகான சிறிய குழந்தையாக இது இருந்தது. 204. அடுத்த நாள் இரவு அவர்கள் அதிகாலை மூன்று மணி வரையிலும் காத்திருந்தனர். பிறகு அவர்கள்.... அவன் நடந்து சென்றான். அவன் ஜெபம் செய்தான். பிறகு "இப்பொழுது, யோகெபேத், சீக்கிரம் எழுந்திரு!'' என்றான். 205. ஆகவே அவர்கள் சிறிய ஆரோனையும், மிரியாமையும் எழுப்பினார்கள். ஓ, அந்த சிறிய மிரியாம் வந்து தன் கரங்களால் அணைத்துக் கொண்டு, "அப்பா, எங்களுடைய சிறிய தம்பியை கொண்டு போகக் கூடாது, முதலைகளால் நிறைந்திருக்கிற நைல் நதியிலா இதைக் கொண்டு போய் வைக்கப் போகிறீர்?'' என்றாள். 206. அவன் அவளுடைய சிறிய மயிரை அதைப் போன்று கோதினான். ஆகவே அவள்... அவளுக்கு அழகான கண்கள், மயிர் இருந்தது. ஆகவே அவளை கன்னத்தில் முத்தமிட்டு, "தேனே, அது என்னையும் பாதிப்படையச் செய்கிறது, மிகவுமாக கவலை கொள்ளும் படி செய்கிறது, ஆனால் நாம் இதைச் செய்து தான் ஆக வேண்டும்'' என்றான். 207. சிறிய பையன்களே, பெண்களே, இதைக் கவனியுங்கள், சில வேளைகளில் நம்மை பாதிப்புள்ளாக்குகிற காரியங்களை செய்ய வேண்டியதாயிருக்கும். ஆனால் எப்படியாகினும் அதைச் செய்து தான் ஆக வேண்டும். பெண்கள்" ஏய் நீ எப்பொழுதாவது சிகரெட் பிடித்திருக்காயா?'' என்று கேட்பார்களாயின். ''இல்லை'' என்று நீங்கள் கூறுங்கள். 208. ''நல்லது! ஒன்றை முயற்சி செய்துப் பார்! ஓ, நான் உன்னுடைய நண்பன் தானே, ஆம், முயற்சி செய்து பார்.'' 209. ஆனால் அது உங்களை சிறிது பாதிப்பிற்குள்ளாக்கும். ஆனால், "ஊம் ஊம், அது எனக்குத் தேவை யில்லை. வேண்டாம். அது எனக்கு தேவையில்லை'' என்று கூறுங்கள். "இன்று மாலை என்னுடன் படக்காட்சிக்கு வருகின்றாயா?'' என்று கேட்பார்களானால். 210. ''இல்லை, வேண்டாம், ஊம் - ஊம், நான் படக் காட்சிக்கு செல்வதில்லை பாருங்கள்? அது உன்னை சற்று பாதிப்பிற்குள்ளாக்கலாம், பாருங்கள். 211. "ஓ, நீ ஒரு பழங்கால நடவடிக்கைகளை உடைய கோழை என்பார்கள். அதை நீங்கள் நம்பாதீர்கள். அது உன்னை சிறிது பாதிப்பிற் குள்ளாக்கும். அதினிடத்திலிருந்து உன் தலையை மாத்திரம் திருப்பிக் கொள். நீ செய்ய வேண்டிய சரியான காரியம் அதுவேயாகும். நீங்கள் பாருங்கள், எப்பொழுதும் அதையே செய்யுங்கள். சரியான காரியத்தையே செய்யுங்கள். அது சரி. 212. இப்பொழுது சிறிய பெண்கள் இந்த குதிங்கால் நடனம் (toe dance) மற்றும் அதைப் போன்ற காரியங்களைக் கற்றுக் கொண்டி ருக்கிறார்கள். அதை நீங்கள் செய்ய வேண்டும் என்று யாராவது கூறினால், அவர்களிடம் ''இல்லை முடியாது" என்றே கூறுங்கள். நீங்கள் அதை செய்யக் கூடாது, பாருங்கள். 213. ''ஓ, நல்லது அது மிகவும் வேடிக்கை விளையாட்டு. கேளிக்கையாக இருக்கிறது. அது எவ்வளவு கேளிக்கையாக இருந்தாலும் அதைக் குறித்து அக்கறைக் கொள்ளாதே. சரியான ஒன்றை மாத்திரமே நீ செய்ய விரும்புகிறாய். ஆகவே சரியானது எதுவோ அதை மாத்திரமே நீ செய். இப்பொழுது, அதை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்கிறீர்களா? அதை நீங்கள் மறக்காதீர்கள். அப்படித் தானே? 214. இப்பொழுது அவர்கள் என்ன செய்தனர்? அப்பொழுது அந்தச் சிறிய குழந்தையை எடுத்து அதில் வைக்க ஆயத்தமாயினர். சிறிய ஆரோன் வந்து "அப்பா, நம்முடைய குழந்தைக்கு நீர் என்ன செய்ய போகிறீர்?'' என்றான். 215. அதற்கு அவன், ''ஆரோன், தேனே, என் மடியின் மீது உட்கார். இதோ பார் ஆரோன், இக் குழந்தையை நாமே வைத்துக் கொள்வோ மானால், அதனால் நாம் செய்யப் போவது என்ன?'' [சபையார் ''அதை இழந்து போவோம்'' என்கின்றனர் - ஆசி) ''அதை இழந்து போவோம், ஆனால் இதை நமக்கு அளித்த அவருடைய கரங்களிடமே இதை நாம் திருப்பி அளித்தால், நாம் என்ன செய்யப் போகிறோம்?'' (''அதை காத்துக் கொள்வோம்''. ''நாம் அதைக் காத்துக் கொள்வோம். அது சரி. ''ஆனால், அப்பா, எப்படி அதை செய்யப் போகிறீர்கள்?'' 216. ''எனக்கு தெரியவில்லை, எப்படி அது நடைபெறப் போகிறது என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் தேவன் அதைச் செய்யப் போகிறார்" என்றான். பாருங்கள்? 217. ஆகவே அப்பொழுது அவர்கள் அந்த சிறிய குழந்தையை அதற்குள் வைத்தார்கள். ஆகவே அவன் செல்கிறான். இங்கே எல்லாரும் இப்பொழுது வாசலிற்கு செல்லப் போகிறார்கள். அவர்கள் கதவண்டை செல்கிறார்கள், அவன் இப்படியும் அப்படியுமாக தெருவில் பார்க்கிறான். அங்கே ஒருவரும் இருக்க வில்லை. ஆகவே அவன், "சீக்கிரம் யோகெபேத், ஆரோன், மிரியாம் வாருங்கள், வாருங்கள். நாம் செல்லலாம்'' என்றான். 218. அவர்கள் தங்கள் சிறிய பேழையை எடுத்துக் கொண்டு நதியண்டையில் கற்கள் வரிசையாக தளமாக இருக்கிற இடத்திற்குச் செல்கிறார்கள். ஓ வெளிச்சம் வருவதற்கு நீண்ட நேரம் இருந்தது. இங்கே சிறிய ஆரோனும், மிரியாமும் ஒருவரையொருவர் பிடித்துக் கொண்டு அழுது கொண்டே வருகின்றனர், பரிதாபமான யோகொபேத் இந்தப் புறமாக சென்று கொண்டிருக்கிறாள். (சகோ. பிரான்ஹாம் யோகெபேத் அழுவதைப் போன்று பாவனை செய்கின்றார் - ஆசி) ''உஷ்-உஷ்-உஷ்-உஷ்-உஷ். இதோ பார். அவர்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். ஜாக்கிரதையாக இரு, உஷ்!'' இதோ, தெருவில் நடந்து செல்கிறோம். ''உஷ்-உஷ்-உஷ். ஜாக்கிரதையாய் இரு.'' அந்தத் தாய் அந்த குழந்தையைத் தயார் செய்து கொண்டிருந்தாள். அப்பா பேழையைத் தயார் செய்து கொண்டிருக்கிறார். 219. அவர்கள் நதிக்குச் செல்கின்றனர். ஓ, அது உலகத்திலே இருக்கிற பெரிய மகத்தான நதிகளில் இரண்டாவதாகும். ஆம், மகத்தான நதிகளில் ஒன்று. எப்பொழுதும் தண்ணீர் வேகமாக ஓடும், பெரிய பெரிய முதலைகள் நிறைந்த நதி. ஓ, அவைகள் தடித்துக் காணப்பட்டன. வ்யூ! சிறிய பிள்ளைகள் அவைகளுக்கு இரையாக கொடுக்கப் பட்டது. ஆகவே அவைகள் தடித்து புஷ்டியாக காணப்பட்டன. ஆகவே யோகெபேத் தன்னுடைய கணவனாகிய அம்ராமிடம் "ஓ, இதில் இருக்கின்ற முதலைகள் குழந்தைக்கு தீங்கு செய்யுமே?'' என்றாள். 220. அவன், "கவலைப் படாதே, இந்தத் தாரின் மேல் தங்கள் மூக்கை வைக்கு மானால், அவைகள் ஓடிவிடும், பாருங்கள். காரண மென்றால் தார் நாறும், பார், தன் மூக்கை இதில் ஒட்ட வைத்துக் கொள்ளும். தார் மிகவுமாக நாற்றமெடுப்பதால் மானிட மாமிச வாசனையை அதனால் முகர்ந்து பார்க்க முடியாது. அதனால் அவைகள் ஓடிவிடும். ஆதலால் ஒன்றுமே ஆகாது. நீ எதற்கும் கவலைப் படாதே" என்றான். ஆகவே அவர்கள். ஆகவே அம்ராம் பேழையை கீழே வைத்து விட்டு "இப்பொழுது குழந்தைக்கு பால் கொடு" என்றான். ஆகவே அவள்... 221. ஆகவே அந்த தாய் அந்த குழந்தையை எடுத்த காலை ஆகார உணவாக அதிகாலையிலே அதற்கு பாலை கொடுக்கிறாள். பிறகு அவள் (சகோதரன் பிரான்ஹாம் முத்தமிடுகிற சத்தத்தை உண்டாக்குகிறார் - ஆசி] அதற்கு முத்தமிடுகிறாள். பிறகு அவள், "ஆரோனே இதற்கு முத்தமிடு'' என்றாள். ஆரோன் குழந்தைக்கு முத்தம் கொடுத்தான். பிறகு மிரியாமிடம் அதைக் கொண்டு போகிறாள், மிரியாம் அதற்கு முத்தம் கொடுக்கிறாள். பிறகு தாய் அதற்கு முத்தமிட்டு "ஓ, என்னால்...'' என்றாள். 222. ''உஷ்-உஷ்-உஷ் இப்பொழுது கேளுங்கள், நாம் யுத்த வீரர்களாக இருக்க வேண்டும். கவனியுங்கள்? நாம் யுத்த வீரர்களாக இருக்க வேண்டும். இப்பொழுது நீங்கள் எல்லாரும் இதை மறுபடியுமாக முத்தமிட விரும்புகிறீர்களா?'' மறுபடியுமாக அதை எல்லோரும் முத்தமிட்டார்கள். பிறகு அதை பெட்டிக்குள் வைத்தார்கள். 223. ஆகவே அந்தத் தாய் ஒரு சிறிய போர்வையை ஒரு சிறிய தலையணையைச் செய்து அதன் மேல் வைத்தாள், "என்னுடைய அருமையான சிறிய குழந்தையே தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக" என்றாள். ''உஷ்-உஷ்-உஷ்" கவலைப்படாதே. தேவன் அதைப் பார்த்துக் கொள்வார்" 224. சிறிய மூடியை மூடினார்கள். ஆகவே முதலாவது காரியம் என்னவென்று உங்களுக்கு தெரியுமா, அப்பா தன்னுடைய கோட்டு, மற்றும் சட்டையை கழற்றி விட்டு தண்ணீரில் நீந்திச் சென்றார். 225. சரியாக இந்தச் சமயத்தில் பரலோகத்தில் என்ன நடந்து கொண்டிருந்தது என்று உங்களுக்குத் தெரியுமா? அல்லேலூயா! உங்களுக்குத் தெரியுமா, இங்கே காரியங்கள் நடைபெறுகின்ற போது, அங்கே பரலோகத்தில் கூட சில நடந்து கொண்டிருக்கும். ஆமென் தேவன் தம்முடைய சிங்காசனத்திலிருந்து எழுந்து நடந்து சென்று, "காபிரியேல் காபிரியேல் எங்கேயிருக்கிறாய் என்று கூப்பிடுவதை என்னால் காண முடிகிறது. ''கர்த்தாவே, இதோ இருக்கிறேன்'' என்றான் காபிரியேல். 226. ''உள்ளே வா, உனக்கு ஒன்றை நான் காண்பிக்க விரும்புகிறேன், தூதர்களே எல்லாரும் இங்கே வாருங்கள், நான் உங்களுக்கு ஒன்றை காண்பிக்க விரும்புகிறேன். என்னை விசுவாசிக்கிற ஜனங்களை நான் கொண்டிருக்கிறேன். ஆம், என்னில் நம்பிக்கை வைக்கிற ஜனங்களை நான் கொண்டிருக்கிறேன். இங்கே வாருங்கள்! இதை நீங்கள் பாருங்கள்! இதை நீங்கள் பாருங்கள். இது உங்களுக்கு நல்லதாக இருக்கும், பாருங்கள்!'' ''அது எங்கேயிருக்கிறது?'' "அதோ அங்கே நோக்கிப் பாருங்கள்." "ஆமாம், ஆம், நான் காண்கிறேன்'' 227. "இதோ இங்கே கீழே பார். அங்கே - அங்கே அந்த நதியோரத்தின் புதர்களில், அங்கேயுள்ள அந்த நதியோர முள்ள கற்களண்டையில்?'' 'ஆமாம்'' ''அங்கே பார்!'' ''அது என்ன?'' 228. "அங்கே ஒரு மனிதன் முழற்காற் படியிட்டு தன் கரங்களை யுயர்த்தி என்னைக் கூப்பிட்டுக் கொண்டிருக்கிறான். அங்கே அழுது கொண்டிருக்கிற தாயும், இரு சிறு பிள்ளைகளும் இருக்கிறார்கள். அவர்கள் கடைசி வரை என்னில் நம்பிக்கை வைத்திருக்கின்றனர். காபிரியேல் நீ அங்கே சென்றதை நினைவில் வைத்திருக்கிறாயா? அந்த மனிதனை ஞாபகங் கொண்டிருக்கிறாயா?'' 229. ''ஆம், அந்த இரவில் அந்த அறையில் அவனை சந்தித்து பேசினேன். ஆமாம்'' 230. "அவன் இன்னும் என்னில் நம்பிக்கை வைத்திருக்கிறான். என்னை விசுவாசிக்கின்ற ஜனங்களை நான் கொண்டிருக்கிறேன். காரியத்தின் முடிவு வரை என்னில் நம்பிக்கையாயிருக்கிற ஜனங்கள் எனக்கு இருக்கின்றனர். அவனைப் பார்? மிகவும் வீரமுள்ளவனாக அவன் வாழ்ந்திருக்கிறான் என்பதைக் கவனி! 231. ஆகவே அந்த தகப்பன் அந்த சிறிய படகை தள்ளி விடுவதற்காக தண்ணீரில் நடக்கிறான். ''காபிரியேல்!'' என்று அவர் கூறுவதை என்னால் கேட்க முடிகிறது. ''ஆம், கர்த்தாவே?'' 232. ''பத்தாயிரம் தூதர்களை இப்பொழுது கூப்பிடு. சீக்கிரமாக இப்பொழுதே கட்டளை கொடுத்து அனுப்பு. வானத்தின் சேனைகளையெல்லாம் கூப்பிடு. அவைகள் வானத்தின் பலகணி வழியாக கீழிறங்கச் செய்து நைல் நதியண்டை அவைகளைக் கொண்டு வந்து நிறுத்து. ஒரு முதலையும் அந்த சரக்குப் பெட்டியை தொடக் கூடாதென்று நான் கட்டளையிடுகிறேன். ஒன்றுமே அதைத் தொடாது. அந்த பெட்டியின் அருகே ஒரு சிறு கட்டைக் கூட வராதவாறு பார்த்துக் கொள். ''அல்லேலூயா'' 233. ''அப்படியே ஆகக்கடவது'' என்று காபிரியேல் கூறினான். ''அது சரி, எக்காளத்தை ஊது!'' பத்தாயிரம் தூதர்கள் அங்கு வந்து நின்றனர். ''முன்னின்று நடத்தப் போகிறவர் நீர் எங்கேயிருக்கப் போகிறீர் கர்த்தாவே?'' 234. "மறு முறையில் நான் இருப்பேன்.'' எப்பொழுதுமே அவர் காரியத்தின் கடைசியில் தான் இருக்கின்றார். நான் அங்கே மறு முனையில் காத்திருப்பேன். எனக்கு ஒரு நோக்கம் உண்டு. ஜனங்கள் என்னில் நம்பிக்கை வைக்கும் போது, ஒரு நோக்கத்தை உடையவராக நான் இருக்கிறேன்; அவர்களோடு எல்லாம் சரியாக இருக்கும் அது சரி, அவர் மறு முனைக்குச் செல்கின்றார். 235. மோசேயை என்னால் காண முடிகிறது. அல்லது சிறிய ஆரோன், அவர்கள் அழுது கொண்டே தெருவில் செல்கின்றனர்.''உஷ்-உஷ்-உஷ்-உஷ்-உஷ்'' அதைக் கவனியுங்கள். 236. ஆகவே சிறிய மிரியாம், அவள் அங்கே நின்று பார்த்துக் கொண்டிருக்கிறாள். "ஓ, ஓ'' என்றாள். 237. ''மிரியாம், சீக்கிரமாக வா. விடியற் காலமாகிறது. சீக்கிரம் வா, நாள் வருகிறது என்று சேவல்கள் கூவுகின்றன. சீக்கிரம், பகல் வெளிச்சம் வருகிறது. தேனே சீக்கிரம் வா, நாம் போகலாம்!'' என்றான். 238. "ஓ, அப்பா, அப்பா தயவு செய்து ஒரு முறை நான் நின்று என்ன நடக்கிறது என்பதை நான் காணட்டும், சிறிது நேரம் கழித்து நான் வீட்டிற்கு வருகிறேன்" என்றாள். 239. 'ஓ' (சகோதரன் பிரான்ஹாம் தன்னுடைய விரலை சொடுக்குகிறார் - ஆசி) "அது அருமையான யோசனை, மிரியாம், அது சரியாகத் தான் இருக்கிறது. நீ நின்று என்ன நடக்கப் போகிறது என்று பார்த்துக் கொண்டு இரு" என்றான். 'அது சரி, நான் - நான் கவனிக்கிறேன்.'' 240. ''இப்பொழுது, நீ சிறிது நேரம் கழித்து வேகமாக வீடு திரும்பி வா. என்ன நடக்கிறது என்பதை மாத்திரம் பார். என்ன நடக்கிறது என்ற செய்தியை நீ வீட்டிற்கு கொண்டு வா.'' ''சரி அப்பா'' ஆகவே அவர்கள் வீடு திரும்பினர், வேகமாக செல்ல வேண்டியதாய் இருந்தது. 241. சிறிய மிரியாம் அவள் நின்று கவனித்துக் கொண்டிருக்கிறாள். முதலாம் காரியம் என்ன தெரியுமா? வெளிச்சம் வருகின்றது. "ஓ, ஓ, ஓ, அங்கே என்ன வருகிறது? அது ஒரு மரத்துண்டு, இல்லை அது ஒரு முதலையா? ஓ அது திரும்பி விட்டது'' 242. ஹா-ஹா! அது எதைக் கண்டது? நிறைய மக்கள் காணக் கூடாததை அது கண்டது. பாருங்கள்? அந்த சிறிய சரக்கு கப்பல் அங்கே மிதந்து கொண்டிருந்தது. அதற்கு எந்த ஒரு தலைவனும் இல்லை, அதற்கு எந்த ஒரு மாலுமியும் இல்லை என்று அவர்கள் நினைத்தனர். அதற்கு இருந்தார்கள், அவர்கள் சுற்றிலும் இருந்தனர். 243. இங்கே ஒரு சிறிய முதலை வருகின்றது. "ஓ அங்கே பார்" என்றது. இங்கே மிதந்து கொண்டே, அது வந்தது. அது...'' ஓ இல்லை. வேண்டாம், வேண்டாம்.'' அந்த சரக்குக் கப்பலுக்கு அருகில் உன்னால் செல்லவே முடியாது. அதினுள் அடிமைத்தனத்தை அறுத்து வெளியே விடுவிக்கப் போகிறவன் இரட்சகன் இருக்கிறான், அடிமைத் தளையை அறுத்து பத்து இலட்சம் யூதர்களை விடுவிக்கப் போகிறவன் இருக்கிறான். பாதாளத்தில் இருக்கின்ற எல்லா பிசாசாலும் அவனைத் தொட முடியாது. இந்த சிறிய கீல் பூசப்பட்ட பேழை இங்கே நதியிலே மிதந்து கொண்டு வருகிறது. 244. முதலாவது காரியம் என்ன தெரியுமா, அது ஒரு சுழலில் சிக்கிக் கொள்கிறது, மிரியாம், "ஓ! ஓ! ஓ அங்கே பார், அந்த சுழல் அங்கே பார், அங்கே பார்' என்றாள். என்ன ஆனது என்று உங்களுக்குத் தெரியுமா, அந்த க்ஷணத்தில் அது வெளியே சென்றது. 245. அந்த வழியாகத் தான் அது செல்லும். சில சமயங்களில் நாமும் ஒரு சுழலில் சிக்கிக் கொள்கிறோம். இந்த சிறிய கப்பல். கவலை கொள்ளாதீர். ஒருவர் கவனித்துக் கொண்டிருக்கிறார். "தேவனுடைய தூதர்கள் அவருக்கு பயந்தவர்களைச் சூழ பாளயமிறங்கியுள்ளனர் தயாராக இருக்கும் பட்டியலில் பத்தாயிரம் பேர்களை அவர் கொண்டிருக்கிறார். 246. இந்தச் சிறிய மிரியாம் சென்று ஒரு பெரிய பாறையின் மேல் ஏறி இப்படி நோக்கிப் பார்க்கின்றாள். ஆகவே அவள் கீழே நோக்கி பேழையைப் பார்க்கின்றாள். ஆகவே அவள் இங்கே கீழே இந்த கொடிகளிற்குள் செல்கின்றாள். சிறிது நேரம் கழித்து அந்தப் பெட்டி அப்படியே நின்று விட்டது. ஓ, ஓ இது என்ன?'' என்றாள். 247. (அவளுடைய தகப்பன் அவளிடம் ''அதை நீ கவனித்துக் கொண்டிருக்கிறாய் என்பதை யாரும் அறியாதவாறு பார். யாராவது அங்கே வந்தார்களானால், அதை நீ பார்க்காதது போல இருந்து வேறு வழியாகச் செல். அதை நீ கவனித்துக் கொண்டேயிருக்காதது போல சென்று கொண்டேயிரு'' என்றான். அவளும் ''சரி'' என்றாள்.) 248. அது நதியின் ஓரமாக சென்று கொண்டேயிருந்து அப்படியே நின்று போனது. காரியம் என்ன வென்று உங்களுக்குத் தெரியுமா? ஒரு பெரிய மீனவர் குழு அதைப் பார்க்க நேர்ந்தது. ஆனால் அவளோ, சிறு பெண்ணாக, சாதாரணமாக நடந்து செல்வதைப் போலவே பாவனை செய்தாள். அது பகல் பத்து மணியாக இருந்தது. ஆகவே அவள் நதியோரமாகவே நடந்து சென்று கொண்டிருந்தாள். அது எங்கே செல்கிறதென்று தன் கண்களால் இந்தப் புறமாக பார்த்துக் கொண்டே சென்றாள். 249. சிறிது நேரம் கழித்து மற்றுமொரு குழுவை அவள் கடந்து சென்றாள், அவள் கவனித்துக் கொண்டே சென்றாள். இன்னுமாக சென்றாள். சென்று கொண்டேயிருக்கிறாள்; இன்னுமாக சென்று கொண்டேயிருந்தாள். 250. சிறிது நேரம் கழித்து ஒரு பெரிய மதிலண்டை வந்தாள். ''ஓ, என்னே, இந்த சுவற்றிற்கு பின்னால் செல்கிறதே!'' என்றாள். அவளால் என்ன செய்ய முடியும்? என்ன செய்ய வேண்டுமென்று அவளுக்கு தெரியவில்லை. அவளால் சுவற்றின் மீது ஏற முடிய வில்லை. ஆகவே அவள் தண்ணீருக்குள் நீந்திச் சென்று இப்படி ஏறிச் சென்று மேலே ஊர்ந்து செல்கிறாள். அவள் மேலேறிச் சென்று, நடந்து கொண்டேயிருந்தாள். 251. முதலாவதாக காரியம் என்னzவென்று உங்களுக்கும் தெரியுமா? அவள் ஒரு அழகான தோட்டத்தில் இருக்கின்றாள். பூக்கள் எங்கும் பூத்துக் குலுங்குகின்றன, அது மிகவும் அழகாக இருந்தது. இப்பொழுது கவனியுங்கள். சிறுமிகளே இப்பொழுது கவனியுங்கள். அழகான பூக்கள், ஓ எல்லா மரங்களும் அழகாக ஒழுங்காக கத்தரிக்கப்பட்டிருந்தன. அது மிகவும் அழகாக காணப்பட்டது. அது ஒரு தோட்டமாக இருந்தது. அவள் "ஓ, ஓ என்னே, இதோ நான் பார்வோன் ராஜாவின் அரண்மனைத் தோட்டத்தில் இருக்கிறேன். இங்கே நான் என்ன செய்யப் போகிறேன்? என்னை அவர்கள் இங்கே கண்டு பிடித்தார்களானால், ஓ, என்னே, எனக்கு என்ன செய்வார்கள்?'' என்றாள் 252. ஆகவே அவள் கவனித்தாள். அதோ அந்த பேழை அங்கே சென்று அங்கே தண்ணீரில் நின்று மிதந்து கொண்டிருந்தது. ஏன் என்று நான் வியக்கிறேன்? யாரோ ஒருவர் பேசிக் கொண்டிருப்பதை அவள் கேட்கிறாள். அந்தச் சிறிய மிரியாம் புதர்களுக்குள் சென்று அமர்ந்து இப்படி பார்த்துக் கொண்டிருந்தாள். ஆனால் அவள் வெளியே எட்டி அதைப் பார்ப்பாள். 253. என்ன வாயிற்று தெரியுமா? பெரிய கறுப்பு மனிதர் ஒரு பந்தலை இதைப் போன்று சுமந்து கொண்டு வருகின்றனர். பின்னாலே தாதிகள் பாடிக் கொண்டே வந்தனர். பிறகு இதோ ஒரு ஸ்திரீ வருகிறாள். அவள் தலையிலே ஒரு பெரிய பொன்னாலான பட்டையை அணிந்திருந்தாள். அதில் இதைப் போன்று வாயைத் திறந்து கொண்டிருந்த ஒரு பெரிய பாம்பின் உருவம் முன்னாலே இருந்தது. அவள் அழகான ஒரு ஸ்திரீயாக காணப்பட்டாள். அவள் அங்கே வருகிறாள். அவள் அழகான ஆடைகளையும் மற்றவைகளையும் அணிந்திருந்தாள். ஒரு தாதி ஒருவள், ''மேன்மைக்குரிய அரசியே, தண்ணீர் இந்த காலை வேளையில் வெப்பமாக இருக்குமா?'' என்று கூறுவதை என்னால் கேட்க முடிகிறது. 254. அதற்கு மிரியாம், ''மேன்மைக் குரிய என்ன? ஓ, அது ராஜபோகமாக இருக்க வேண்டும். ஆகவே நான் தோட்டத்தில் இருக்க வேண்டும். என்னை அவர்கள் கண்டு பிடித்தார்களானால் எனக்கு என்ன செய்வார்கள்?'' என்றாள். 255. அது சரி, அவள் வருகின்றாள், இந்த பெரிய கறுப்பு மனிதர் அதை எடுத்து இதைப் போன்று பிடித்து கொண்டு தண்ணீரின் முனைக்கு நடந்து வருகின்றனர். துடைப்பதற்கான துணிகளை, டவல் துண்டுகளை ஒரு தாதி வைத்திருந்தாள், மற்றொருவன் சோப்பை வைத்திருந்தாள், தன் காலை குளியலுக்காக அந்த அரசி வந்திருந்தாள். அவள் தன் காலணிகளை கழற்றி' "என் கால்களை தண்ணீரில் வைத்து தண்ணீர் வெப்பமாக இருக்கிறதா என்று பார்க்கிறேன். ஓ, அது மிகவும்... அங்கே இருப்பது என்ன?'' என்றாள். 256. சிறிய மிரியாம், "ஓ! ஓ! அஷ் - ஓஷ் அவள் கண்டு பிடித்து விட்டாள்'' என்றாள். "ஓ அது முதலையாயிருக்குமோ?'' என்றாள். 257. அங்கிருந்த பலசாலியான மனிதர்களில் ஒருவன், ''ஒரு நிமிடம், நான் பார்த்து விட்டு வருகிறேன்.'' சள, சள,சள, என்று தண்ணீருக்குள் நடந்து செல்கிறான். இதைப் போன்று பெட்டியை எடுத்துக் கொண்டு நடந்து வந்தான். ''மேன்மைக்குரியவளே!'' என்று கூறி அதை தாதியிடம் கொடுத்தான். ஆகவே அந்த தாதி அதை வாங்கி, அதை அவளிடம் அளிக்கிறாள், அவள் அதை வாங்கி வைத்து உட்காருகிறாள். 258. அவள், ''அது என்ன? வ்யூ, நாறுகிறதே! முழுவதும் தார் பூசப்பட்டுள்ளதே. இங்கே பார், அதன் மேலே ஒரு சிறுது துவாரம் காணப்படுகிறதே.'' என்றாள். 259. மிரியாம், "ஓ! ஓ அதோ என்னுடைய சிறிய சகோதரன் செல்கிறான். அதோ என்னுடைய சிறிய தம்பி செல்கிறான்'' என்றாள். 260. ஆகவே அவர்கள் இவ்வாறு அதைத் திறந்தனர். ''ஓ, இது ஒரு குழந்தை!'' அப்பொழுது... உலகத்திலே இருந்த ஒரு சிறிய அழகான குழந்தை! ஆகவே, ஓ, தேவன், வெறுப்பை உண்டாக்கக் கூடியவர். அன்பை பிறப்பிக்கக் கூடியவர். தேவன் ஒரு மானிட இருதயத்தில் வைக்க வேண்டிய எல்லா அன்பையும், ஒரு தாய் ஒரு குழந்தைக்காக காட்டும் அன்பிலே வைத்ததை அவர் அந்தப் பெண்ணின் இருதயத்தில் வைத்தார். ஆகவே அவள், "இது எபிரேய.. இது என்னவென்று நானறிவேன். என்னுடைய கொடுர எண்ணம் கொண்ட தகப்பன், அவர் மிகவும் கேவலமாக நடந்து கொள்கிறார்! எல்லா எபிரேயக் குழந்தைகளும் கொல்லப்பட வேண்டும் என்று கூறியிருக்கிறார். ஆகவே தாய்களில் ஒருத்தி எங்கேயாவது தன் குழந்தை கரை ஒதுங்கி பிழைத்துக் கொள்ளும் எனக் கருதி இதை நதியில் விட்டிருக்கிறாள். ஓ, அவர் மிகவும் தீய எண்ணம் படைத்தவர். நல்லது, அவர் இதை கொல்ல மாட்டார். ஏனெனில் இது என்னுடையதாகும் என்று கூறினாள். ஊம் - ஊம், தேவன் எவ்விதம் செய்கிறார் என்பதைப் பாருங்கள்? 261. அவள் அந்தக் குழந்தையை எடுத்து (சகோ. பிரான்ஹாம் முத்தமிடும் சத்தத்தை உண்டாக்குகிறார் - ஆசி) முத்தமிடுகிறாள். அப்பொழுது அந்தக் குழந்தை அழுதது. அந்தக் குழந்தை அழுத போது அவளுடைய இதயம் நெகிழ்ந்து போனது. ''பாவம் சிறிய பிள்ளை, நான் இவனை வைத்துக் கொள்வேன், இவனுக்கு நான்... நான் ஒரு பெயரைக் கொடுக்கப் போகிறேன்'' என்றாள். அங்கே தான் அவன் தன்னுடைய பெயரை பெற்றுக் கொண்டான். 262. அவனுடைய பெயர் என்ன? (சபையார் "மோசே" என்கின்றனர் - ஆசி) மோசே. மோசே என்றால் "ஜலத்தினின்று எடுக்கப்பட்டவன்" என்று அர்த்தம். பாருங்கள்? 263. அவள், "இப்பொழுது நான் இவனை மோசே என்றழைக்கப் போகிறேன், இவன் என்னுடைய குழந்தையாக இருப்பான்.'' என்றாள். ஆனால் பிறகு, ''நான் ஒரு மணமாகாத கன்னிப் பெண்ணாயிற்றே, என்னால் இவனுக்கு பாலூட்ட முடியாது. இவனுக்கு எப்படி என்னால்-என்னால்-என்னால் பால் கொடுக்க முடியும்'' என்றாள். பால் புட்டிகள் மற்றக் காரியங்கள் அவர்களிடத்தில் அப்பொழுது இருக்கவில்லை. இப்பொழுது இருக்கிறது போல அப்பொழுது ஸ்திரீகள் சிகரெட் பிடித்துக் கொண்டும், மற்றக் காரியங்களைச் செய்து கொண்டு, தங்களைக் கெடுத்துக் கொள்ளவில்லை. ஆகவே அவள் "நான் என்ன என்ன செய்ய முடியும், உங்களுக்கு தெரிந்த... நான்...?'' என்றாள். 264. அவர்களில் ஒருத்தி ''நான் கூறுகிறேன், மேன்மைக்குரிய அரசியே, உம்முடைய குழந்தைக்குப் பால் கொடுத்துக் காக்கும் செவிலித் தாயை நான் ஏற்பாடு செய்கிறேன்" என்றாள். ''ஓ, அது மிகவும் அருமையானது என்றாள். 265. அந்த புதற்றுக் கருகில் ஏதோ ஒன்று, ஒரு தூதன் மிரியாமிடம், ''மிரியாமே இதோ உன் தருணம்! இதோ உனக்குரிய வாய்ப்பு. ஒன்றையுமே இப்பொழுது கூறாதே, நீ மாத்திரம் போய், ''ஒரு செவிலித் தாயை அழைத்து வருகிறேன்'' என்று கூறி உன்னுடைய தாயாரைக் கூட்டிக் கொண்டு வா" என்றான். சிறிய மிரியாம் ஓடினாள். ஆகவே அவள் "மேன்மைக்குரிய அரசியே!'' என்றாள். 266. இப்பொழுது, சாதாரணமாக ''இங்கே நீ என்ன செய்துக் கொண்டிருக்கிறாள்?'' என்று தான் அந்த அரசி கேட்டிருப்பாள். ஆனால், பாருங்கள், தேவன் முழுவதுமாக அங்கே பிரசன்னமா யிருந்தார். என்ன? பத்தாயிரம் தூதர்களை அங்கே பணியில் வைத்திருந்தார். பாருங்கள்? அவருடைய திட்டம் அங்கே சரியாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. பத்தாயிரம் தூதர்கள் அங்கே நின்று கொண்டிருக்க செய்தார். 267. ஆகவே காரியம் என்ன வென்று உங்களுக்குத் தெரியுமா, அவள் "ஆம், அருமையானவளே, இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய்?'' என்றாள். 268. அதற்கு இவள், "இப்பொழுது தான் உம்மை குழந்தையுடன் நான் கண்டேன், உமக்காக உம்முடைய குழந்தையை நன்றாக கவனித்துக் கொள்ளக் கூடிய ஒரு அருமையான தாய் எனக்குத் தெரியும்'' என்றாள். 269. அவள், ''போய் அவளை அழைத்தக் கொண்டு வா, இந்த குழந்தையை பராமரிக்க வாரம் முந்நூறு டாலர்கள் தருகிறேன் என்று அவளிடம் சொல், இந்த அரண்மனையில் இருக்கின்ற எல்லா அறைகளையும் நான் அளிக்கிறேன். ஆகவே இந்த குழந்தைக்கு பாலூட்டுகின்ற உனக்கும் தெரிந்த ஒரு எபிரேய ஸ்திரீ அதாவது ஒரு செவிலித் தாய் எங்கேயிருந்தாலும் அவளை அழைத்துவர். இது என்னுடைய குழந்தை என்றாள். "ஆம் மேன்மைக் குரிய அரசியே, உமக்கு ஒரு தாயை கொண்டு வருகிறேன்" என்றாள். 270. அவள், "ஒரு நிமிடம் பொறு, நீ அரண்மனைக் குள்ளாக செல்லும் போது நண்பனா விரோதியா எனக் கண்டு அனுமதிதர உதவும் இரகசிய, சங்கேத வார்த்தையை (password) நீ தெரிந்திருக்க வேண்டும். பார் உனக்கு அந்த இகரசிய வார்த்தை தெரியாது. ஒவ்வொரு நாளும் ஒரு இரகசிய வார்த்தையை நாங்கள் வைத்திருப்போம். இப்பொழுது, இன்றைக்குரிய ரகசிய வார்த்தை என்னவென்று உனக்குத் தெரியுமா? நீண்ட கவைக் கொம்பும், ஒரு வைக்கோல் போரும். (A Pitchfork and a load of hay). ஆகவே நீ கதவின் வழியாக சென்று வர இதைக் கூற வேண்டும்'' என்று கூறினாள். 271. ஆகவே இந்தச் சிறிய மிரியாம் வீட்டிற்கு தன்னால் முடிந்த வரை மிக வேகமாக ஓடினாள். சுவற்றின் மேலேறி குதிக்கிறாள். இந்த பக்கமாகச் செல்கிறாள், தெருவில் செல்கிறாள், இந்த பக்கமாக செல்கிறாள். வீட்டிற்குள் ஓடிச் செல்கிறாள். 272. அம்ராம் அப்பொழுது தான் வீட்டிற்கு வந்திருந்தான். யோகெபேத்... ஓ, என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதைக் குறித்து அவர்கள் மிகவும் கவலையுள்ளவர்களாக காணப்பட்டனர். அவள் "ஓ, என் குழந்தை! என் குழந்தை!'' என்றாள். அவள் 273. அவன், ''இப்பொழுது கவனி, சிறிது நேரத்திற்கு முன் தான் நான் தெருவில் வந்தேன், அந்த ஏழைத் தாய் நாள் முழுவதுமாக அந்தக் குழந்தைகளை அவள் வைத்திருந்தாள். அவர்கள் (சூனியக் கார கிழவிகள்- தமிழாக்கியோன் இக்காலை இக்குடியிருப்பிற்கு வந்து, இங்கிருந்த எல்லா குழந்தைகளின் தலைகளையும் சுவற்றில் மோதிக் கொன்றனர். எப்படி அவர்கள் ஓலமிட்டு அழுது கொண்டிருந்தனர்! நம் குழந்தையின் நிலை எப்படியிருக்கிறது என்று தெரியவில்லை. தேவன் அதைப் பார்த்துக் கொள்வார் என்றான். 274. அப்பொழுது யாரோ ஒருவர். (சகோதரன் பிரான்ஹாம் பிரசங்க பீடத்தை தட்டுகிறார் - ஆசி) "ஓ! ஓ, இதோ இப்பொழுது அவர்கள் கதவண்டையில் நிற்கிறார்கள். ஆகவே அவர்கள் சென்று பார்க்கின்றனர். அவர்கள் இல்லை. அது மிரியாம் ஆகும். 275. அவள், ''ஓ ஓ, மிரியாம்! அருமையானவளே உள்ளே வா குழந்தைக்கு என்னவாயிற்று?'' என்றாள். ''அம்மா, எனக்கு மிகவுமாக பசிக்கின்றது'' என்றாள். "ஆனால் குழந்தைக்கு என்ன ஆயிற்று?" என்று கேட்டாள். 276. அவள், "அம்மா நான் பட்டினியாயிருக்கிறேன், ஓ, கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! அல்லேலூயா! நான் பட்டினியாயிருக்கிறேன் அம்மா' என்றாள். "ஆனால் குழந்தைக்கு என்ன ஆயிற்று?" என்று கேட்டாள். 277. ''அம்மா, நான் மிகவும் பசியாயிருக்கிறேன், வீட்டில் இருக்கிற எல்லாவற்றையும் என்னால் சாப்பிட முடியும்'' என்றாள். 278. ''நல்லது, நீ சாப்பிட உனக்கு எதையாவது தருகிறோம். ஆனால் குழந்தைக்கு என்ன ஆயிற்று?'' 279. "ஆனால் குழந்தைக்கு எந்த ஒரு குறையும் இல்லை. சாப்பிட எதையாவது எனக்குத் தாருங்கள். ஓ நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்" என்றாள். "ஆனால் அதற்கு என்ன ஆயிற்று?'' 280. ''நல்லது எனக்கு சாப்பிட எதையாவது எனக்குத் தாருங்கள், நான் பட்டினியாயிருக்கிறேன்'' என்றாள். உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? 281. அவள், ''மிரியாம்! நாங்கள் உன் அம்மா, அப்பா. குழந்தை எங்கே?'' என்று கேட்டாள். 282. அதற்கு அவள், அம்மா, நான் ஏற்கனவே உங்களுக்கு கூறிவிட்டேன். குழந்தையை நான் கண்டேன். அது நன்றாக இருக்கிறது. இப்பொழுது, அம்மா, சாப்பிட ஏதாவது எனக்குத் தாருங்கள், நான் பட்டினியாயிருக்கிறேன், உங்களுக்கும் தெரியும். நான் பட்டினியாயிருக்கிறேன் என்றாள். நீங்கள் பள்ளியிலிருந்து திரும்பி வந்தவுடன் கேட்பது போல, உங்களுக்குத் தெரியும்; ஓ, ஏதாவதொன்று உங்களுக்கென இருக்க வேண்டும். ஆகவே அவள் சென்று ஒரு சாண்ட்விச் தின்பண்டத்தை கொண்டு வந்து "இப்பொழுது கூறு'' என்றாள். 283. அவள், ''யம், யம், யம்'' என்று சாப்பிட்டுக் கொண்டே, அதே போன்று, ''அம்மா?'' என்றாள். "சரி, குழந்தைக்கு என்ன ஆயிற்று?'' என்றாள். 284. "என்ன, அம்மா...'' என்று நடந்த யாவற்றையும் அவளுக்கு கூறினாள். பிறகு, ''அம்மா, உங்களுடைய சிறந்த துணிமணிகளை எடுத்துக் கொண்டு உங்களுடைய சூட்கேஸ் பெட்டியை ஆயத்தப் படுத்துங்கள். ஏனெனில் நீங்கள் தான் குழந்தையை பராமரிக்கப் போகிறீர்கள். ''ஓ! ஓ! ஓ! ''என்ன?'' 285. நீங்கள் அதை இழந்தால், மறுபடியுமாக அதை கண்டெடுப்பீர்கள். அது சரியா? நீ அதை வைத்துக் கொள்வாயானால் அதை நீ இழந்து போவாய். நீ அதைக் கொடுத்தால், அதை இழந்தால், அதைப் பெற்றுக் கொள்வாய். அது சரியா. 286. ஆகவே சிறிய மிரியாம் சாப்பிட்டுக் கொண்டே, ''ஆம், இன்றைக்கு நீங்கள் அரண்மனைக்குச் செல்லப் போகிறீர்கள், அது மாத்திரமல்ல, உம்முடைய சொந்த குழந்தையை வளர்க்க உமக்கு வாரம் முந்நூறு டாலர்களும், தேசத்திலேயே சிறந்த அறைகள் உங்களுக்கு அளிக்கப்படும்'' என்றாள். 287. உலக சரித்திரத்திலேயே தன்னுடைய சொந்தக் குழந்தையையே வளர்த்து பராமரிக்க ஒரு தாய்க்குச் சம்பளம் அளிக்கப்படுகின்றது. தேவன் எப்படிச் செய்கிறார் என்று பாருங்கள்? அல்லேலூயா! தன் சொந்தக் குழந்தையையே வளர்த்து அதைப் பராமரிக்க வாரம் முந்நூறு டாலர் சம்பளமும், தேசத்திலேயே சிறந்த அறைகள் கொடுக்கப்படுதல். தேவன் காரியங்களைச் செய்கிறார், அப்படித் தானே? ஜெபிப்பதினால் பலன் உண்டா? (சபையார் 'ஆமென் என்கின்றனர்) ஜெபித்தல் நன்றல்லவா? ("ஆமென்"]. 288. ஆகவே, அவள் தன்னுடைய சிறிய சூட்கேஸ் பெட்டியை தயார் செய்தாள். நாம் சீக்கிரமாக கடந்து செல்லுவோம்; இன்னும் ஒரு நிமிடத்தில் நாம் முடிப்போம். நாம். ஆகவே அவள் தன் பெட்டியை ஆயத்தம் செய்து தன்னால் முடிந்த வரை சாலையில் வேகமாகச் சென்றாள். ஆகவே உங்களுக்குத் தெரியுமா, அவள் வந்தபோது ஒரு பெரிய சேவகன் ஒரு பெரிய ஈட்டியுடன் நின்று கொண்டு, "யார் அங்கே செல்வது?'' என்றான். அவள், ''நீண்ட கவைக் கொம்பும் ஒருவைக் கோல் போரும்'' என்றாள். ''சரி, செல்'' என்றான். தேவன் காரியங்களை எப்படிச் செய்கிறார் என்று பாருங்கள்? 289. அவள் அடுத்த காவலண்டை சென்றாள். அவன் தன் பட்டயத்தை உருவி, ''யார் நீ? அங்கு செல்வது யார்?'' என்றான். அவள் ''நீண்ட கவைக் கொம்பும், ஒரு வைக்கோல் போரும்,'' என்றாள் "சரி செல்'' என்னே! தேவன் எவ்விதமாய்க் காரியங்களைக் செய்கிறார். 290. அங்கே அரண்மனையண்டை செல்கின்றாள். எல்லா போர்ச் சேவகரும் வந்து தங்கள் பட்டயங்களை உருவி, "யார் அங்கே செல்கிறது?' என்றனர். ''நீண்ட கவைக் கொம்பும் ஒரு வைக்கோல் போரும்' (A Pitchfork and a load of hay). என்றாள். ''உள்ளே செல் 291. முதலாவது காரியம் என்னவென்று உங்களுக்கு தெரியுமா, ஒரு மனிதன் வெளியே வந்து, 'மேன்மைக்குரிய அரசி எதிர் பார்த்துக் கொண்டிருக்கிற சிறிய பெண் இவள் தானா?'' "ஆம்'' 292. 'இன்று காலை கண்டெடுக்கப்பட்ட குழந்தைக்கான, பாலூட்டி பராமரிக்கப் போகின்ற செவிலித்தாய் இவள் தானா?'' ''ஆம்'' 293. ''நல்லது அவளை உள்ளே அழைத்து வா.'' என்றாள். ஆதலால் அவள் குழந்தையை... அல்லது தாயை உள்ளே கொண்டு வந்தார்கள். 294. ஆகவே அந்த சிறிய இளவரசி வெளியே நடந்து வந்து, "இந்த குழந்தையை பற்றி ஏதாவது உனக்குத் தெரியுமா?'' என்றாள். அவள், "ஆம் மேன்மைக் குரிய அரசியே'' என்றாள். ''இந்தக் குழந்தையைப் பார். இது அழகாய் இருக்கின்றதல்லவா?'' என்றாள் அரசி. ''ஆம், மேன்மைக்குரிய அரசியே ஆமாம்'' ''இந்த குழந்தை உன்னால் பாலூட்டி வளர்க்க முடியுமா?'' என்றாள். ''ஆம், மேன்மைக்குரிய அரசியே. நிச்சயமாக.'' 295. ''நல்லது, நான் உனக்கு வாரம் முந்நூறு டாலர்கள் சம்பளமாகத் தருகிறேன்'' என்றார்கள். ஹம்! தேவன் நல்லவர் தானே? பிறகு அவள், ''அரண்மனையில் உள்ள சிறந்த அறைகள் உனக்குத் தரப்படும், உணவு உனக்கு அனுப்பப்படும், நீ வெளியில் வந்து, உனக்காக சமைக்க வேண்டிய அவசியமும் உனக்கு இல்லை. இப்பொழுது இதோ குழந்தை, கவனமாயிரு, கீழே போட்டு விடாதே" என்றாள். "ஓ, நீர் கவலை கொள்ளாதீர், நான் பார்த்துக் கொள்கிறேன். நான் இதை கீழே போட்டு விடமாட்டேன், பயப்படாதீர்கள்" ''சிறந்த முறையில் நீ இதை பராமரிக்க வேண்டும்.'' 296. "கவலைப்படாதீர்கள், நான் பார்த்துக் கொள்ளுகிறேன். இது மிகச் சிறந்த முறையில் பராமரிக்கப் படும், கவனமான முறையில் இதை நான் பார்த்துக் கொள்கிறேன்'' என்றாள். நிச்சயமாக, இது அவளுடையது தான், பாருங்கள். ''இதோ பார் இது மிகவும் அழகான குழந்தையல்லவா?'' அவள், ''மிகவும் அழகாயுள்ளது'' என்றாள். ''அது சரி.'' 297. கதவு மூடினது, மிரியாம், அவளது தாய் மற்றும் மோசே உள்ளே சென்றனர். கதவை மூடின பிறகு, அவள் சுற்றும் முற்றும் பார்த்தாள், ''உன்னைத் தன்னுடைய குழந்தை என்று அவள் நினைத்திருக்கிறாள். ஹா-ஹா-ஹா-ஹா-ஹா!'' ஓ, என்னே அவள் அதைக் கொஞ்சினாள். 298. அவள் என்ன செய்தாள்? அவள்... அவள் அதை வைத்திருந்தாளானால், என்ன ஆகியிருக்கும்? (சபையார் ''இதை இழந்து போயிருப்பாள்'' என்கின்றனர் - ஆசி) அதை அளித்த அவரிடமே திருப்பி அளித்ததால் என்ன ஆயிற்று? [''அவள் அதை மறுபடியும் கண்டெடுத்தாள்] மறுபடியும் கண்டெடுத்தாள். ஆகவே அவள் அதை வைத்துக் கொள்ளலாம். இப்பொழுது, நாம் அதை இழந்து... நம்முடைய ஆத்துமாவை நாமே வைத்துக் கொள்வோமானால் என்ன சம்பவிக்கும்? ''நாம் அதை இழந்து போவோம் நாம் அதை இழந்து போவோம். அதை நமக்களித்த அவரிடமே திருப்பி அளிப்போமானால் என்ன சம்பவிக்கும்? ''நாம் அதை காத்துக் கொள்வோம் நாம் அதை காத்துக் கொள்வோம். அது சரியா? 299. எத்தனை பேர் இங்கே பீடத்தைச் சுற்றி வந்து ஜெபிக்க விரும்புகிறீர்கள்? அதைச் செய்ய நீங்கள் விரும்புகிறீர்கள்? அந்தச் சிறிய குழந்தையை அவர் காத்துக் கொண்டது போல உன்னையும் இயேசு காத்துக் கொள்ள நீங்கள் விரும்புகிறீர்களா? இப்பொழுது சிறிய பிள்ளைகளாகிய நீங்கள் எல்லாரும் இந்த பீடத்தை சுற்றி வாருங்கள், அப்படி செய்வீர்களா? பீடத்தை சுற்றி வந்து சுற்றிலும் முழங்காலிடுங்கள். நாமெல்லாருமாக ஜெபிப்போம். எல்லா சிறிய பிள்ளைகளும் இங்கே வாருங்கள். என்னுடைய இந்தச் சிறிய கதையை எல்லாரும் விரும்புகிறீர்களா? [சபையார் "ஆமென்'' என்கின்றனர் - ஆசி) நீங்கள் அதை விரும்பினீர்களா? சரி இப்பொழுது வாருங்கள். எல்லா சிறு பிள்ளைகளும் வந்து சுற்றிலும் கீழே முழங்காலிடுங்கள். அது தான். பின்னால் இருக்கின்ற சிறு பிள்ளைகளே, இப்பொழுது இங்கே வாருங்கள், நாங்கள் ஜெபிக்கப் போகிறோம். அது சரி. வந்து ஜெபிக்கப்பட்ட நீங்கள் விரும்புகிறீர்களா? வந்து பீடத்தை சுற்றி முழங்காலிடுங்கள். அது சரி. இப்பொழுது, அது சரி. அது அருமையானது. அது சரி. 300. தாய்மார்களே, தந்தையர்களே, நீங்களும் வர விரும்புகிறீர்களா, உங்கள் இருக்கைகளிலேயே நீங்கள் முழங்காலில் நில்லுங்கள். 301. இப்பொழுது, இங்கிருக்கிற சிறுபிள்ளைகளே, உங்களை ஒன்று நான் கேட்க விரும்புகிறேன். கவனியுங்கள், மோசேயை நேசித்தது போல இயேசுவும் உங்களை நேசிக்கிறார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? தூதர்களும் இதேப் போன்று உங்களை கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? தூதர்களும் இதே போன்று உங்களை கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? இப்பொழுது, தேவன் உங்களுக்கு ஒரு ஆத்துமாவை கொடுத்தார். அப்படித் தானே? இப்பொழுது, உங்கள் ஆத்துமாவை நீங்களே வைத்துக் கொள்வீர்களானால், அதற்கு என்ன நேரிடும்? [பிள்ளைகள், ''அதை இழந்து போவோம்'' என்கின்றனர் - ஆசி) நீங்கள் அதை இழந்து போவீர்கள். ஆனால் இந்த காலை வேளையில் இயேசுவினிடமே அதை நீங்கள் திரும்ப அளித்தீர்களானால், நீங்கள் என்ன செய்வீர்கள்? (அதைக் காத்துக் கொள்வோம்:) அதைக் காத்துக் கொண்டு பரலோகத்திற்கு செல்வோம். இப்பொழுது, உங்கள் ஆத்துமாவை, காப்பாற்றிக் கொள்ள நீங்கள் விரும்புகிறீர்களா? உண்மையான தாய்களாகவும் ஸ்திரீகளாகவும் நீங்கள் வளர விரும்புகிறீர்களா? அப்படித் தானே, உண்மையான மனிதனாகவும், பிரசங்கங்களாகவும் ஆக விரும்புகிறீர்களா? அதைச் செய்ய நீங்கள் விரும்புகிறீர்களா? அதைச் செய்ய நீங்கள் விரும்புகிறீர்களா? இப்பொழுது, அப்படி ஆக விரும்புவீர்களானால் உங்கள் ஆத்துமாவை இயேசுவிற்கு அளியுங்கள். அதைச் செய்வதற்கான வழி இதோ இருக்கிறது. "அன்புள்ள இயேசுவே, உமக்கு அளிப்பதற்கென, என்னிடம் ஒன்று மாத்திரமே உள்ளது, அது என்னுடைய ஆத்துமாவாகும், ஆனால் மோசேக்கு நீர் செய்தது போன்று என்னையும் கவனித்துக் கொள்ளும் என்று நீங்கள் கூறுங்கள். 302. இப்பொழுது, இங்கே வந்து முழங்காற் படியிட விரும்பும் பெரியவர்களில் சிலர், தாய்மார்களில் சிலர், ஒருவேளை இந்த காலை வேளையில் நீங்கள் வந்து முழங்காற்படியிட விரும்பலாம். அப்படி நீங்கள் செய்வீர்களானால் தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. இங்கே வந்து முழங்காற்படியிட நீங்கள் விரும்புவீர்களானால், அது அருமையானது. இங்கே ஒரு தாய் தன்னுடைய சிறிய பையனிடம் வருகிறாள். இன்னும் வேறு சிலர் உள்ளனரா? 303. ஒரு தந்தையும் மகனும், இன்னும் யாராவது உள்ளீர்களா? அம்ராமைப் போல ஒரு ஜெபிக்கும் மனிதனாக நீங்கள் விரும்புகிறீர்களா? நீங்களும் இங்கே வாருங்கள், முழங்காலிடுங்கள். 304. தாயே, யோகெபேத்தைப் போல நீயும் இருக்க விரும்புகிறாயா, ஏன் நீயும் இங்கே வந்து முழங்காற்படியிடலாமே. 305. நிச்சயமாக, அது எல்லோருக்கும் தான். ஏன்? உமக்கும் கூட ஒரு ஆத்துமா இருக்கிறது. நீங்கள் அதை வைத்துக் கொண்டால் என்ன சம்பவிக்கும்? (சபையார் ''அதை இழந்து போவோம்'' என்கின்றனர்- ஆசி] இழந்து விடுவீர்கள். உங்களுக்கு அதை அளித்த அவரிடமே அதை நீங்கள் திருப்பி அளித்தால் என்னவாகும்? (''அதை காத்துக் கொள்வோம்'') நித்திய ஜீவனுக்கென்று அதை காத்துக் கொள்வோம். அது சரி. இப்பொழுது, எல்லாருமாக சேர்ந்து, நம்முடன் இருக்கக்கூடிய எல்லாவற்றுடன் சேர்த்து, இந்த சிறியவர்களுடன் ஜெபம் செய்வோம். நம்முடைய... எல்லாவற்றுடன் இப்பொழுது. 306. தாயின் தினம், எவ்வளவு மகத்தான ஒரு நாள். ஆகவே ஒருவேளை இன்றிரவில் என்னுடைய பொருளை மாற்றி, அந்த தாய் என்ன செய்தாள், எப்படி அதைச் செய்தாள் என்று நான் கூறுவேன். இஸ்ரவேலை வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட பிரதேசத்திற்கு வழி நடத்திச் செல்லத்தக்கதாக அவள் தான் அவனுக்கு போதித்து படிப்பித்தாள். ஓ, அவள் ஒரு உண்மையான தாய் ஆவாள். அவள் ஒரு உண்மை யானதல்லவா? [பிள்ளைகள் ''ஆம்'' என்கின்றனர் ஆசி). இப்பொழுது, உனக்குங் கூட ஒரு உண்மையான தாய் இருக்கிறாள், அவள் உனக்காக ஜெபித்துக் கொண்டிருக்கிறாள். அவன் ஒரு உண்மையான தந்தை. உன் தந்தை உனக்காக ஜெபித்துக் கொண்டிருக்கிறார். இப்பொழுது இயேசு நமக்கு உதவும் படியாக, நாம் எல்லாருமாக சேர்ந்து ஜெபிக்கப் போகிறோம். சகோதரர் நெவில், நீர் வந்து எங்களுடன் முழங்காலிடுவீரா? 307. ஆகவே நாம் நமது தலைகளை வணங்குவோம், எல்லா இடங்களிலும், இப்பொழுது சகோதரி கெர்டி... (பியானோ வாசிப்பவர்'' அவர்களை உள்ளே கொண்டு வாருங்கள் - ஆசி) 308. அன்புள்ள பரலோகப் பிதாவே, முன்பு கடந்து போன பழைய நாட்களைக் குறித்து இந்த எளிமையான கதையில் ஒரு உண்மையான தகப்பனும் தாயும், அல்லது ஒரு உண்மையான விசுவாசி உம்மிடத்தில் வந்து, உம்மை ஆராதித்து உம்மை விசுவாசித்தனர். அப்பொழுது அச்சமயத்தில் தேசத்தில் பெருந் துன்பம் இருந்தது. ஆகவே இங்கே இந்தக் காலையில் ஒரு நவீன சிறிய மோசே முழங்காலில் இருக்கிறான் என்பது நமக்கு எப்படி தெரியும் தீர்க்கதரிசினியாகிய மிரியாமைப் போல ஒரு நவீன சிறிய மிரியாமும் இங்கிருக்கலாம் என்பதும் நமக்கு தெரிந்திருக்குமோ 309. ஓ அன்புள்ள பிதாவே, இந்தச் சிறிய பிள்ளைகள் உம்மை நேசிக்கின்றனர், தங்களுக்கு ஒரு ஆத்துமா உள்ளதென்றும் அவர்கள் இரட்சிக்கப்பட வேண்டுமென்றும் உணர்ந்து வந்து சிலுவையண்டை முழங்காற்படியிட்டுள்ளனர். அதை இப்பொழுது உமக்கு அளிக்கின்றனர். ஏனெனில், "அதை இழந்து போகிறவன், அதைக் கண்டடைவான்; அதை வைத்துக் கொண்டால் அதை இழந்து போவான்" என்று சற்று முன்னர் உம்முடைய வார்த்தையில் நாங்கள் படித்தோம். ஆகவே பிதாவே, தங்கள் ஆத்துமாவை தங்களிடமே வைத்துக் கொள்ள இவர்கள் விரும்பவில்லை. தாங்களாகவே ஜீவிக்க அவர்களுக்கு விருப்பமில்லை. தங்கள் ஆத்துமாவை உம்மிடம் அளித்து, அவ்வாறு செய்வதன் மூலம் அவர்கள் நித்திய ஜீவனை காணுகின்றனர். இதை அளியும் கர்த்தாவே. 310. இந்த பீடத்தை சுற்றிலும் இருக்கிற எல்லா சிறிய பையன்களையும் சிறுமிகளையும் ஆசீர்வதியும். இந்தக் காலையில் இங்கே இருக்கும் தாய்மார்களையும் தகப்பன்களையும் ஆசீர்வதியும். ஓ, உம்முடைய அன்புள்ள கிருபையும், இரக்கமும் அவர்கள் மேல் இருப்பதாக. எங்களுடைய எல்லா பாவங்களிலிருந்தும் தவறுகளிலிருந்தும் எங்களை மன்னியும் கர்த்தாவே. வியாதியை எங்கள் மத்தியிலிருந்து விலக்கியருளும். 311. தேவனே, காபிரியேலுக்கும் மற்றும் தயார் நிலையில் இருந்த பத்தாயிரம் தூதர்களுக்கும் கட்டளையிட்டவரே, தூதர்களை அனுப்பும்! அல்லேலூயா! இந்தச் சிறிய ஏழைப் பிள்ளைகள் இந்த பீடத்தின் அண்டையில் முழங்காற் படியிட்டுள்ளதைக் காண எத்தனையோ தூதர்கள் வருவார்கள். இந்த பீடத்தைச் சுற்றிலும் இந்தச் சபை முழுவதிலும் தேவ தூதர்கள் நின்று கொண்டிருக்கின்றனர். பதிவு செய்யும் தூதனும் இங்கே நின்று கொண்டு அவர்களின் பெயர்களை புஸ்தகத்தில் பதிவு செய்து கொண்டிருக்கிறான். அவர்கள் தங்கள் ஆத்துமாக்களை இழந்து போகப் பண்ணுகிறார்கள், ஆதலால் அதை கிறிஸ்துவிற்குள் கண்டடைவார்கள். இதையளிவும் கர்த்தாவே. 312. இந்த நாள் முதற் கொண்டு அவர்களுடைய சிறிய ஜீவிய மானது தாழ்மையுள்ளதாகவும் எளிமையுள்ளதாகவும் இருக்கட்டும். நீர் அவர்களை வீட்டிற்கு அழைத்துக் கொள்ளும் வரை இவர்கள் தங்கள் பெற்றோர்களுக்கும், தங்கள் பரலோகப் பிதா விற்கும் கீழ்ப்படிதலுள்ள பிள்ளைகளாக இவர்கள் இருக்கட்டும் சுழல் சமயத்தில் தங்களுடைய சிறிய பெட்டிகளில் இருக்கையில் இவர்களை வழி நடத்தும். ஒவ்வொரு முறையும் புதர்களில் அவை அகப்பட்டுக் கொள்ளும் போது, தேவனுடைய தூதர்கள், தேவனுடைய அன்பென்னும் நீரோட்டத்தில் அவைகளை தள்ளி விடுவார்களாக. கர்த்தாவே, இதை அளியும். பிறகு பாதையின் முடிவில், அருமையான வீட்டை இவர்கள் கண்டு, அந்த நாளிலே அங்கே தேவன் வாசலில் நின்று வரவேற்கும் அந்த மகிமையில் தங்களுடைய தாயையும், தாங்கள் நேசித்தவர்களையும் காணட்டும். பிதாவே, இதை அளியும். 313. எங்கள் பாவங்களையும் எங்கள் குற்றங் குறைகளையும் எங்களுக்கு மன்னித்தருளும். இந்த நாள் முதற்கொண்டு முழுவதும் உம்முடையவர்களாக இருக்கத்தக்கதாக எங்களுக்கு உதவி செய்தருளும். இந்தச் சிறிய பிள்ளைகளைக் நாங்கள் இப்பொழுது உம்முடைய கரங்களில் சமர்ப்பிக்கின்றோம். தாய்மார்களுக்கென ஏற்படுத்துப்பட்டுள்ள இந்த நினைவு நாளிலே, இந்த தாயின் தினத்திலே சரியான தாய்மார்களாக இவர்கள் இருக்கத்தக்கதாக, இவர்களையும் சேர்த்து சமர்ப்பிக்கிறோம் கர்த்தாவே. ஆகவே இந்த நாள் முதற்கொண்டு சிறந்த தாய்மார்களாக இவர்கள் இருக்கட்டும். பிள்ளைகள் சிறந்த பிள்ளைகளாக இருக்கட்டும். கர்த்தாவே, உமக்குரிய ஊழியத்திலே நாங்கள் எல்லோரும் சிறந்தவர்களாக இருக்கட்டும். பிதாவே இதை அளியும், இயேசுவின் நாமத்தில் இதைக் கேட்கின்றோம். ஆமென். இப்பொழுது நாமெல்லாரும் ஒரு சிறிய பல்லவியைப் பாடுவோம். 314. இயேசு உங்களை இரட்சித்தார் என்று நீங்கள் விசுவாசிக் கிறீர்களா? நீங்கள் எழுந்து நிற்கையில் இப்பொழுது இயேசு உங்களை கவனித்துக் கொண்டிருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா? இதைப் போன்று உங்கள் கரங்களை இப் பொழுது அவரிடத்திற்கு உயர்த்துங்கள். தாயும் தந்தையினிடத்திற்கு நீங்கள் திரும்ப வேண்டு மென்று நான் விரும்புகிறேன். நீங்கள் எல்லோரும். இவ்வழியாகத் திரும்புங்கள். இப்பொழுது, தாய், தந்தையர்களே இங்கே கவனியுங்கள். சிறிய பையன்கள், சிறுமிகளாகிய நீங்கள் இப்பொழுது எல்லோரும் எழுந்து நில்லுங்கள். எத்தனைப் பேர் இயேசுவை உங்கள் இரட்சகராக ஏற்றுக் கொண்டு மோசேக்கு அவர் செய்தது போல உங்களையும் அவர் விசாரித்து கவனித்துக் கொள்ள இப்பொழுதிலிருந்து இயேசுவில் நம்பிக்கை வைக்கப் போகிறீர்கள், உங்கள் கரங்கள் உயர்வதை நான் பார்க்கட்டும். நீங்கள் ஒவ்வொருவரும். அது அருமையானதாகும்! இப்பொழுது என்ன நிகழ்ந்தது? உங்கள் ஆத்துமாவை நீங்களே வைத்துக் கொண்டால் என்னவாகும்? (சபையார், ''அதை இழந்து போவோம்'' என்கின்றனர் - ஆசி) அதை இழந்து போவோம். ஆனால் அதை இயேசுவுக்கு அளித்தீர்களானால், என்னவாகும்? (''அதை காத்துக் கொள்வோம். நீங்கள் அதை காத்துக் கொள்வீர்கள். இப்பொழுது இந்தக் காலை இயேசு உங்களை கொள்வா ரென்றால் என்னவாகும்? நீங்கள் இயேசுவின் பிள்ளைகள், அப்படித் தானே? நீங்கள் இயேசுவினுடைய சிறிய பையன் மற்றும் பெண் ஆவீர்கள். 315. இங்கே கண்ணீருடன் நின்று கொண்டிருக்கும் இந்தச் சிறிய பையன்களை கவனியுங்கள். தேவனுக்கு இது தெரியுமென்று விசுவாசிக்கிறாயா ஆமென். நாளைய மனிதர்கள்! ஆம். அது சரி. ஆமென். பாவத்தின் நிலங்களிலிருந்து அவர்களைக் உள்ளே கொண்டு வாருங்கள் உள்ளே கொண்டு வாருங்கள், உள்ளே கொண்டு வாருங்கள் சிறியவர்களை இயேசுவண்டை கொண்டு வாருங்கள். இப்பொழுது, "ஓ, நான் எவ்வளவாக இயேசுவை நேசிக்கிறேன்! ஓ... (எல்லாருமாக)... நான் எவ்வளவாக இயேசுவை நேசிக்கிறேன். (நீங்கள் இப்பொழுது உங்கள் கரங்களை யுயர்த்துங்கள்). ஓ, நான் எவ்வளவாக இயேசுவை நேசிக்கிறேன், ஓ, நான் எவ்வளவாக இயேசுவை நேசிக்கிறேன் ஏனெனில் முந்தி அவர் என்னை நேசித்ததாலே. 316. அது அற்புதமான தல்லவா? இப்பொழுது, "இவ்வுலகத்தின் சிறிய பிள்ளைகளை இயேசு நேசிக்கிறார் சகோதரியே, அதற் குரிய இசையைத் தாருங்கள். சிறிய பெண்களாகிய நீங்கள், இப்பொழுது நீங்கள் எல்லாரும் இந்த பக்கமாக என்னை நோக்கித் திரும்புங்கள், இவ்வுலகத்தின் சிறிய பிள்ளைகளை இயேசு நேசிக்கிறார்'', என்று நான் பாட விரும்புகிறேன். எத்தனைப் பேர் இதை அறிவர்? அது சரி. இப்பொழுது நாம் பாடுவோம். சிறிய பிள்ளைகளை இயேசு நேசிக்கிறார் உலகத்தின் எல்லா பிள்ளைகளையும்; சிகப்பு, மஞ்சள், கறுப்பு, வெள்ளை, அவருடைய பார்வையில் இவர்கள் விலையேறப் பெற்றவர்கள், இவ்வுலகத்தின் சிறிய பிள்ளைகளை இயேசு நேசிக்கிறார். 317. இப்பொழுது நீங்கள் எல்லோரும் சேனையில் இருக்கிறீர்கள். இது உங்களுக்கு தெரியுமா? நீங்கள் தேவனுடைய சேனையில் இருக்கிறீர்கள் என்பதை அறிவீர்களா? இப்பொழுது நீங்கள் என்னை நோக்கிப் பாருங்கள். இதை என்னுடன் சேர்ந்து பாடுங்கள். ஏனெனில் நீங்கள் இப்பொழுது யுத்த வீரர்கள். உங்களுக்கு தெரியுமா? சிலுவையின் போர் வீரர்கள்! இப்பொழுது, "நான்...'', அது உங்களுக்கு தெரியுமல்லவா? அது சரி. பழைய ஞாயிறு பள்ளி பாடல், நீண்ட காலத்திற்கு முன்பு நான் அதை கற்றேன். ''நான்...'' இப்பொழுது நீங்கள் என்னைப் பாருங்கள். (''நான் கர்த்தருடைய சேனையில் இருக்கிறேன்'') என்ற வார்த்தைகளைப் பாடுகையில் அசைவு ஜாடைகளை சகோதரன் பிரான்ஹாம் செய்து காண்பிக்கின்றார் - ஆசி) நான் காலாட்படையில் அணிவகுத்துச் செல்லாமல் போகலாம், குதிரைப் படையில் சவாரி செய்யாமற் போகலாம், பீரங்கி சுடாமலிருக்கலாம், எதிரியின் மேல் பறக்காமல் இருக்கலாம், ஆனால் நான் கர்த்தருடைய சேனையில் இருக்கிறேன். நான் கர்த்தருடைய சேனையில் இருக்கிறேன். ஓ, நான் கர்த்தருடைய சேனையில் இருக்கிறேன். இப்பொழுது, எல்லாருமாக சேர்ந்து பாடுவோமாக! நான் காலாட்படையில் அணிவகுத்துச் செல்லாமல் போகலாம், குதிரைப் படையில் சவாரி செய்யாமற் போகலாம், பீரங்கி சுடாமலிருக்கலாம், எதிரியின் மேல் பறக்காமல் இருக்கலாம், ஆனால் நான் கர்த்தருடைய சேனையில் இருக்கிறேன். 318. அதை உங்களாலே பாடக்கூடும் என்று நீங்கள் நம்புகிறீர்களா? இங்கே வா, லாஸி, இப்பொழுது இங்கே வா. நான் என்ன செய்யப் போகிறேனோ, அதே காரியங்களை நீங்களும் போய் செய்ய வேண்டும். இப்பொழுது இங்கே பீடத்தின் பின்னால் வாருங்கள். இங்கே நடந்து வாருங்கள். நீங்கள் ஒவ்வொருவரும், கவனியுங்கள், இங்கே நான் நிற்கின்ற இடத்திற்கு வாருங்கள். இங்கே பீடத்தின் பக்கமாக யாரும் வேண்டாம், இங்கே நடந்து வாருங்கள். அதே தான் சரியாக இங்கே பின்னால் வாருங்கள். இப்பொழுது திரும்பி இவ்விதமாக பாருங்கள்; அதுவே, இயேசுவை அறிந்து கொண்ட பிறகு சிறிய பையன்கள், பெண் பிள்ளைகள் என்ன செய்வார்கள் என்பதை நான் உங்களுக்குக் காண்பிக்க விரும்புகிறேன். உங்களில் சிலர் இப்பொழுது இங்கே வாருங்கள். இப்பொழுது, அது தான் இப்பொழுது, அங்கே கவனியுங்கள். 319. இப்பொழுது நான் ''நான் இராணுவத்தில் அணிவகுத்துச் செல்லாமற் போகலாம்'' என்று கூறும் போது நீங்கள்..."காலாட் படையில் அணிவகுத்து'', நீங்களும் அணி வகுப்பு செய்ய வேண்டும். நான் குதிரைப் படையில் சவாரி செய்யாமற் போகலாம்'', என்று கூறும் போது நான் செய்வது போல நீங்களும் செய்ய வேண்டும். இப்பொழுது, என்னிடத்திலிருந்து சற்று தள்ளி நில்லுங்கள். எனக்கு இடம் தேவை. உங்களுக்கு வசதியாக இருக்கிறதா? இப்பொழுது நாம் இதைப் பாடுவோம். (சகோதரன் பிரான்ஹாமும் பிள்ளைகளும் பாடல் பாடிக் கொண்டு அசைவுகளைச் செய்கின்றனர் -ஆசி] நான் காலாட்படையில் அணி வகுத்துச் செல்லாமல் போகலாம் குதிரைப் படையில் சவாரி செய்யாமற் போகலாம், பீரங்கி சுடாமலிருக்கலாம் எதிரியின் மேல் பறக்காமல் இருக்கலாம் ஆனால் நான் கர்த்தருடைய சேனையில் இருக்கிறேன். ஓ, நான் கர்த்தருடைய சேனையில் இருக்கிறேன், நான் கர்த்தருடைய சேனையில் இருக்கிறேன் (தயார் நிலையில்), நான் காலாட்படையில் அணி வகுத்துச் செல்லாமற் போகலாம், குதிரைப் படையில் சவாரி செய்யாமற் போகலாம், பீரங்கி சுடாமலிருக்கலாம், எதிரியின் மேல் பறக்காமல் இருக்கலாம், ஆனால் நான் கர்த்தருடைய சேனையில் இருக்கிறேன். 320. ஆமென்! அப்படியே நில்லுங்கள். ''ஆமென்'' என்று கூற எத்தனைப் பேர் விரும்புகிறீர்கள். (சபையார் ''ஆமென்'' என்கின்றனர்- ஆசி]. 321. இப்பொழுது பரலோகப் பிதாவே, இந்தச் சிறிய பிள்ளைகளை இன்று ஆசீர்வதியும். கர்த்தாவே, அவர்கள் உம்முடையவர்கள். அவர்கள் தங்களுடைய வாழ்க்கையை உம்மிடம் அளித்துள்ளனர். மோசேயைக் குறித்தும், எப்படி நீர் அவனைப் பாதுகாத்தீர் என்பதைக் குறித்த அந்த சிறிய கதையை இவர்கள் கேட்டனர். தங்களை வளர்த்த ஒரு அருமையான தாயையும் தந்தையையும் குறித்து அவர்கள் கேட்டனர். ஆகவே பிதாவே, நீர் தாமே அவர்களை காலம் என்னும் நீரோட்டத்தினூடாக வழிநடத்திச் சென்று அவர்களை கவனித்துக் கொள்வீராக, தேவ தூதர்கள் தாமே அவர்களைப் பாதுகாக்க வேண்டுமாய் நான் ஜெபிக்கிறேன். இந்த கடைசி நாட்களிலே அவர்கள் தாமே உம்முடைய ராஜ்ஜியத்திலே அழைத்துக் கொள்ளப் படட்டும், கர்த்தாவே. கிறிஸ்துவின் நாமத்தில் இதை நாங்கள் கேட்கிறோம். ஆமென். 322. நீங்கள் உங்கள் இருக்கைகளுக்கு சென்று எப்படி அருமையான உணர்வைக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை உங்கள் அப்பாவிற்கும் அம்மாவிற்கும் கூறுங்கள். ஆமென். 323. ''தங்கள் பிரயாண நாட்கள் முழுவதும் அவர்கள் வழி நடத்தப்பட்டனர்'' கெர்டி, இது உங்களுக்குத் தெரியுமா? ....நாட்கள் முழுவதும் அவர்கள் வழி நடத்தப்பட்டனர் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு அவர்கள் வழிநடத்தப் பட்டனர். நிச்சயமாக வழி நடத்ததுலாகிய கர்த்தருடைய கரத்தினால், ''கானானின் கரைக்கு அவர்கள் கொண்டு வரப்பட்டனர். எல்லாருமாக! அக்கினி ஸ்தம்பத்தின் மூலமாக இரவிலும், மேக ஸ்தம்பத்தின் மூலமாக பகலிலே, முன்பாக தொங்கிக் கொண்டிருந்தது நம்முடைய வழியில் அவை வந்து கொண்டிருக்கிறது. நமக்கு தலைவனாக, வழி காட்டியாக, வனாந்திரம் கடந்து செல்கின்ற வரையிலும், தம்முடைய அருமையான சொந்த நேரத்தின் படி நம்முடைய தேவனாகிய கர்த்தர், முடிவில் வெளிச்சத்திற்கு நம்மை நடத்துவாராக. 324. இந்தக் காலை வேளையிலே வியாதிப்பட்டுள்ள எத்தனை பேர் ஜெபிக்கப்பட விரும்புகிறீர்கள்? உங்கள் கரங்களை நான் காணட்டும். சிறிது நேரமானதால் நம்முடைய சுகமளிக்கும் ஆராதனையை இரவிற்கு தள்ளி வைப்போம். காலதாமதமானதால் இப்பொழுது ஒரு சிறிய ஜெபத்தை செய்வோம். 325. சிறிய கதையை நீங்கள் ரசித்தீர்களா? (சபையார் "ஆமென்" என்கின்றனர் - ஆசி) சிறிய பிள்ளைகளுக்கு இது நன்றாக இருந்தது என்று நீங்கள் நினைக்கிறீர்களா? ["ஆமென்') ஆம். அநேக தடவை நாம் இவர்களை கவனிக்காமல் கடந்து வந்து விடுகிறோம். அதை நாம் செய்யக் கூடாது. பாருங்கள், ஞாயிறு பள்ளி வகுப்பை நடத்த எனக்கு தருணம் கிடைப்பதில்லை, ஆகவே இவர்களிடம் பேச இக்காலை வேளை ஒரு தருணமாக இருந்தது. உங்களைகளைப் படையச் செய்ய நான் விரும்பவில்லை. ஆனால் இந்த சிறிய கதையை உங்களுக்கு கூற நான் விரும்பினேன். 326. சிறிய பிள்ளைகளே, இதை நினைவில் கொள்ளுங்கள், நீங்கள் எங்கேயோ படித்த ஒரு பழைய சிறுகதையல்ல இது. இது சத்தியம் ஆகும். இது தான் அந்த சத்தியம்! தேவன் அதைச் செய்தார். ஆகவே அவர் இப்பொழுது உங்களுடனே இருக்கின்றார். அது சரி 327. நாம் பாடுகையில் இப்போது தலைகளை வணங்குவோம் கடைசி முடிவு செய்கின்ற பாடலை எல்லா சத்துருக்களுக்கெதிராக இயேசுவின் நாமத்தை கேடகமாக உன்னோடு எடுத்துச்செல் மெதுவாக நாம் பாடுவோம். அது சரி "இயேசுவின் நாமத்தை உன்னோடு எடுத்துச் செல். " 2